பிண்டா தீவு

ஆள்கூறுகள்: 0°35′14″N 90°45′44″W / 0.587252°N 90.762184°W / 0.587252; -90.762184
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிண்டா தீவு
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ecuador Galápagos Islands" does not exist.
புவியியல்
அமைவிடம்கலாபகசுத் தீவுகள், எக்குவடோர்
ஆள்கூறுகள்0°35′14″N 90°45′44″W / 0.587252°N 90.762184°W / 0.587252; -90.762184
தீவுக்கூட்டம்Galápagos Islands
நிர்வாகம்

பிண்டா தீவு (Pinta Island, எசுப்பானியம் : Isla Pinta ), அபிங்டன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது எர்ல் ஆஃப் அபிங்டனுக்கு அடுத்து, ஈக்குவடோரின், கலாபகசுத் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இதன் பரப்பளவு 60 சதுர கிமீ (23 சதுர மைல்) மற்றும் அதிகபட்ச உயரமுள்ள பகுதி 777 மீட்டர் (2,549 அடி) ஆகும். [1]

கலபகோஸ் தீவுகளில் மிகவும் பிரபலமான ஆமையான லோன்சம் ஜார்ஜ்ஜின் பிறப்பிடமாக பின்டா தீவு இருந்தது. இந்த ஆமையானது பிண்டா தீவு ஆமை என்ற துணையினத்தின் கடைசியாக அறியப்பட்ட ஆமையாக இருந்தது.

பிண்டா தீவின் செயற்கைக்கோள் படம்

பின்டா தீவு விழுங்கும் வால் பறவை, கடற்பேரோந்தி, கலபகோஸ் பருந்து, கலபகோஸ் ஃபர் நீர்நாய் மற்றும் பல பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் தாயகமாகவும் உள்ளது. கலாபகோசு தீவுக் கூட்டத்தில் மிக வடக்கில் உள்ள பெரிய தீவு இதுவாகும். ஒரு காலத்தில் இஸ்லா பிண்டாவில் ஆமைகள் பெருமளவில் இருந்தன. அறிமுகப்படுத்தப்பட்ட காட்டு ஆடுகளால் தீவின் தாவரங்கள் பல தசாப்தங்களாக அழிக்கப்பட்டன. இதனால் பூர்வீக ஆமைகளுக்கு தேவைப்பட்ட உணவு குறைந்தது. பின்டாவில் கொண்டுவந்து விடப்பட்டு பெருகிய ஆடுகளை அழிப்பதற்கான நீண்டகால முயற்சி 1990 இல் நிறைவடைந்தது. அதன்பிறகு தீவில் இருந்த தாவரங்கள் அதன் முந்தைய நிலைக்குத் திரும்பத் தொடங்கின.


2002, சனவரி, 28 அன்று, பிண்டாவில் 53 கடல் சிங்கங்கள் (13 குட்டிகள், 25 சற்று வளர்ந்தவை, 9 வளர்ந்த ஆண்கள், மற்றும் 6 வளர்ந்த பெண்கள்) கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கலாபகோஸ் தேசிய பூங்கா அதிகாரி விக்டர் கேரியன் அறிவித்தார். 2001 ஆம் ஆண்டில், வேட்டைக்காரர்கள் 35 ஆண் கடல் சிங்கங்களைக் கொன்றனர். [2]

குறிப்புகள்[தொகு]

  1. Rocchio, Laura; Allen, J.; Simmon, R.; Taylor, M. (July 21, 2012). "Pinta Island". Earth Observatory: Images. EOS Project Science Office, NASA Godard Space Flight Center. பார்க்கப்பட்ட நாள் June 17, 2013.
  2. "Sea lions massacred in Galápagos". BBC News. January 29, 2008. http://news.bbc.co.uk/2/hi/americas/7214860.stm. பார்த்த நாள்: June 17, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிண்டா_தீவு&oldid=3667494" இலிருந்து மீள்விக்கப்பட்டது