பியரோகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியரோகி
பியரோகி
வகைகொழுக்கட்டை
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு, காரம்
தொடங்கிய இடம்
பகுதிமத்திய, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா
முக்கிய சேர்பொருட்கள்

பியரோகி என்பது பாலாடைக்கட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப்பண்டமாகும். இந்த உணவுப்பண்டமானது மாவை கொண்டு உருவாக்கப்பட்ட மெல்லிய தாள்களில் இனிப்பு அல்லது காரம் வைத்து மடித்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இது சில நேரங்களில் இனிப்பு பொருட்கள் சேர்க்கப்பட்டு கொதிக்கும் நீரில் வேகவைக்கப்படுகின்றது.

பியரோகி பொதுவாக மத்திய, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய உணவு வகைகளுடன் தொடர்புடைய உணவுப்பண்டமாகும்.[1] இது பெரும்பாலும் ஆசியாவில் தோன்றி, பின்னர் இடைக்காலத்தில் ஐரோப்பாவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது. இதன் பரவலான ஆங்கிலப் பெயரான பியரோகி என்பது "பிய்ரோகி" என்ற போலிய மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டது.ஐரோப்பாவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் இவை வேரென்கி என்று அழைக்கப்படுகின்றன. பியரோகி நவீனகால அமெரிக்க உணவகங்களில் பிரபலமாக உள்ளது, அங்கு அவை வெவ்வேறு உள்ளூர் பெயர்களால் அறியப்படுகின்றன.

பொதுவாக இதில் பாலாடைக்கட்டி சேர்க்கப்படுகிறது. மேலும் உருளைக்கிழங்கு, இறைச்சி, காளான்கள், பழங்கள் போன்ற பொருட்கள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதை பெரும்பாலும் புளித்த பாலாடை மற்றும் வறுத்த வெங்காயம் சேர்த்து செய்யப்பட்ட ஒரு சட்னியுடன் உண்கின்றனர்.

சொற்பிறப்பியல்[தொகு]

இதன் பரவலான ஆங்கிலப் பெயரான பியரோகி என்பது "பிய்ரோகி" என்ற போலிய மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டது.[2]இது ஒரு நிரப்பப்பட்ட கொழுக்கட்டையை போலிருக்கும் உணவுவகைகளை குறிக்கும் ஒரு பொதுவான சொல்லாகும்.[3] இதை குறிக்கும் பியராக்கி, பிய்ரோகி அல்லது பைரோக் என்ற மற்ற சொற்கள் துருக்கிய மொழியிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று சமீபத்திய கோட்பாடு ஊகிக்கிறது.[4]

உக்ரேனியர்கள் மற்றும் உருசியர்கள் மத்தியில், இவை வரென்கி (varéníki) என்று அழைக்கப்படுகின்றது.[5][6][7] இது உக்ரேனிய மொழிச் சொல்லான "வார்" என்பதிலிருந்து பெறப்பட்டது. வார் என்பது "கொதிநிலை திரவம்" எனப் பொருள்படும்.[8] ஐரோப்பாவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் இவை வேரென்கி என்று அழைக்கப்படுகின்றன. பியரோகி நவீனகால அமெரிக்க உணவகங்களில் பிரபலமாக உள்ளது, அங்கு அவை வெவ்வேறு உள்ளூர் பெயர்களால் அறியப்படுகின்றன.[9][10][11]

தோற்றம்[தொகு]

பியரோகியின் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் இல்லை.[1] இது பெரும்பாலும் ஆசியாவில் தோன்றி, பின்னர் இடைக்காலத்தில் ஐரோப்பாவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது. இது பெரும்பாலும் சீனா தோன்றி பின்னர் இடைக்கால ஐரோப்பாவில் பிரபலமடைந்தது.[12] சிலர் பியெரோகி பட்டுப் பாதை வழியாக மார்கோ போலோவின் பயணங்களால் பரவியது என்று கூறுகின்றனர்.[13] 13 ஆம் நூற்றாண்டில், பியரோகியை போலந்தின் புனித ஐசிந்த் தூர கிழக்கிலிருந்து (ஆசியா) கொண்டு வந்தார் என்று பிற ஆதாரங்கள் கருதுகின்றன. இவை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய உணவு வகைகளின் ஓர் அங்கமாக மாறின. மேலும் அங்கு அதன் வெவ்வேறு வகைகள் (தயாரிப்பு முறைகள், பொருட்கள், நிரப்புதல்) உருவாக்கப்பட்டன.

பொருட்கள் மற்றும் தயாரிப்பு[தொகு]

பியரோகி என்பது பாலாடைக்கட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப்பண்டமாகும். இந்த உணவுப்பண்டமானது மாவை கொண்டு மெல்லிதாக உருவாக்கப்பட்ட தாள்களில் இனிப்பு அல்லது காரம் வைத்து மடித்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இது சில நேரங்களில் இனிப்பு பொருட்கள் சேர்க்கப்பட்டு கொதிக்கும் நீரில் வேகவைக்கப்படுகின்றது. பொதுவாக இதில் பாலாடைக்கட்டி சேர்க்கப்படுகிறது. மேலும் உருளைக்கிழங்கு, இறைச்சி, காளான்கள், பழங்கள் போன்ற பொருட்கள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதை பெரும்பாலும் புளித்த பாலாடை மற்றும் வறுத்த வெங்காயம் சேர்த்து செய்யப்பட்ட ஒரு சட்னியுடன் உண்கின்றனர்.[14]

வெதுவெதுப்பான நீருடன் மாவை கலந்து சில சமயங்களில் அதனுடன் முட்டை சேர்த்து பின்னர் அது தட்டையாக உருட்டப்படுகின்றது.  பின்னர் ஒரு கத்தியால் வட்ட அல்லது சதுர வடிவங்களாக வெட்டப்படுகிறது. இந்த வெட்டப்பட்ட வடிவங்களுக்குள் பிசைந்த உருளைக்கிழங்கு அல்லது வேண்டிய பொருட்களை வைத்து மடித்து ஓர் கொழுக்கட்டையை போல் உருவாக்கப்படுகிறது. பின்னர் இதை கொதிக்கும் நீரில் வேக வைத்து சட்னியுடன் பரிமாறப்படுகிறது.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Dumplings with buckwheat". minrol.gov.pl. Ministry of Agriculture and Rural Development. பார்க்கப்பட்ட நாள் 30 December 2021.
  2. Dictionary of the Ukrainian language. Kyiv: Naukova Dumka. 1970–1980. http://www.inmo.org.ua/sum.html?wrd=Пиріг. 
  3. 'Glenn Randall Mack, Asele Surina (2005). Food Culture in Russia and Central Asia. பக். 75. https://archive.org/details/foodcultureinrus0000mack. 
  4. "You Say Purek, I Say Beerock". Los Angeles Times. 25 June 1997. பார்க்கப்பட்ட நாள் 15 April 2023.
  5. "varenyky". Canadian Oxford Dictionary. (2005). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191735219. 
  6. "The Underrated Pleasures of Eastern European Dumplings". The New Yorker.
  7. Ellick, Adam B. (30 September 2007). "Dumplings for the Lord". The New York Times. https://www.nytimes.com/2007/09/30/nyregion/thecity/30ukra.html. 
  8. "The Underrated Pleasures of Eastern European Dumplings". The New Yorker.
  9. Voth, Norma Jost (1994). Mennonite Foods and Folkways from South Russia. Good Books International. பக். 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1561481378. https://books.google.com/books?id=HXUbAQAAMAAJ&q=Mennonite+Foods+%26+Folkways+from+South+Russia. பார்த்த நாள்: 5 September 2020. 
  10. Brednich, Rolf Wilhelm (1977). Mennonite Folklife and Folklore: A Preliminary Report. National Museums of Canada. https://books.google.com/books?id=N1rXAAAAMAAJ&q=wareniki. பார்த்த நாள்: 5 September 2020. 
  11. Popoff, D. E. (Jim) Popoff. "A Glossary of Traditional Doukhobor Cuisine". USCC Doukhobors. Union of Spiritual Communities of Christ. பார்க்கப்பட்ட நாள் 31 July 2023. With permission from 'Hospitality, Cooking the Doukhobor Way' (1995)
  12. "The dumpling that comforts Poland". BBC. http://www.bbc.com/travel/gallery/20181218-the-dumpling-that-comforts-poland. 
  13. Kasprzyk-Chevriaux, Magdalena (22 May 2014). "Polish Food 101 ‒ Pierogi | Artykuł | Culture.pl". பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  14. Kopka, Deborah (2011). Welcome to Poland: Passport to Eastern Europe & Russia. Milliken Publishing Company. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780787727734. https://books.google.com/books?id=QIjxCgAAQBAJ&pg=PA76. பார்த்த நாள்: 29 July 2020. 
  15. Severson, Kim (26 June 2018). "A Guide to Soft Fresh Cheeses: Cottage Cheese, Mascarpone and More (Published 2018)" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2018/06/26/dining/types-of-soft-cheese.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியரோகி&oldid=3937365" இலிருந்து மீள்விக்கப்பட்டது