பேச்சு:பாலின்ப இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைத்தலைப்பை, பாலியல் இலக்கியம் என்றவாறாக அல்லது அதற்கு சமமான அரசியல் ரீதியாக திருத்தப்பட்ட சொல் எதையும் பயன்படுத்தலாமா என்பது பற்றி ஆலோசிக்கவும் --மு.மயூரன் 16:19, 29 ஜூன் 2006 (UTC)

தலைப்பு மாற்றத்திற்கான வேண்டுகோள்[தொகு]

இக்கட்டுரையின் தலைப்பை பாலியல் புனைவு என்று மாற்றினால் என்ன? --மு.மயூரன் 20:35, 3 ஜூலை 2006 (UTC)

பாலின்ப இலக்கியம் என்பது மிகப்பொருத்தமான தலைப்பாக படுகிறது. மற்றவர்களும் இதனை ஏற்றுக்கொள்வார்களாயின் தலைப்பை மாற்றுவதற்கு பரிந்துரைக்கிறேன் --மு.மயூரன் 13:51, 5 ஜூலை 2006 (UTC)

இரண்டாவது தலைப்பு பொருத்தமாகத் தெரிகிறது. --சிவகுமார் 13:55, 5 ஜூலை 2006 (UTC)

காமம் என்ற சொல் தற்காலத் தமிழில் உணர்த்தும் பொருளைக் கவனத்தில் எடுக்கும் போது பாலின்ப இலக்கியம் பொருத்தமானதே --கோபி 15:45, 5 ஜூலை 2006 (UTC)

பாலின்ப இலக்கியம் என்பது மிகப்பொருத்தமான தலைப்பாக படுகிறது.--ரவி 09:25, 6 ஜூலை 2006 (UTC)


இணையத்தில் காம இலக்கியம் பகுதியில் தமிழ் இலக்கியங்களின் பக்கத்திக்கு இணைப்பு கொடுக்கலாமே!. பாலின்பக் கதைகளை ஆங்கிலத்தில் படிக்க தமிழ் விக்கி எதற்கு.

மேலும் மேற்கோள் காட்டப்பட்ட பக்கம் வேலை செய்கிறாதா!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

தமிழில் இருக்கும் இணையக் குப்பைகளுக்கு இங்கிருந்து இணைப்புக் கொடுக்கத் தேவையில்லை என்பது என் கருத்து. Tamilnation இணையத்தளம் இப்போது செயழிழந்து விட்டது.--Kanags \உரையாடுக 07:48, 26 சனவரி 2011 (UTC)Reply[பதில் அளி]

கம்பனும் காமமுன் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய பக்கங்களை இணைக்கலாமா. லீனா மணிமேகலை போன்றோரின், பாலியல் சார்பு கவிதைகளின் பக்கங்களை இணைக்கலாமா. ஆங்கிலம் தவிர்க்கப்பட வேண்டும்,. தமிழில் குப்பைகள் மட்டுமல்ல, மாணிக்கங்களும் இருக்கின்றன நண்பரே!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு