உள்ளடக்கத்துக்குச் செல்

பாலின்ப இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. காம சூத்திரம் காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. திருக்குறளிலும் இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் குறட்பாக்களில் பெண்ணின் தோற்றமும் புணர்ச்சியின் போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன.

பாலின்பக் கதைகள்[தொகு]

பாலின்பக் கதைகள் (காம கதைகள்) என்பது பாலுணர்வை தூண்டும் கதைகளைக் குறிக்கிறது. புத்தக வடிவிலும் அச்சிடப்படும் இந்தக் கதைகள் செவி வழியாகவும் தலைமுறை தலைமுறையாக பயணிக்கின்றன. இப்போது கணினியில் நவீன வடிவம் பெற்றிருக்கின்றன.

பாலியற் சார்ந்த கவிதைகள்[தொகு]

பெண்ணின் வலியையும், நிலையினையும் உணர்த்த பாலியற் சார்ந்த கவிதைகள் உதவுகின்றன. விபச்சார பெண்களின் வாழ்க்கை முறையை கவிதை வடிவில் பலர் எழுதியிருக்கின்றார்கள். ஆண்டாள் தொடங்கி நவீன கால பெண் எழுத்தாளர்கள் வரை பாலியற் சார்ந்த கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கம்பன், வள்ளுவன் என பெரும் புலவர்களும் பாலியற் கவிதைகளை எழுத தவறவில்லை.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின்ப_இலக்கியம்&oldid=2740469" இலிருந்து மீள்விக்கப்பட்டது