பிண்ணாக்கீசர்

பிண்ணாக்கீசர் அல்லது புண்ணாக்கீசர் அல்லது புண்ணாக்கு சித்தர் தமிழ் சைவ கலாச்சாரத்தில் உள்ள 18 சித்தர்களில் ஒருவர். இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கீசர் என அழைக்கப்பட்டார். இடையர் குலத்தில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார். பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவருக்கு, மச்சமுனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது.[1][2][3][4]
பொதுவாக, அவர் அங்குள்ள அவரது சென்னிமலை தவபீடத்தின் ஊர்பெயரால் சென்னிமலை சித்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் பாம்பாட்டி சித்தரின் சீடர். இவர் நாக்கு இரண்டாகப் பிளவுபட்டிருந்ததால் பிண்ணாக்கீசர் என்று அழைக்கப்ட்டார். சிவகிரி என்று சிறப்பிக்கப்படும் சென்னிமலை மீது ஒரு குகையில் வாழ்ந்திருக்கிறார். சென்னிமலை மீது நீண்ட காலம் தவமியற்றி அங்கேயே ஜீவ சமாதியும் கூடியிருக்கிறார். அதனால் சென்னிமலை சித்தர் என்ற பெயரையும் கொண்டிருக்கிறார்.[5][6][7]
தவபீடம்
[தொகு]இந்த சித்தர் சென்னிமலை உச்சியில் சமாதி பூண்டு கோயில் கொண்டுள்ளார். அந்தக் கோவில் வேல்கள் நிறைந்த வேல் கோட்டமாகக் காட்சியளிக்கிறது. அந்த வேல் கோட்டத்தின் அருகே மிகப் பழமையான குகை ஒன்றும் உள்ளது. அதன் அருகில் சரவணமாமுனிவர்[8] என்ற வேறு ஒரு சித்தர் சமாதியும் உள்ளது.[9][10][11]
நூல்கள்
[தொகு]- மெய்ஞானம்
- ஞானப்பால்
- முப்பூச் சுண்ணச் செயநீர்[4]
ஜீவ சமாதி
[தொகு]இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.
மூலம்
[தொகு]- சித்தர்கள் வாழ்க்கை, பி.என்.பரசுராமன், விகடன் பிரசுரம்.
- ↑ "பிண்ணாக்கீசர்". தினமலர். Retrieved 2022-09-02.
- ↑ "புண் நாக்கு சித்தர்!". தினமலர். Retrieved 2022-09-02.
- ↑ "ஓலைச்சுவடிகள் தேடல் முடிவுகள்". ஓலைச்சுவடிகள் தேடல் முடிவுகள் (in ஆங்கிலம்). Retrieved 2022-10-26.
- ↑ 4.0 4.1 "sithar padalkal". www.tamilvu.org. Retrieved 2022-10-26.
- ↑ நூலகம், சித்தர்கள் (2018-03-10). "சித்தர்கள் நூலகம்: பிண்ணாக்கீசர்". சித்தர்கள் நூலகம். Retrieved 2022-09-02.
- ↑ "புண் நாக்கு சித்தர்!". தினமலர். Retrieved 2022-09-02.
- ↑ "புண் நாக்கு சித்தர்!". தினமலர். Retrieved 2022-09-02.
- ↑ "சென்னிமலை தன்னாசியப்பன் கோயிலில் மாசி திருவிழா". Dinamani. Retrieved 2022-10-26.
- ↑ நூலகம், சித்தர்கள் (2018-03-10). "சித்தர்கள் நூலகம்: பிண்ணாக்கீசர்". சித்தர்கள் நூலகம். Retrieved 2022-09-02.
- ↑ "சென்னிமலை சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்". Dinamani. Retrieved 2022-09-02.
- ↑ மலர், மாலை (2019-04-15). "சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபாடும்". www.maalaimalar.com. Retrieved 2022-10-26.