பாசுபோனியம் அயோடைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாசுபோனியம் அயோடைடு
| |
வேறு பெயர்கள்
அயோடின் பாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
12125-09-6 | |
ChemSpider | 145802 |
EC number | 235-189-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166618 |
| |
UNII | 70782D13AF |
பண்புகள் | |
PH 4I | |
வாய்ப்பாட்டு எடை | 161.910 கி/மோல் |
கொதிநிலை | 62 °C (144 °F; 335 K) பதங்கமாகும்[1] |
சிதைவடையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம் (P4/nmm) |
Lattice constant | a = 6.34 Å, c = 4.62 Å |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாசுபோனியம் அயோடைடு (Phosphonium iodide) என்பது PH4I என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பதிலீடு செய்யப்படாத பாசுபோனியம் நேர்மின் அயனியைக் (PH+4) கொண்ட உப்புக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். பாசுபோனியம் அயோடைடு பொதுவாக பாசுபீனுக்கான சேமிப்பகமாகவும்[2] பாசுபரசை கரிம மூலக்கூறுகளாக பதிலீடு செய்வதற்கான் வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]
தயாரிப்பு
[தொகு]டைபாசுபரசு டெட்ரா அயோடைடு சேர்மத்துடன் தனிமநிலை பாசுபரசையும் தண்ணீரையும் சேர்த்து 80 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி உப்பை பதங்கமாதலுக்கு அனுமதித்தால் பாசுபோனியம் அயோடைடு உருவாகும்.[4][5]
- 10 P2I4 + 13 P4 + 128 H2O -> 40 PH4I + 32 H3PO4
பண்புகள்
[தொகு]கட்டமைப்பு
[தொகு]பாசுபோனியம் அயோடைடின் படிக அமைப்பு நாற்கோணக வடிவத்தில் P4/nmm என்ற இடக்குழுவுடன் உள்ளது. இது NH4Cl படிக கட்டமைப்பின் சிதைந்த வடிவமாகும். அலகு செல்லின் தோராயமான பரிமாணங்கள் 634×634×462 பைக்கோமீட்டர்களாக உள்ளன.[6] இந்தப் படிகத் திட்டத்தில் உள்ள ஐதரசன் பிணைப்பு PH+4 நேர்மின் அயனியை ஏற்படுத்துகிறது. ஐதரசன் அணுக்கள் I−அயனியை நோக்கிச் செல்லும் வகையில் நோக்குநிலைப்படுத்தப்படுகின்றன.[7]
வேதிப் பண்புகள்
[தொகு]62 பாகை செல்சியசு மற்றும் வளிமண்டல அழுத்தத்தில், பாசுபோனியம் அயோடைடு பதங்கமாகிறது. பின்னர் இது பின்னோக்கி பாசுபீன் மற்றும் ஐதரசன் அயோடைடு சேர்மங்களாக பிரிகையடைகிறது.[1] காற்றில் மெதுவாக ஆக்சிசனேற்றம் அடைந்து அயோடின் மற்றும் பாசுபரசு ஆக்சைடுகளை கொடுக்கிறது. நீராற்பகுப்புக்கு உட்பட்டு பாசுபீன் மற்றும் HI சேர்மங்களைக் கொடுக்கிறது:[8]
- PH4I <-> PH3 + HI
பொட்டாசியம் ஐதராக்சைடுடன் பாசுபோனியம் அயோடைடின் நீரிய கரைசலை கலப்பதன் மூலம் பாசுபீன் வாயு உருவாகிறது.[9]
- PH4I + KOH → PH3 + KI + H2O
முனைவற்ற கரைசலில் உள்ள அயோடின் மற்றும் புரோமினுடன் இது வினைபுரிந்து பாசுபரசு ஆலைடுகளைக் கொடுக்கிறது; உதாரணத்திற்கு:
- 2PH4I + 5I2 → P2I4 + 8HI[4]
கரிம வேதியியலில் பாசுபோனியம் அயோடைடு ஒரு சக்திவாய்ந்த மாற்று வினையாக்கியாகும். எடுத்துக்காட்டாக, இது பைரிலியத்தை பதிலீடு வழியாக ஒரு பாசுபீனாக மாற்றும்.[3] 1951 ஆம் ஆண்டில், PH4I சேர்மம் அசிட்டைல் குளோரைடுடன் வினைபுரிந்து அறியப்படாத பாசுபீன் வழித்தோன்றலை உருவாக்குகிறது என்று கிளென் ஆல்சுடெட்டு பிரவுன் கண்டறிந்தார். ஒருவேளை CH3C(=PH)PH2·HI.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Smith, Alexander.; Calvert, Robert Peyton. (July 1914). "The Dissociation Pressures of Ammonium- and Tetramethylammonium Halides and of Phosphonium Iodide and Phosphorus Pentachloride". Journal of the American Chemical Society 36 (7): 1363–1382. doi:10.1021/ja02184a003. https://pubs.acs.org/doi/pdf/10.1021/ja02184a003. பார்த்த நாள்: 6 October 2020.
- ↑ Morrow, B. A.; McFarlane, Richard A. (July 1986). "Trimethylgallium adsorbed on silica and its reaction with phosphine, arsine, and hydrogen chloride: an infrared and Raman study". The Journal of Physical Chemistry 90 (14): 3192–3197. doi:10.1021/j100405a029. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. https://pubs.acs.org/doi/pdf/10.1021/j100405a029.
- ↑ 3.0 3.1 Mei, Yanbo (2020). Complexes, Heterocycles, and Depolymerizable Polymers. Made from Building Blocks with Low-coordinated Phosphorus (Thesis). ETH Zurich. p. 18. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3929/ethz-b-000431853. hdl:20.500.11850/431853. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
- ↑ 4.0 4.1 4.2 Brown, Glenn Halstead (1951). Reactions of phosphine and phosphonium iodide (PhD). Iowa State College. பார்க்கப்பட்ட நாள் 5 Oct 2020.
- ↑ Work, J. B.; Mattern, J. A.; Antonucci, R. (5 January 2007). "Phosphonium Iodide". Inorganic Syntheses: 141–144. doi:10.1002/9780470132333.ch41.
- ↑ Dickinson, Roscoe G. (July 1922). "The Crystal Structure of Phosphonium Iodide". Journal of the American Chemical Society 44 (7): 1489–1497. doi:10.1021/ja01428a015. https://zenodo.org/record/2218537.
- ↑ Sequeira, A.; Hamilton, Walter C. (September 1967). "Hydrogen Bonding in Phosphonium Iodide: A Neutron-Diffraction Study". The Journal of Chemical Physics 47 (5): 1818–1822. doi:10.1063/1.1712171. Bibcode: 1967JChPh..47.1818S.
- ↑ Levchuk, Ievgen (2017). Design and optimization of luminescent semiconductor nanocrystals for optoelectronic applications (PDF) (faculty). University of Erlangen–Nuremberg. p. 140. பார்க்கப்பட்ட நாள் 6 Oct 2020.
- ↑ Osadchenko, Ivan M; Tomilov, Andrei P (30 June 1969). "Phosphorus Hydrides". Russian Chemical Reviews 38 (6): 495–504. doi:10.1070/RC1969v038n06ABEH001756. Bibcode: 1969RuCRv..38..495O.