பின்னெர் வினை
பின்னெர் வினை (Pinner reaction) என்பது அமில வினையூக்கியின் ( உதாரணம் ; ஐதரோகுளோரிக் அமிலம் ) உதவியுடன் ஒரு நைட்ரைல் ஒர் ஆல்ககாலுடன் சேரும் கரிமவினையாகும். அடால்ப் பின்னெர் இவ்வினையைக் கண்டறிந்ததால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இமினோ எசுத்தரின் ஐதரோகுளோரிக் அமிலவுப்பு இவ்வினையில் வினைவிளை பொருளாகக் கிடைக்கிறது. ஆல்கைல் இமிடேட்டு என்று அழைக்கப்படும் இவ்வுப்பு சிலவேளைகளில் பின்னெர் உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வினை அணுக்கருகவர் கூட்டுவினைகள் வரிசைமுறையில் காணப்படும் ஒரு வினை வகையாகும்.[1][2][3][4]
இவ்வகை உப்புகள் சற்றுக் கூடுதலான அளவு ஆல்ககாலுடன் வினைபுரிந்து ஆர்த்தோ எசுத்தர்களைத் தருகின்றன. அமோனியா அல்லது ஒரு அமீனுடன் சேர்ந்து அமீடினையும் தண்ணீருடன் சேர்ந்து ஒர் எசுத்தரையும் கொடுக்கின்றன.
பின்னெர் வினை ஒர் அமில வினையூக்கி சார்ந்தவினை என்றே மதிக்கப்பட்டது. ஆனால் வினையில் காரவினையூக்கிகளைப் பயன்படுத்தினாலும் அதே முடிவுகளே கிடைத்தன. இவ்விரண்டு அணுகுமுறைகளும் ஒன்றுக்கொன்று மிகைநிரப்பிகளாக இருக்கின்றன எனக்கருத முடிகிறது. பெரும்பாலும் அமில வினையூக்கிகளுடன் வினைபுரியாத போது காரவினையூக்கிகளுடன் நன்றாக வினைபுரியும் நிகழ்வும் காரவினையூக்கிகளுடன் வினைபுரியாத வேளைகளில் அமிலவினையூக்கிகளுடன் நன்றாக வினைபுரிதலும் பொதுவாக இவ்வினையில் நிகழ்கின்றன.[5] நைட்ரைலில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே வினையின் போக்கைக் கண்டறியும் காரணியாக விளங்குகிறது. உதாரணமாக, எலக்ட்ரான்கள் குறைவாக உள்ள நைட்ரைல் சேர்மம் , எலக்ட்ரானைக் கவர்கின்ற ஆற்றல் மிகுதியாகவும் குறைவான மின்னணு மிகுபொருளையும் கொண்டுள்ளது. அதாவது ஆல்காக்சைடுகளின் தாக்குதலுக்கு எளிதாக உட்படுவனவாகவும் கடினமான புரோட்டானேற்புத் திறனும் கொண்டிருக்கின்றன. அதனால் இவை அமிலவினையூக்கிச் சூழலைக் காட்டிலும் காரவினையூக்கிச் சூழலில் உடனடியாக வினைபுரிகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A. Pinner, F. Klein; Klein (1877). "Umwandlung der Nitrile in Imide". Berichte der deutschen chemischen Gesellschaft 10 (2): 1889–1897. doi:10.1002/cber.187701002154.
- ↑ A. Pinner, Fr. Klein; Klein (1878). "Umwandlung der Nitrile in Imide". Berichte der deutschen chemischen Gesellschaft 11 (2): 1475–1487. doi:10.1002/cber.18780110258.
- ↑ A. Pinner (1883). "Ueber die Umwandlung der Nitrile in Imide". Berichte der deutschen chemischen Gesellschaft 16 (2): 1643–1655. doi:10.1002/cber.18830160235.
- ↑ Roger, R.; Neilson, D. G. (1961). "The Chemistry of Imidates". Chem. Rev. 61 (2): 179–211. doi:10.1021/cr60210a003.
- ↑ எஆசு:10.1021/jo01061a034
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand