உள்ளடக்கத்துக்குச் செல்

பாசுகல் தரவுத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசுகல் (PASCAL) என்பது அறிவியல் நூலியல் தரவுத்தளமாகும். இது பிரான்சின் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் பராமரிக்கப்படுகிறது. பாசுகல் அறிவியல், தொழினுட்பம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் உள்ள முக்கிய அறிவியல் ஆய்விதழ்களைக் குறிப்பாக ஐரோப்பிய ஆய்வுக் கட்டுரைகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து உள்ளடக்கியது.[1][2]

2012 வரை, பாசுகல் 17 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளின் தரவுத்தளத்தைத் பராமரிக்கிறது. இவற்றில் 90% கட்டுரையாளர் சுருக்கங்களாகும். இதில் உள்ள உள்ளடக்கம் 1973 முதல் தற்போது வரை உள்ளது. இதன் மூல ஆவணங்களில் 88% (3,085 பன்னாட்டுத் தலைப்புகள்) ஆய்விதழ் கட்டுரைகளும் 9% பத்திரிகை கட்டுரைகளும் 3% காப்புரிமைகளும் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PASC - Pascal datasheet". Archived from the original on 2009-12-24. பார்க்கப்பட்ட நாள் 2009-12-26.
  2. Jagodzinski-Sigogneau, M.; Bauin, S.; Courtial, J. P.; Feillet, H. (1991). "Scientific innovation in bibliographical databases: A comparative study of the science citation index and the pascal database". Scientometrics 22: 65–82. doi:10.1007/BF02019275. https://archive.org/details/sim_scientometrics_1991-09_22_1/page/65. 
  3. "PASCAL - Inist-Cnrs". Inist.fr. Archived from the original on 2012-05-12. பார்க்கப்பட்ட நாள் 2012-05-31.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுகல்_தரவுத்தளம்&oldid=3924275" இலிருந்து மீள்விக்கப்பட்டது