உள்ளடக்கத்துக்குச் செல்

பிண்டா தீவு ஆமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Chelonoidis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பிண்டா தீவு ஆமை
2006 இல் சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையத்தில் லோன்சம் ஜார்ஜ், அதன் இனமான கலாபகோஸ் ஆமைகளில் கடைசியாக அறியப்பட்டது
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Chelonoidis
துணைப்பேரினம்:
இனம்:
துணையினம்:
C. n. abingdonii
முச்சொற் பெயரீடு
Chelonoidis niger abingdonii
(Günther, 1877)
Map of the Galápagos Islands indicating species' locations
வேறு பெயர்கள்
 • Testudo abingdonii Günther, 1877
 • Testudo elephantopus abingdonii Mertens & Wermuth, 1955
 • Geochelone elephantopus abingdonii Pritchard, 1967
 • Geochelone nigra abingdonii Iverson, 1992
 • Geochelone abingdonii Valverde, 2004

பிண்டா தீவு ஆமை [2] ( Chelonoidis niger abingdonii [3] ), இது பிண்டா இராட்சத ஆமை, அபிங்டன் தீவு ஆமை, [1] அபிங்டன் தீவு இராட்சத ஆமை என்றும் அழைக்கப்படுகிறது. இது எக்குவடாரின் பிண்டா தீவை பூர்வீகமாகக் கொண்ட கலபகோஸ் ஆமையின் அழிந்துபோன துணையினமாகும். [1]

இந்த ஆமையின் மாதிரிகள் இலண்டனுக்கு வந்த பிறகு 1877 இல் ஆல்பர்ட் குந்தரால் இந்த துணையினங்கள் விவரிக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பெரும்பாலான பிண்டா தீவு ஆமைகள் வேட்டையாடப்பட்டதால் அழிக்கப்பட்டன. [4] 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1971 இல் தீவில் ஒரு ஆண் ஆமை கண்டுபிடிக்கப்படும் வரை, இந்தக் துணையினம் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. லோன்சம் ஜார்ஜ் என்ற பெயரிடப்பட்ட இந்த ஆண் ஆமையை மற்ற திணையினங்களுடன் இணப்பெருக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சாத்தியமான முட்டைகள் எதுவும் உருவாகவில்லை. லோன்சம் ஜார்ஜ் 24 சூன் 2012 அன்று இறந்தது. இதனால் அதன் மரணத்துடன் இந்தக் துணையினங்கள் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது. இருப்பினும், யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் பயணத்தின் போது 2012 இல் இசபெலா தீவில் உள்ள ஓநாய் எரிமலையிலிருந்து 17 முதல் தலைமுறை கலப்பினங்கள் இருப்பது பதிவாகியுள்ளன. இந்த மாதிரிகள் இளம் வயது ஆமைகளாக இருந்ததால், அவற்றின் பெற்றோர் இன்னும் உயிருடன் இருக்கலாம் எனப்படுகிறது. [5] இந்தக் துணையினங்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியிலில் சேர்க்கப்பட்டு அற்றுவிட்ட இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [1]

வகைபிரித்தல்

[தொகு]
இறந்த ஆமையின் மாதிரி 1905-1906 இல் சேகரிக்கப்பட்டது

லோன்சம் ஜார்ஜ் ஆமை கண்டுபிடிக்கபட்டதைத் தொடர்ந்து பிண்டா தீவில் உள்ள மற்ற ஆமைகளுடன் சேர்ந்து, 15 துணையினங்கள் கண்டுபிடிக்கபட்டன. ஒரு காலத்தில் ஆத்திரேலியா, அண்டார்டிகாவைத் தவிர உலகின் அனைத்து கண்டங்களிலும் இராட்சத ஆமைகள் காணப்பட்டன. கலபகோஸ் ஆமைகள் தான் தற்போது வாழும் ஆமைகளில் மிகப் பெரியது.

ஆல்பர்ட் குந்தர், டெஸ்டுடோ அபிங்டோனியை 1877 இல் விவரித்தவர்

பிண்டா தீவு ஆமை முதலில் 1877 ஆம் ஆண்டில் செர்மனியில் பிறந்த பிரித்தானியரான ஈரிடவாழியியல் ஆய்வாளரான ஆல்பர்ட் குந்தர் என்பவரால் விவரிக்கப்பட்டது. அவர் பிரிட்டன் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ள தனது புத்தகமான தி கிகாண்டிக் லேண்ட்-டார்டாஸ் (வாழும் மற்றும் அழிந்துபோன) புத்தகத்தில் டெஸ்டுடோ அபிங்டோனி என்று இதற்கு பெயரிட்டார். [3] அபிங்டோனி என்ற பெயர் அபிங்டன் தீவு என்பதில் இருந்து வந்தது. இப்போது அத்தாவு பொதுவாக பிண்டா தீவு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆமை இருப்பது குறித்த செய்திகள் 1798 இல் கேப்டன் ஜேம்ஸ் கோல்னெட் மற்றும் 1876 இல் பசில் ஹால் ஆகியோரின் பயணங்களின் குறு அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டது. 1876 ஆம் ஆண்டில், தளபதி வில்லியம் குக்சன் [6] ராயல் நேவி கப்பலான எச்எம்எஸ் பீடரெல் மூலம் லண்டனுக்கு மூன்று ஆண் ஆமை மாதிரிகளை (கலாபகோஸ் ஆமையின் பிற கிளையினங்களுடன்) கொண்டு வந்தார். [7]

நடத்தை மற்றும் சூழலியல்

[தொகு]

பிண்டா தீவு ஆமை உள்ளிட்ட கலாபகோஸ் ஆமைகளின் துணை இனங்கள் அதன் இயற்கை வாழிடங்களில் ஒரு நாளைக்கு சுமார் 16 மணிநேரம் ஓய்வெடுக்கின்றன.  கலபகோஸ் ஆமைகள் தாவரவுண்ணிகள், அவை முதன்மையாக கீரைகள், புற்கள், பூர்வீக பழங்கள், கற்றாழை பட்டைகள் போன்றவற்றை உண்ணும். அவை அதிக அளவு தண்ணீரைக் குடிக்கின்றன பின்னர் அவற்றை தங்கள் உடலில் சேமித்து வைத்து நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடியன. ஒரு முறை தேவையான அளவு உண்ட பிறகு இவை ஆறு மாதங்கள் வரை உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. [8]

இனப்பெருக்கத்திற்காக, கோடைக் காலத்தில் (சனவரி முதல் மே வரை) ஆமைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். குளிர் காலத்தில் (சூன் முதல் நவம்பர் வரை), பெண் ஆமைகள் முட்டையிடுவதற்காக கூடு கட்டும் பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன.

கலாபகோஸ் இராட்சத ஆமைகள் கலாபகோசில் உள்ள சிறந்த தாவரவகைகளின் வாழ்வுக்கு ஆதாரமாக உள்ளன. மேலும் அவை முழு தீவின் சுற்றுச்சூழல் அமைப்பையும் வடிவமைக்கின்றன. அவை தவர விதைகளை [9] தீவில் பரப்புவதன் மூலமும், தாவரவகை மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி மூலம் சூழலியல் பொறியாளர்களாக செயல்படுகின்றன. பின்டா தீவு ஆமையின் அழிவு தீவின் சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாட்டை பாதித்துள்ளது. [10]

மனிதர்களுடனான உறவு

[தொகு]

அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு

[தொகு]

கலபகோஸ் ஆமைகளின் எஞ்சியிருக்கும் பல துணையினங்கள் அழிந்து வருகின்றன. கடற்கொள்ளையர் மற்றும் திமிங்கல வேட்டைக் கப்பல்கள் வருகையின் விளைவாக 17 ஆம் நூற்றாண்டில் இந்த ஆமைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியுறத் தொடங்கியது. அவர்கள் இறைச்சிக்காக ஆமைகளை வேட்டையாடினர். மொத்தம் சுமார் 200,000 ஆமைகளை எடுத்துக் கொண்டனர்.

1958 ஆம் ஆண்டில், பிண்டா தீவுக்கு ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அவை தீவின் இயற்கையான வாழ்விடத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், பெரும்பாலான தாவரங்களை உண்ணத் தொடங்கின. [11] [12] இதனால் ஆடுகளை அழிக்கும் நீண்டகால முயற்சி தொடங்கியது. ஆடுகளின் எண்ணிக்கை குறைந்ததால், தாவரங்கள் மீண்டன. ஐலேண்ட் புதர் துணையினங்கள், வன மரக் கன்றுகள், ஓபன்டியா கற்றாழை மற்றும் பிற உள்ளூர் துணையினங்கள் அதிகரித்தன. 2003 ஆம் ஆண்டில், பிண்டா தீவு ஆடு இல்லாததாக பகுதியாக அறிவிக்கப்பட்டது. [13]

கலாபகோசில் உள்ள ஆடுகளை அகற்றுவது போன்ற பாதுகாப்பு முயற்சிகளோடு, சிறைப்பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் கலபகோஸ் ஆமையின் பல துணையினங்களை இனப்பெருக்கத்தின் வழியாக புதுப்பிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓநாய் எரிமலையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தலைமுறை கலப்பினங்களை இனப்பெருக்கம் செய்வதன் மூலம், அசல் பின்டா தீவு ஆமைக்கு மரபணு ரீதியாக ஒத்த ஆமைகளை மீண்டும் உருவாக்குவதை எதிர்கால இலக்குகளாக உள்ளன.

சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையத்தில் லோன்சம் ஜார்ஜ்

லோன்சம் ஜார்ஜ்

[தொகு]

லோன்சம் ஜார்ஜ் [14] ( எசுப்பானியம்: El Solitario Jorge Jorge ), [15] 24 சூன் 2012 அன்று இறந்தது. அதன் கடைசி ஆண்டுகளில், உலகின் அரிதான உயிரினமாக அறியப்பட்டது. [16]

ஜார்ஜ் முதன்முதலில் பின்டா தீவில் 1971 திசம்பர் முதல் நாளன்று அங்கேரிய நத்தையினவியலாளரான ஜோசெஃப் வாக்வோல்கி என்பவரால் காண்டுபிடிக்கபட்டது. அதன் பாதுகாப்பிற்காக சாண்டா குரூஸ் தீவில் உள்ள சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஜார்ஜ் வெவ்வேறு துணையினங்களைச் சேர்ந்த இரண்டு பெண் ஆமைகளுடன் இனப்பெருக்கத்துக்காக விடப்பட்டது. பெண் ஆமைகள் முட்டையிட்டாலும் குஞ்சு பொரிக்கவில்லை. பிண்டா ஆமை செயல்பாட்டு ரீதியாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பல தசாப்தங்களாக, லோன்சம் ஜார்ஜை இனச்சேர்க்கை செய்விப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஏனெனில் அதன் துணையினங்கள் மற்ற துணையினங்களுடன் அயல்கருவுதல் வெற்றிகரமானதாக இல்லாமல் இருப்பதாக இருக்கலாம்.

24 சூன் 2012 அன்று, உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு, கலாபகோஸ் தேசிய பூங்காவின் இயக்குனர் எட்வின் நௌலா, லோன்சம் ஜார்ஜ் இறந்துவிட்டதை [17] [18] அதன் 40 ஆண்டு பராமரிப்பாளரான ஃபாஸ்டோ லெரெனாவால் கண்டெடுபிடிக்கபட்டதாக அறிவித்தார். [19] ஒரு ஆமையின் இயற்கை வாழ்க்கையின் முடிவுக்கு இதய செயலிழப்புதான் காரணமாக இருக்கலாம் என்று நௌலா சந்தேகிக்கிறார்.

குறிப்புகள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 1.3 Cayot, L.J.; Gibbs, J.P.; Tapia, W.; Caccone, A. (2016). "Chelonoidis abingdonii". IUCN Red List of Threatened Species 2016: e.T9017A65487433. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T9017A65487433.en. https://www.iucnredlist.org/species/9017/65487433. பார்த்த நாள்: 2023-01-22. 
 2. Reynolds, Robert P.; Marlow, Ronald W. (1983). "Lonesome George, the Pinta Island Tortoise: A Case of Limited Alternatives". Noticias de Galápagos 37: 14–7. http://www.darwinfoundation.org/datazone/galapagos-research/article/1983/37/lonesome-george-pinta-island-tortoise-case-limited-alternatives/. பார்த்த நாள்: 2012-06-26. 
 3. 3.0 3.1 Fritz, Uwe; Havaš, Peter (2007). "Checklist of chelonians of the world". Vertebrate Zoology 57 (2): 271. http://www.cnah.org/pdf_files/851.pdf. 
 4. Lonesome George: The Life and Loves of the World's Most Famous Tortoise. Pan Books.
 5. "Galapagos Tortoise 'Lonesome George' May Have Company". LiveScience. 2012-11-15. பார்க்கப்பட்ட நாள் 2023-01-22.
 6. "William Edgar De Crackenthorpe Cookson R.N." William Loney RN - Background (Officers in command) – via pdavis.nl.
 7. "HMS Peterel". William Loney RN - Background (Mid-Victorian RN vessels) – via pdavis.nl.
 8. Caccone, Adalgisa; Gibbs, James P.; Ketmaier, Valerio; Suatoni, Elizabeth; Powell, Jeffrey R. (1999). "Origin and Evolutionary Relationships of Giant Galápagos Tortoises". த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு 96 (23): 13223–13228. doi:10.1073/pnas.96.23.13223. பப்மெட்:10557302. Bibcode: 1999PNAS...9613223C. 
 9. Stephen Blake; Martin Wikelski; Fredy Cabrera; Anne Guezou; Miriam Silva; E. Sadeghayobi; Charles B. Yackulic; Patricia Jaramillo (2012). "Seed dispersal by Galapagos tortoises". Journal of Biogeography 39 (11): 1961–1972. doi:10.1111/j.1365-2699.2011.02672.x. 
 10. Edwards, Danielle; Benavides, Edgar; Garrick, Ryan (January 2013). "The genetic legacy of Lonesome George survives: Giant tortoises with Pinta Island ancestry identified in Galápagos". Biological Conservation 157: 225–228. doi:10.1016/j.biocon.2012.10.014. http://www.escholarship.org/uc/item/90d7v370. 
 11. "Galapagos Geology on the Web". Cornell University. பார்க்கப்பட்ட நாள் 2023-01-22.
 12. Karl Campbell; C. Josh Donlan; Felipe Cruz; Victor Carrion (July 2004). "Eradication of feral goats Capra hircus from Pinta Island, Galápagos, Ecuador". Oryx 38 (3). doi:10.1017/s0030605304000572. 
 13. "Lonesome George". Galapagos Conservancy. பார்க்கப்பட்ட நாள் 2023-01-22.
 14. Gardner, Simon (2001-02-06). "Lonesome George faces own Galapagos tortoise curse". Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2012-01-11.
 15. Proceso de Relaciones Públicas de la Dirección del Parque Nacional Galápagos (2012-06-24). "El mundo pierde al solitario George". Archived from the original on 2012-06-28. பார்க்கப்பட்ட நாள் 2012-06-25.
 16. Nicholls, Henry (2010). Lonesome George: The Life and Loves of a Conservation Icon.
 17. "Giant tortoise Lonesome George's death leaves the world one subspecies poorer". National Post. பார்க்கப்பட்ட நாள் 2023-01-22.
 18. Alexandra Valencia; Eduardo Garcia (2012-06-25). "Lonesome George, last-of-his-kind Galapagos tortoise, dies". ராய்ட்டர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2023-01-22.
 19. "Muere el Solitario George, la última tortuga gigante de isla Pinta". El Unveriso. Archived from the original on 2013-01-15. பார்க்கப்பட்ட நாள் 2012-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிண்டா_தீவு_ஆமை&oldid=3851556" இலிருந்து மீள்விக்கப்பட்டது