உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியா விகார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரசாத் பிரா விகார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரியா விகார் கோயில்
பெயர்
பெயர்:பிரியா விகார் கோயில்
Temple of Preah Vihear
அமைவிடம்
அமைவு:பிரியா விகார்,  கம்போடியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:Banteay Srei style and others
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கிபி 11ம், 12ம் நூற்றாண்டுகள்
அமைத்தவர்:சூரியவர்மன் I, சூரியவர்மன் II
கோயிலின் அமைப்பு

பிரியா விகார் கோயில் அல்லது பிரசாத் பிரியா விகார் (Temple of Preah Vihear) என்பது கம்போடியாவில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். இது கம்போடியாவின் டாங்கிரெக் மலையில் 525 மீட்டர் உயரத்தில் தாய்லாந்தின் வடகிழக்கில் சிசாக்கெட் மாகாண எல்லையில் அமைந்துள்ளது. இக்கோயில் கிபி 11ம், 12ம் நூற்றாண்டுகளில் முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும். 1962 இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு ஹேக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் தாய்லாந்துக்குச் சொந்தமானதாகும். கெமர் பேரரசினால் கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது. ஜூலை 7, 2008 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இக்கோயில் சேர்க்கப்பட்டது[1].

வெளி இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
கோயிலின் மூன்றாம் கோபுரத்தில் உள்ள சிற்பம்: மகாபாரதத்தில் ஒரு காட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_விகார்_கோயில்&oldid=3679261" இலிருந்து மீள்விக்கப்பட்டது