பாண்டவ்கடா அருவி
பாண்டவ்கடா அருவி Pandu Falls | |
---|---|
காகர் அருவி | |
![]() பாண்டவ்கடா அருவி, கார்கர், நவி மும்பை | |
![]() | |
அமைவிடம் | கார்கர், நவி மும்பை, ராய்கட் மாவட்டம், இந்தியா |
ஆள்கூறு | 19°03′24″N 73°03′47″E / 19.05668°N 73.06303°E |
வகை | வடிதல் |
மொத்த உயரம் | 107 மீட்டர்கள் (351 அடி)[1] |
பாண்டவ்கடா அருவி (Pandavkada Falls) என்பது மகாராட்டிர மாநிலம் நவி மும்பையின் புறநகர்ப் பகுதியான கார்கரில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். சுமார் 107 மீட்டர் உயரமுள்ள இந்த நீர்வீழ்ச்சியானது இயற்கையாக உள்ள பாறை மேற்பரப்பிலிருந்து தண்ணீரைக் கொட்டுகிறது.
வரலாறு
[தொகு]பாண்டவ்கடா அருவி, இந்துப் பாரம்பரிய புராணங்களின்படி காடுகளுக்கு நாடுகடத்தப்பட்டபோது பாண்டவர்கள் ஒருமுறை இந்த இடத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த அருவி பாண்டவ்கடா எனப் பெயரைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பாண்டவர்கடாவுக்குள் பாண்டவர்கள் வந்த இடத்தில் ஒரு பெரிய சுரங்கப்பாதை உள்ளது. இதனால்தான் இது பாண்டவர்கடா என்று அழைக்கப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]பாண்டவ்கடா நீர்வீழ்ச்சி கார்கரில் அமைந்துள்ளது. இங்கு பொதுப் பேருந்தில் பயணித்துச் செல்லலாம்.
ஆபத்து
[தொகு]பாண்டவ்கடா நீர்வீழ்ச்சி ஆபத்தான இடமாக சிட்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு அருவியில் நீராடச் சென்ற 12 மாணவர்கள் உயிரிழந்தனர். முன்னதாக, 2005ஆம் ஆண்டு 4 மாணவர்கள் அருவியில் மூழ்கி உயிரிழந்ததால், வனத்துறையினரால் இங்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அடுத்து, 2019ஆம் ஆண்டு 4 மாணவர்கள் அருவியில் தங்கள் வாழ்வினை இழந்தனர். இருப்பினும், கார்கர் காவல் நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, சுற்றுலாப் பயணிகளின் விருப்பப்படி, தங்கள் சுய விருப்பத்தின் பேரில் அருவியினைப் பார்வையிட ஒரு நபருக்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Waterfalls in India, archived from the original on 26 சூலை 2012, retrieved 25 சூலை 2011
{{citation}}
: Unknown parameter|agency=
ignored (help) - ↑ Despite being barred, people are still visiting deadly Pandavkada waterfall, retrieved 25 July 2011