பிரத்தியங்கிரா தேவி கோயில், ஒசூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோயிலின் இராச கோபுரம்

மகா பிரத்தியங்கர காளிகா ஆலயம் (Maa Pratyangira Kalika Alayam) என்பது தமிழ்நாட்டின் ஒசூரில் இரண்டாவது சிப்காட் பகுதியில் மோரனப்பள்ளி என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இக்கோயிலின் இராசகோபுரத்தில் பிரம்மாண்டமான பிரத்தியங்கரா தேவியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு வார இறுதியிலும், வார நாட்களிலும் பலர் வருகின்றனர். இக்கோயிலில் பிரத்தியங்கிரா தேவி , சரபேசுவரர், நரசிம்மர், மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன.

இக்கோயில் விசாலமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுள் நுழைய சிம்ம வாய் வாசல் உள்ளது. பக்தர்கள் பிரத்தியங்கிரா தேவிக்கு மாலைகள் வைத்தும், தேவியின் பாதங்களில் நெய் விளக்கு ஏற்றியும் வணங்குகிறார்கள்.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]