பார்த்திய எய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்த்திய துரகவீரன், மதாமா அரண்மனை, தரீன், வட இத்தாலி.  

பார்த்திய எய்வு என்பது பண்டைக்கால ஈரானிய மக்களான பார்த்தியர்களால் பிரபலமடைந்த ஒரு போர் உத்தி. இலகுகவச குதிரையின்மேல்  பார்த்திய வில்லாளிகள் முழு வீச்சில் பின்வாங்கும்போது,  உடலை திருப்பி பின்தொடரும் எதிரியை நோக்கி அம்பை எய்வர். இதை செயல்படுத்த சிறந்த குதிரையேற்ற திறன் தேவை, ஏனெனில் சவாரியாளர் கைகளில் வில் ஏந்தியிருப்பார். பார்த்தியர்களின் காலத்தில் அங்கவடி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், சவாரியாளர் தனது கால்களின் அழுத்தத்தால் மட்டுமே அவரின் குதிரையை வழிநடத்த இயலும். பின்வாங்குவது போல் நடிக்கும் போது, இந்த உத்தி எதிரியை நிலைகுலைய வைக்கும்.

இந்த உத்தியை  சாகர்கள், ஹீனர்கள், துருக்கியர்கள், அங்கேரியர்கள் மற்றும் மங்கோலியர்கள் உட்பட பெரும்பாலான ஐரோவாசிய நடோடிகள் பயன்படுத்தினர், இது மேலும் சசானிய குதிரைப்படைப் பிரிவுகளான கிளிபனாரி மற்றும் கட்டபிறாக்து ஆகியவற்றிலும் பயன்படுத்தப் பட்டது.

காரே போரில் இந்த உத்தி (பார்த்தியர்களால்) செயல்படுத்தப்பட்டது. இப்போரில் பார்த்திய எய்வு, ரோமானிய தளபதி கிரேசசை பார்த்தியர்கள் வெல்ல ஒரு முக்கிய காரணி ஆகும்.

மேலும் பார்க்க [தொகு]

  • ஏற்ற வில்வித்தை 

மேற்கோள்கள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்திய_எய்வு&oldid=2768261" இருந்து மீள்விக்கப்பட்டது