பார்கி அணை
பார்கி அணை Bargi Dam | |
---|---|
அணையின் நீர்த்தேக்கம் | |
அமைவிடம் | பார்கி, இயபல்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
நிலை | இயங்குகிறது |
கட்டத் தொடங்கியது | 1975 |
திறந்தது | 1988 |
உரிமையாளர்(கள்) | மத்தியப் பிரதேச அரசு |
இயக்குனர்(கள்) | நர்மதா பள்ளத்தாக்கு மேம்பாட்டுத் துறை, நீர்வளத்துறை, மத்தியப் பிரதேசம் (MPWRD) |
அணையும் வழிகாலும் | |
வகை | புவியீர்ப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | நருமதை |
உயரம் | 69.80 m (229.0 அடி) |
நீளம் | 5,357 m (17,575 அடி) |
வழிகால்கள் | 21 ஆரக்கதவுகளின் அளவு 13.71 மீ (l) * 15.25 மீ (உயரம்) |
வழிகால் வகை | வளைவு |
வழிகால் அளவு | 45,296 m3/s (1,599,600 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | பார்கி அணை நீர்த்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | 3,920,000,000 m3 (3,180,000 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 3,180,000,000 m3 (2,580,000 acre⋅ft) |
செயலற்ற கொள் அளவு | 740,000,000 m3 (600,000 acre⋅ft) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 14,556 km2 (5,620 sq mi) |
மேற்பரப்பு பகுதி | 267.97 km2 (103.46 sq mi) |
அதிகபட்சம் நீளம் | 75 km (47 mi) |
அதிகபட்சம் அகலம் | 4.5 km (2.8 mi) |
இயல்பான ஏற்றம் | 422.76 m (1,387.0 அடி) |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | மத்தியப் பிரதேச மின் உற்பத்தி நிறுவனம் |
சுழலிகள் | அணை: 2 × 45 மெகாவாட்டு பிரான்சிசு சுழலி கால்வாய்: 2 × 7.5 மெகாவாட்டு கப்லான் வகை |
நிறுவப்பட்ட திறன் | 105 மெகாவாட்டு |
பார்கி அணை (Bargi Dam) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா ஆற்றின் மீது கட்டப்படவுள்ள 30 பெரிய அணைகளின் சங்கிலித் தொடரில் முதன் முதலில் கட்டி முடிக்கப்பட்ட அணைகளில் ஒன்றாகும். நகரின் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக இருப்பதனால் பார்கி அணை முக்கியத்துவம் கொண்டு விளங்குகிறது. பார்கி திசைதிருப்பும் அல்லது மாற்றுவழித் திட்டம் மற்றும் ராணி அவந்திபாய் லோதி சாகர் திட்டம் என்ற இரண்டு பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் பார்கி அணை நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.[1] படகுச் சவாரி, மீன்பிடிப்பு, நீர் விளையாட்டு போன்ற வசதிகளும் தற்போது ஏற்படுத்தப்பட்டு ஒரு சுற்றுலாத் தலமாகவும் பார்கி அணை திகழ்கிறது. மைனா, கிளிகள், நாரைகள், புறாக்கள் மற்றும் உள்ளூர் கரிச்சாங்குருவிகள் போன்ற பறவையினங்கள் அணைக்கு வந்து நீரறுந்தும் காட்சியை இரசிக்கும் வாய்ப்பும் இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NIH Bargi Dam" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
- ↑ "பார்கி அணை, Jabalpur". tamil.nativeplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் பார்கி அணை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.