பாரா கிரெசால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா கிரெசால்
p-Cresol
Skeletal formula of para-cresol
3D model of p-cresol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பீனால்
வேறு பெயர்கள்
4-ஐதராக்சிதொலுயீன், பாரா-ஐதராக்சிதொலுயீன், பாரா-மெத்தில்பீனால், 4-கிரெசால், பாரா-கிரெசிலிக் அமிலம், 1-ஐதராக்சி-4-மெத்தில்பென்சீன்
இனங்காட்டிகள்
106-44-5 Y
ChEBI CHEBI:17847 Y
ChEMBL ChEMBL16645 Y
ChemSpider 13839082 Y
DrugBank DB01688 Y
InChI
  • InChI=1S/C7H8O/c1-6-2-4-7(8)5-3-6/h2-5,8H,1H3 Y
    Key: IWDCLRJOBJJRNH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H8O/c1-6-2-4-7(8)5-3-6/h2-5,8H,1H3
    Key: IWDCLRJOBJJRNH-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01468 Y
வே.ந.வி.ப எண் GO6475000
SMILES
  • Cc1ccc(O)cc1
UNII 1MXY2UM8NV Y
பண்புகள்
C7H8O
வாய்ப்பாட்டு எடை 108.13
தோற்றம் நிறமற்ற முக்கோணப் படிகங்கள்
அடர்த்தி 1.0347 கி/மி.லி
உருகுநிலை 35.5 °C (95.9 °F; 308.6 K)
கொதிநிலை 201.8 °C (395.2 °F; 474.9 K)
2.4 கி/100 மி.லி 40 °செ இல்
5.3 கி/100 மி.லி 100 °செ இல்
[[எத்தனால்]]-இல் கரைதிறன் முற்றிலும் கலக்கும்
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் முற்றிலும் கலக்கும்
ஆவியமுக்கம் 0.11 மி.மீபாதரசம் (25°செ)[1]
-72.1·10−6 செ,மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5395
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உடலுக்குள் சென்றால் தீங்கு.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R34 R24 R25
S-சொற்றொடர்கள் S36 S37 S39 S45
தீப்பற்றும் வெப்பநிலை 86.1 °C (187.0 °F; 359.2 K)
வெடிபொருள் வரம்புகள் 1.1%-?[1]
Lethal dose or concentration (LD, LC):
207 மி.கி/கி.கி (வாய்வழி, எலி, 1969)
1800 மி.கி/கி.கி (வாய்வழி, எலி, 1944)
344 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 5 மில்லியனுக்குப் பகுதிகள் (22 mg/m3) [skin][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 2.3 மில்லியனுக்குப் பகுதிகள் (10 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
250 மில்லியனுக்குப் பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பாரா கிரெசால் (para-Cresol) என்பது CH3C6H4(OH). என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 4-மெத்தில்பீனால், பா-கிரெசால் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. திண்ம நிலையில் நிறமற்றதாகக் காணப்படும் இச்சேர்மம் பிற வேதிப்பொருட்களைத் தயாரிக்கும்போது பரவலாக ஒரு இடைநிலைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பீனால் வழிப்பொருளான இது ஆர்த்தோ கிரெசால் மற்றும் மெட்டா கிரெசால்களின் மாற்றியன் ஆகும்[3].

தயாரிப்பு[தொகு]

கல்கரியை உற்பத்தி செய்வதற்காக நிலக்கரித்தாரை வறுக்கும்போது பெறப்படும் ஆவியாகும் பொருட்களில் இருந்து பாரா கிரெசால் பாரம்பரிய முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் கசடின் எடையில் சிலசதவீதம் அளவுக்கு பீனாலும் கிரெசால்களும் காணப்படுகின்றன.

தற்போது தொழில் ரீதியாக பாரா கிரெசால் இரண்டு படிநிலைகளில் தயாரிக்கப்படுகின்றது, முக்கியமாக தொலுயீனை சல்போனேற்றம் செய்வதை முதல்படிநிலையாகக் கொண்ட தயாரிப்புமுறையில் பாரா கிரெசால் தயாரிக்கப்படுகிறது:

CH3C6H5 + H2SO4 → CH3C6H4SO3H + H2O

சல்போனேட்டு உப்பை கார நீராற்பகுப்பு செய்தால் கிரெசாலுடைய சோடியம் உப்பு உருவாகிறது.

CH3C6H4SO3Na + 2 NaOH → CH3C6H4OH + Na2SO3 + H2O

தொலுயீனை குளோரினேற்றம் செய்து நீராற்பகுப்பு செய்வதாலும் பாரா கிரெசாலை தயாரிக்க முடியும். சைமின் – கிரெசால் செயல்முறையில் பீனால் புரோப்பைலீனுடன் சேர்த்து ஆல்கைலேற்றம் செய்யப்படுகிறது. பின்னர் உருவாகும் சைமின் ஆக்சிசனேற்ற முறையில் ஆல்க்கைல் நீக்கம் செய்யப்படுகிறது. [3] [3]

பயன்பாடுகள்[தொகு]

ஆக்சிசனேற்ற எதிர்ப்பிகளை தயாரிப்பதற்கு பாரா கிரெசால் பயன்படுத்தப்படுகிறது. உதாரணம்: பியூட்டலேற்ற ஐதராக்சி தொலுயீன். ஒற்றை ஆல்க்கைலேற்ற வழிப்பொருட்கள் பிணைப்பு வினைகளில் ஈடுபட்டு டைபீனால் ஆக்சிசனேற்ற எதிர்ப்பிகளின் விரிவான குடும்பத்தை உருவாக்குகின்றன. நச்சுத்தன்மை குறைவாக இருப்பதால் இத்தகைய ஆக்சிசனேற்ற எதிர்ப்பிகள் மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன [3].

இயற்கைத் தோற்றம்[தொகு]

மனிதரிகளில்[தொகு]

மனிதப் பெருங்குடலில் புரதமானது பாக்டீரிய நொதித்தலினால் பாரா கிரெசால் உற்பத்தியாகிறது. மலம் மற்றும் சிறுநீரில் இது வெளியேறுகிறது [4]. மனித வியர்வையின் பகுதிப்பொருளாகவும் பாரா கிரெசால் உள்ளது. பெண் கொசுக்களை இச்சேர்மம் கவர்கிறது [5][6].

பிற இனங்களில்[தொகு]

பன்றியின் நாற்றத்திற்கும் பாரா கிரெசால் முக்கியமானதொரு உட்கூறாக உள்ளது [7]. ஆண் யானைகளின் காலத்தொடர்புள்ள இயக்குநீர் சுரப்பிகள் மதம்பிடிக்கும் காலத்தில் சுரக்கும் இயக்குநீரில் பீனாலும் பாரா கிரெசாலும் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன [8][9]. யுகுளோசா சயனுரா எனப்படும் தேனி வகைகளை ஈர்க்கும் சில சேர்மங்களில் பாரா கிரெசாலும் ஒன்றாகும். எனவே இவ்வகை தேனீக்களைப் பிடிக்கவும் ஆய்வு செய்யவும் பாரா கிரெசால் பயன்படுத்தப்படுகிறது [10].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0156". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "Cresol (o, m, p isomers)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 3.2 3.3 Fiege, Helmut (2000). "Cresols and Xylenols". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a08_025. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-527-30673-0. [page needed]
  4. Hamer, H. M.; De Preter, V.; Windey, K.; Verbeke, K. (2011). "Functional analysis of colonic bacterial metabolism: relevant to health?". AJP: Gastrointestinal and Liver Physiology 302 (1): G1–G9. doi:10.1152/ajpgi.00048.2011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0193-1857. 
  5. Hallem, Elissa A.; Nicole Fox, A.; Zwiebel, Laurence J.; Carlson, John R. (2004). "Olfaction: Mosquito receptor for human-sweat odorant". Nature 427 (6971): 212–3. doi:10.1038/427212a. பப்மெட்:14724626. Bibcode: 2004Natur.427..212H. 
  6. Linley, John R. (1989). "Laboratory tests of the effects of p-cresol and 4-methylcyclohexanol on oviposition by three species of Toxorhynchites mosquitoes". Medical and Veterinary Entomology 3 (4): 347–52. doi:10.1111/j.1365-2915.1989.tb00241.x. பப்மெட்:2577519. https://archive.org/details/sim_medical-veterinary-entomology_1989-10_3_4/page/347. 
  7. http://www.sciam.com/article.cfm?id=why-study-pig-odor[Full citation needed]
  8. Rasmussen, L.E.L; Perrin, Thomas E (1999). "Physiological Correlates of Musth: Lipid Metabolites and Chemical Composition of Exudates". Physiology & Behavior 67 (4): 539–49. doi:10.1016/S0031-9384(99)00114-6. பப்மெட்:10549891. https://archive.org/details/sim_physiology-behavior_1999-10_67_4/page/539. 
  9. Ananth, Deepa. "Musth in elephants". Zoos' Print Journal 15 (5): 259–62. doi:10.11609/jott.zpj.14.4.259-62. http://www.zoosprint.org/ZooPrintJournal/2000/May/259-262.pdf. பார்த்த நாள்: 2017-05-16. 
  10. Williams, Norris H.; Whitten, W. Mark (June 1983). "Orchid Floral Fragrances and Male Euglossine Bees: Methods and Advances in the Last Sesquidecade". Biological Bulletin 164 (3): 355–95. doi:10.2307/1541248. https://archive.org/details/sim_biological-bulletin_1983-06_164_3/page/355. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா_கிரெசால்&oldid=3521016" இலிருந்து மீள்விக்கப்பட்டது