பாது (திருவிழா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாது என்பது தெற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் சமூக விழாவாகும். பெங்காலி நாட்காட்டியில் ஐந்தாவது மாதமான பத்ராவின் முதல் நாளிலிருந்து இந்த திருவிழா தொடங்கி அம்மாத இறுதி வரை தொடர்கிறது. [1]

பஞ்சகோட்டின் பத்ராவதி (பத்ரேஸ்வரி என்றும் அழைக்கப்படும்)  இளவரசி மாயமாக மறைந்த கதைப்படியே இவ்விழா கொண்டாடப்படுகிறது. பத்ராவதியின் பக்தர்கள் அவளது உருவத்தை உருவாக்கி அதன் முன் மாதம் முழுவதும் பாடி ஆடுவார்கள். பத்ராவின் கடைசி நாளில், அவர்கள் ஆற்றங்கரையில் கூடி, உருவ சிலையை தண்ணீரில் கரைப்பார்கள். தொழில்முறை பாடகர்கள் மட்டுமல்லாது ஆர்வமுள்ள யாவரும் பாடல்களைப், முக்கியமாக திருமணத்தை மையமாகக் கொண்டுள்ள பாடல்களை பாடுவது  திருவிழாவின் முக்கிய சடங்காகும். கொண்டாட்டங்களில் கண்காட்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். [2]

நடைப்பெறும் இடம்[தொகு]

மேற்கு வங்காளத்தின் புருலியா, பாங்குரா, பிர்பூம் மற்றும் பர்தாமான் மற்றும் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் விமரிசையாக இந்த பாது திருவிழா பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது.[3].

நாட்டுப்புறவியல்[தொகு]

பாது திருவிழாவின் தோற்றம் பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது இளவரசி பத்ரேஸ்வரி எனப்படும் பாதுவைப் பற்றியது, அவர் லட்சுமி தேவியின் உருவகமாக கருதப்படுகிறாள்.லாரா என்னும் கிராமத்தை சேர்ந்த மோரல் என்பவரால் வத்ராமா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்குழந்தையை மோரலும் அவரது மனைவியும் பத்ராவதி என்று பெயரிட்டனர். அவளுக்கு பாது என்ற புனைப்பெயரும் உண்டு. அழகாகவும் அறிவாகவும் வளர்ந்த பத்ரேஸ்வரியைப் பற்றி கேள்விப்பட்ட காசிபூரின் (புருலியா மாவட்டத்தில் உள்ள) மன்னரான  நீலமணி சிங் தத்தெடுத்து வளர்க்க விரும்பினார். [4].

ஆனால் அவளுக்கும் அவளது வளர்ப்பு பெற்றோருக்கும் அவ்வாறு தத்து கொடுக்க விருப்பமில்லாததால், அவளை இளவரசி என்று ஊர் முழுவதும் அறிவித்தான். பதினாறு வயதான போது, பாது பக்கத்து கிராமத்தில் உள்ள  ஒரு மருத்துவரின் மகனான அஞ்சன் என்பவரைக் காதலித்தார். அதனை ஏற்காத மன்னனோ, அஞ்சனை ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் சிறையில் அடைத்தான். பாது தனது இரண்டு தோழர்களுடன் ராச்சியம் முழுவதும் பயணம் செய்து சிறைச்சாலைகளுக்கு அருகில் அவளது காதலைப் பற்றி பாடினார், அப்படியாக அஞ்சன் தனது குரலைக் கேட்பார் என்று நம்பி பல்வேறு சோக பாடல்களை பாடினார். இவ்வகை  பாதுவின் பாடல்கள் ''ராதா பாவம்'' என்று கூறப்படுகிறது. ஒரு நாள், உள்ளம் உருகும் பாதுவின் பாடலைக் கேட்ட மன்னனின்உள்ளம் உருகி, அஞ்சனை விடுவித்தான். மேலும் திருமணத்திற்கும் ஒப்புக்கொண்டான்.[5].

ஆனால் எதிர்பாராத விதமாக வரும் வழியில் அஞ்சன் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். தனது காதலன் இறந்த துக்கத்தால் பாதிக்கப்பட்ட பாது யாருக்கும் தெரியாமல் மறைந்துவிட்டதாக நம்பப்படுகிறது. [6].

இளவரசி பாது பாடியதாக நம்பப்படும் பாடல்களை அடிப்படையாகக் கொண்டதே இந்த பாது திருவிழாவில் பாடப்படும் பாடல்களாகும்.

பாடல்கள்[தொகு]

பாது கான், பாது திருவிழாவின் பிரிக்க முடியாத பகுதி கிராமப்புற சமுதாயத்தின் வண்ணங்களை பிரதிபலிக்கிறது. பாது திருவிழாவின் முக்கிய அங்கமே இந்த பாது கான் (பாடல்)கள்தான், கிராமப்புற வாழ்க்கையின் அனைத்து சாயல்களைக் காட்டும் விதத்திலும், இளம்பெண்களின் அன்பை  சித்தரித்து தன்னிச்சையாக எழுதப்பட்ட பாடல்களே பாது பாடல்கள் என பாடப்படுகின்றன. இது பர்த்வான், பாங்குரா மற்றும் மிட்னாபூர் ஆகிய இடங்களில் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் பிர்பூமில் இந்த தனித்துவமான வகைப்பாடல்கள் தற்காலத்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி பாடல்களின் பிரபல்யத்தால் அச்சுறுத்தப்படுகிறது. [7] பாது காதல் தனிமையில் இந்த பாடல்களை பாடியுள்ளதால், அவரது பாடல்களைப் பாடும் பெரும்பாலான பெண்களும் திருமணமாகாத பெண்களே. பாது மேளமும் நடனமும் சேர்ந்து காணப்படுகிறது. மேலும் பாதுவின் பாடல்களையும் அவளது அசாதாரண வாழ்க்கையையும் போற்றும் வகையில், மன்னன் பாதுவின் பெரிய சிலையை உருவாக்கி அவளை வணங்கத் தொடங்கினான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Folk Festivals of Bangladesh
  2. Mukhopadhyay, Anjalika (2012). "Bhadu Festival". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Bhadu_Festival. 
  3. "புருலியாவில் "பாது" பண்டிகை கொண்டாட்டம்".
  4. "வங்காளத்தின் பாது பாடல்களில் விந்தையின் கதை".
  5. "பாது திருவிழா : 'பத்ர மாதத்தில் பாத பூஜை', இந்த விழாவின் வரலாறு".
  6. Roma Chatterjee. "Orality, Inscription and the Creation of a New Lore". Cultural Analysis, Volume 6, 2007. Archived from the original on 28 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-14.
  7. Pranesh Sarkar. "Bhadu gaan, a dying tradition in Birbhum". Asia Africa Intelligence Wire. Archived from the original on 12 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாது_(திருவிழா)&oldid=3669599" இலிருந்து மீள்விக்கப்பட்டது