பாத்திமா அசீசு
பாத்திமா அசீசு Fatima Aziz | |
---|---|
فاطمه عزیز | |
2016 ஆம் ஆண்டில் பாத்திமா அசீசு | |
ஆப்கானித்தான் நாடாளுமன்றம் for குந்தூஸ் மாகாணம் | |
பதவியில் 2005 – 12 மார்ச்சு 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1973[1] குந்தூசு, ஆப்கானித்தான் இராச்சியம் |
இறப்பு | (அகவை 47) சுவிட்சர்லாந்து |
அரசியல் கட்சி | சுயேட்சை |
பிள்ளைகள் | 4 |
முன்னாள் கல்லூரி | காபூல் மருத்துவப் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி,மருத்துவர் |
பாத்திமா அசீசு (Fatima Aziz) ஆப்கானித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதியாவார். 2005 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் நடந்த முதல் சுதந்திர நாடாளுமன்றத் தேர்தலில் குந்தூசு மாகாணத்தின் பிரதிநிதியாக இவர் நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 மற்றும் 2018 தேர்தல்களில் இவர் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2021 இல் புற்றுநோயால் இறக்கும் வரை பாத்திமா நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]பாத்திமா அசீசு 1973 ஆம் ஆண்டு ஆப்கானித்தானின் குந்தூசு மாகாணத்தில் பிறந்தார். [2] 1987 ஆம் ஆண்டில், குந்தூசு மாகாணத்தில் உள்ள நசுவான் உயர்நிலைப் பள்ளியில் தனது இடைநிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார். 1993 ஆம் ஆண்டு காபூல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவப் பட்டம் பெற்றார்.[3]
தொழில்
[தொகு]13 ஆண்டுகளாக பாத்திமா தாய் -கரு மருத்துவத்தில் காபூல் வசீர் அக்பர் கானில் உள்ள மலாய் மருத்துவமனைகளில் பணியாற்றினார். அரசு சாரா மருத்துவ நிறுவனங்களிலும் , அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைய மருத்துவமனையிலும் இவர் பணியாற்றியுள்ளார். 2001 ஆம் ஆண்டு ஆப்கானித்தான் போருக்குப் பிறகு, பாத்திமா குந்தூசு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு ஒரு சுயேச்சை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][2] 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரம்பரிய முறை தேர்தலான லோயா சிர்காவின் ஒரு பகுதியாக இவர் இருந்தார்.[2] வோலேசி சிர்கா எனப்படும் கீழ் சபை 2005 தேர்தலின் போது, அசீசு 4,725 வாக்குகளைப் பெற்றார்.[3] தகவல் தொடர்பு, போக்குவரத்து, நகர வளர்ச்சி மற்றும் நகராட்சிகள் குழுவின் துணைத் தலைவராக இருந்தார். ஆப்கானித்தான் அமைதி சிர்கா தேர்தல்கள் 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அசீசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தேசிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்களில் இவரும் ஒருவர்.
தாராளவாத நிலைப்பாடுகள் மற்றும் பாலின சமத்துவத்தை ஆதரித்த செயல்பாடுகளுக்காக பாத்திமா நன்கு அறியப்படுகிறார். நாடாளுமன்றத்தில் இவரது கருத்துக்கள் சர்ச்சையை ஈர்த்தன.[2][4] 2012 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தலிபான் தாக்குதல்களுக்குப் பிறகு பாத்திமா குந்தூசின் பிரதிநிதியானார். தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்திற்கு 2015 குந்தூசு போரின் போது சர்வதேச ஊடகங்களுக்கு இவர் தகவல்களை வழங்கினார் போரின் காரணமாக குடும்பத்துடன் நகரத்தை விட்டு வெளியேறினார்.[5] நகரம் தலிபான்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தபோது, நகரத்தின் விடுதலைக்காக ஆப்கானித்தான் அரசு மற்றும் சர்வதேச சமூகத்திற்கு பிரச்சாரம் செய்தார். அதே நேரத்தில் மைதானத்தில் மனிதாபிமான நிலைக்கும் கவனத்தை ஈர்த்தார்.[6] 2019 ஆம் ஆண்டு ஆப்கானித்தான் சனாதிபதி தேர்தலுக்கான குந்தூசில் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக வாக்களிப்பு குறைவாக இருப்பதாக பாத்திமா கூறினார். கோவிட்-19 தொற்றுநோயின் போது, ஊழல் மற்றும் அரசாங்க தோல்விகள் காரணமாக ஆக்சிசன் தொட்டிகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தியதாக இவர் நம்பினார்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு
[தொகு]பாத்திமா அசீசின் முதல் மொழி தாரி மொழியாகும். இவர் பாசுடோ, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளையும் பேசினார்.[3] ஒரு பொறியாளரை மணந்து, இரண்டு மகள்களையும் இரண்டு மகன்களையும் பெற்றார். இவருடைய சகோதரர் குந்தூசு பொருளாதார அமைச்சகத்தின் பிரதிநிதியாக இருந்தார்.[2] 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானார். ஆக்சிசன் குழாயுடன் படுக்கையில் இவரது காணொளியை இணையதளத்தில் வெளியிட்டார்.[8] புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 12 மார்ச் 2021 அன்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fatima Aziz 'member of parliament' dies of cancer at 47". Khaama Press. 12 March 2021. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Database". Afghan Bios. பார்க்கப்பட்ட நாள் 23 September 2019."Database".
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Wolesia Jirga (House of People): Fatima Aziz's biography". National Assembly of the Islamic Republic of Afghanistan. Archived from the original on 2 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 14 March 2021.
- ↑ "The Asian Forum of Parliamentarians on Population and Development". www.afppd.org. பார்க்கப்பட்ட நாள் 23 September 2019.
- ↑ "BBC World Service - World Have Your Say, What is Happening in Kunduz?, Kunduz MP: 'I'm worried for my people'". BBC. பார்க்கப்பட்ட நாள் 23 September 2019.
- ↑ "Human Rights Organizations Should Pay Serious Consideration To Kunduz Situation, Fatima Aziz". bakhtarnews.com.af. Archived from the original on 23 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 23 September 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Lynn, Bryan (6 July 2020). "Afghan Man Reopens Oxygen Factory to Help Coronavirus Patients". VOA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 March 2021.
- ↑ Tameem Akhgar (2 July 2020). "Long-Shut Factory Helps COVID-Struck Afghans Breathe Free". The Diplomat. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.