உள்ளடக்கத்துக்குச் செல்

பிசப் பன்னாட்டு விமானநிலைய நிகழ்வு, 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசப் பன்னாட்டு விமானநிலைய நிகழ்வு, 2017
இடம்பிசப் பன்னாட்டு விமான நிலையம், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
நாள்21 ஜூன் 2017
9:45 முற்பகல்
தாக்குதல்
வகை
கத்திக்குத்து
ஆயுதம்கத்தி
இறப்பு(கள்)0
காயமடைந்தோர்1

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பிசப் பன்னாட்டு விமானநிலையத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். 21 ஜூன் 2017 அன்று விமான நிலையத்தின் இரண்டாவது தளத்தில் முற்பகல் 9:45 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வின் காரணமாக அவ்விமான நிலையத்தின் பயணிகள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.[1] கத்தியால் குத்தப்பட்ட அதிகாரியின் உடல் நிலை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.[2] விமான நிலையத்திலிருந்த பயணிகள் எவரும் பாதிக்கப்படவில்லை.[3]

தாக்குதல்தாரி

[தொகு]

அமோர் தெளகி (Amor Ftouhi) எனும் தாக்குதல்தாரி இத்தாக்குதலை நடத்தியவராவார். அல்லாஹூ அக்பர் எனக் கூக்குரலிட்டு தாக்குதல் நடத்தினார்.[4] இவர் துனீசியா நாட்டைச் சார்ந்தவர். கனேடிய கடவுச் சீட்டைக் கொண்டுள்ள மொண்ட்ரியால் நகரவாசியாவார்.[5] புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Police officer stabbed in neck at Flint Bishop Airport in Michigan". mlive இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2017.
  2. "Airport in Flint, Michigan evacuated after stabbing". RT இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2017.
  3. "Michigan airport evacuated after police officer is stabbed". Independent இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2017.
  4. "'Allahu Akbar'; Cdn charged in cop's stabbing at airport asked police why didn't they kill him, complaint says". canoe.com (in ஆங்கிலம்). Archived from the original on 24 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Canadian man charged after possible terror attack at Michigan airport, FBI says | Toronto Star". thestar.com. https://www.thestar.com/news/world/2017/06/21/flint-mich-airport-evacuated-police-officer-seen-bleeding-from-his-neck.html. பார்த்த நாள்: 21 June 2017.