பாத்வெல்
பாத்வெல் Badvel | |
---|---|
ஆள்கூறுகள்: 14°45′N 79°03′E / 14.75°N 79.05°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | ஓய்.எசு.ஆர் கடப்பா |
பரப்பளவு | |
• மொத்தம் | 60.93 km2 (23.53 sq mi) |
ஏற்றம் | 126 m (413 ft) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 70,626 |
• அடர்த்தி | 1,200/km2 (3,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 516227 |
வாகனப் பதிவு | ஆ.பி-04 |
பாத்வெல் (Badvel) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். பாத்வெல் நகரம் இரண்டு மண்டலங்களில் அமைந்துள்ளது. இது பாத்வெல் வருவாய் கோட்டத்தின் தலைமையகம் ஆகும்.[2] நகரின் பெரும் பகுதி பாத்வெல் மண்டலத்தின் கீழும், மீதமுள்ள பகுதி கோபவரம் மண்டலத்தின் கீழும் வருகிறது. இது பாத்வெல் வருவாய் கோட்டத்தின் கீழ் வருகிறது.[3]
புரோட்டத்தூர் நகரத்திலிருந்து பாத்வெல் வெறும் 57 கிலோமீட்டர்கள் (35 mi) தொலைவிலும் கடப்பா நகரிலிருந்து 59 கிலோமீட்டர்கள் (37 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்விரண்டு நகரங்களும் கடப்பா மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகும்/. கடப்பா மாவட்டத்தின் 3 ஆவது பெரிய நகரமாக பாத்வெல் நகரமும், அதைத் தொடர்ந்து கடப்பா மற்றும் புரோட்டத்தூர் ஆகியவை இதை தொடர்ந்தும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண் -67 பாத்வெல் நகரம் வழியாக செல்கிறது.. புவியியல் ரீதியாக இந்த நகரம் கிழக்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற தொகுதி
[தொகு]பாத்வெல் நகரம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.. தற்போது இது பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தாசரி சுதா.என்பவராவார்.[4]
கல்வி
[தொகு]இந்நகரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வி கற்பிக்கப்படுகிறது, மேலும் இங்கு மாநிலத்தின் விவசாயக் கல்லூரி ஒன்றும் உள்ளது. [5][6] பல்வேறு பள்ளிகளும் ஆங்கிலம், தெலுங்கு. மொழிகளை பயிற்று மொழிகளாகக் கொண்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
- ↑ "Andhra Pradeesh clears notification for Badvel revenue division". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 30 September 2021. பார்க்கப்பட்ட நாள் 24 April 2022.
- ↑ "Revenue Divisions and Mandals". Official website of YSR Kadapa District. National Informatics Centre- Kadapa, Andhra Pradesh. Archived from the original on 6 July 2015. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (pdf). Election Commission of India. p. 22. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
- ↑ "School Education Department" (PDF). School Education Department, Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 27 December 2015. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
- ↑ "The Department of School Education - Official AP State Government Portal | AP State Portal". www.ap.gov.in. Archived from the original on 7 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.