உள்ளடக்கத்துக்குச் செல்

பினா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினா தேவி
2020இல் பினா தேவி
பிறப்பு1977கள்
முங்கேர், பீகார், இந்தியா
பணிதலைவர், தொழில்முனைவோர்
விருதுகள்நாரி சக்தி விருது

பினா தேவி (Bina Devi) (பிறப்பு 1977கள்) இந்தியாவைச் சேர்ந்த, இவர் காளான் சாகுபடி மூலம் பெண்களை வணிகப் பெண்களாக மாறத் தூண்டினார். காளான் சாகுபடியை பிரபலப்படுத்தியவதற்காக ‘காளான் மகிலா’ என்ற புனைப்பெயரைப் பெற்ற இவர், தௌரி பேரூராட்சியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். காளான் வித்திடுதல், இயற்கை வேளாண்மை, மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை பூச்சிக்கொல்லி தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பீகாரின் முங்கேர் மாவட்டத்திலுள்ள தில்காரி என்ற ஒரு 1977களில் பிறந்த இவர், [1] அங்கேயே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தொழில்

[தொகு]

தேவி ஆரம்பத்தில் தனது சொந்த நிலத்தில் சிறிய அளவு காளான்களை வளர்த்தார். இது ஒரு நல்ல வாய்ப்பை இவருக்கு ஏற்படுத்தித் தந்தது. [1] இவர்,பால் பண்ணைத் தொழிலிலும் மற்றும் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்தார். ஆனாலும் இவர் கிராமப்புற பெண்களிடையே சுய வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதாக அறியப்பட்டார். முங்கேர் மாவட்டத்தில் ஐந்து தொகுதிகள் மற்றும் 105 அண்டை கிராமங்களில் காளான் உற்பத்தியை பிரபலப்படுத்தியுள்ளார். 1,500 பெண்களுக்கு ஆதரவளித்து காளான் விவசாயத்தில் அவர்களை ஈடுபடுத்தினார். [2]

2020 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளில் நாரி சக்தி விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி.

இவர் டிஜிட்டல் கல்வியறிவைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளார். டாடா அறக்கட்டளைகளால் வழங்கப்பட்ட செல்லிடத் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து 700 பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். குறைந்த நீர்ப்பாசனத்தின் மூலம் பயிர் வளர்க்கும் முறை மூலம் 2,500 விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். மேலும், சுய உதவிக்குழுக்களை உருவாக்குவதற்கும் ஆதரவளித்துள்ளார்.[2]

விருது

[தொகு]

2020 ஆம் ஆண்டில் அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவர் இந்தியப் பிரதமரின் டுவிட்டர் கணக்கில் இவர் இடம் பெற்றார். அன்றைய தினம் இவரது பெயரில் "அற்புதமான ஏழு பேர்" என்று பிரதமர் டுவிட் செய்த ஏழு பேர்களில் இவரும் ஒருவர். [3] குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவருக்கு நாரி சக்தி விருதை வழங்கியபோது இவரது பணி அங்கீகரிக்கப்பட்டது [4]

தனது சொந்த காளான் சாகுபடியைப் பற்றி இவர் குறிப்பிட்டார்: "இந்த விவசாயத்தின் காரணமாக, எனக்கு மரியாதை கிடைத்தது. நான் ஒரு தலைவர் ஆனேன். என்னைப் போன்ற பல பெண்கள் பயிற்சியளிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. " [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Agarwal, Rishika (2020-03-17). "Bihar's daughter, Bina Devi famous as Mushroom Mahila was awarded the Nari Shakti Award". PatnaBeats (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-04-03. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
  2. 2.0 2.1 2.2 "Get out, work yourself: Mushroom Mahila message to women". www.outlookindia.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-01-05.
  3. "Get out, work yourself: ‘Mushroom Mahila’ message to women | INDIA New England News". indianewengland.com. Archived from the original on 2020-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.
  4. Dainik Bhaskar Hindi. "Women's Day 2020: President Kovind awarded Nari Shakti Puraskar to Bina Devi and many women | Women's Day 2020: 103 वर्षीय मान कौर को नारी शक्ति पुरस्कार, 'मशरूम महिला' भी सम्मानित - दैनिक भास्कर हिंदी". bhaskarhindi.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினா_தேவி&oldid=3700784" இலிருந்து மீள்விக்கப்பட்டது