உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசாத் குமார் ஹரிசந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசாத் குமார் ஹரிசந்தன்
சட்டமன்ற உறுப்பினர்: ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
2009–2014
முன்னையவர்இராமரஞ்சன் பாலியார்சிங்
பின்னவர்உமாகாந்தா சமந்த்ராய்
தொகுதிசட்யபடி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1995–2004
முன்னையவர்சந்த்ரமாதப் மிஸ்ரா
பின்னவர்இராமரஞ்சன் பாலியார்சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரசாத் குமார் ஹரிசந்தன்

12 மே 1964 (1964-05-12) (அகவை 60)
நானாகெரா, பூரி மாவட்டம், ஒடிசா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சினேகாசிறீ ஹரிசந்தன்
முன்னாள் கல்லூரிஉத்கல் பல்கலைக்கழகம்
இணையத்தளம்Official Website

பிரசாத் குமார் ஹரிசந்தன் (Prasad Kumar Harichandan) (பிரசாத் ஹரிசந்தன் எனவும் அழைக்கப்படுகிறார்) (பிறப்பு: 12 மே 1964) என்பவர் ஒரு ஒடிய அரசியல்வாதியும், முன்னாள் ஒடிசா மாநில காங்கிரசுக் கமிட்டியின் தலைவரும் ஆவார். [1][2]

இவர் ஒடிசாவின்பூரி மாவட்டத்தின் நானாகெரா என்னும் இடத்தில் 1964 ஆம் ஆண்டு மே 12ஆம் நாள் பிறந்தார். இவர் ஒடிசாவின் 11, 12 மற்றும் 14 ஆம் சட்டமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஆவார்.[3] 1999 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தின் மிக இளமையான அமைச்சர் ஆவார். இவர் உள்துறை, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத் துறைப் பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.[4] இவர் 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் ஒடிசா சட்டமன்றத்தில் சட்டமன்ற காங்கிரசு கட்சியின் தலைமை கொறடாவாகவும் பணியாற்றியுள்ளார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Prasad Harichandan appointed Odisha PCC president". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
  2. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/congress-removes-prasad-appoints-niranjan-patnaik-as-new-odisha-president/articleshow/63831241.cms
  3. "Satyabadi (Orissa) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
  4. "Prasad Harichandan appointed as new Odisha PCC Chief". OrissaDiary. Archived from the original on 16 December 2014. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
  5. "OPCC Chief Mantle Falls on Prasad Harichandan". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 16 December 2014.