பாசானைட்டு
பாசானைட்டு Bassanite | |
---|---|
![]() பாசானைட்டு (30 / 26 மில்லிமீட்டர் அலவில் வெண்மை நிறத்துடன் சிறிதளவு கிப்சம் படிகங்கள்) | |
பொதுவானாவை | |
வகை | [சல்பேட்டு]]கனிமம் |
வேதி வாய்பாடு | CaSO4•12H2O |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை |
படிக இயல்பு | நுண்ணிய ஊசிப் படிகங்கள், போலி அறுகோணம்l |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
இரட்டைப் படிகமுறல் | {101} இல் இரட்டை சமதளம் |
மிளிர்வு | மண் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | அரையாக ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.69–2.76 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.550–1.559, nβ = 1.560, nγ = 1.577–1.584 |
2V கோணம் | 10–15° |
Alters to | சூடுபடுத்தினால் நீர் நீக்கமடைந்து நீரற்ற ஐதரைட்டாக மாறுகிறது. |
மேற்கோள்கள் | [1][2][3] |
பாசானைட்டு (Bassanite) என்பது CaSO4•12H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் சல்பேட்டு கனிமம் என்று இது விவரிக்கப்படுகிறது. ஒரு CaSO4 அலகுக்கு அரை மூலக்கூறு தண்ணீர் என்ற இயைபு காணப்படுவதால் இதை கால்சியம் சல்பேட்டு எமியைதரேட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.
1910 ஆம் பாசானைட்டு கனிமம் முதன்முதலாக இத்தாலி நாட்டின் தென் பகுதியிலுள்ள விசுவியசு மலையில் கணடறியப்பட்டது. இந்நாட்டைச் சேர்ந்த 1853-1916 காலப்பகுதியில் வாழ்ந்த தொல்லுயிரியல் அறிஞர் பிரான்சிசுகோ பாசானியின் நினைவாக கனிமத்திற்கு பாசானைட்டு எனப் பெயரிடப்பட்டது. [2]
விசுவியசு மலையில் இது இலியுசைட், டெப்ரைட்டு, எரிமலைவாய் நீராவித் துளை படிவுகளுக்குள் கிப்சம் கனிமத்தின் மாறுபாடு வகை கனிமமாகக் காணப்பட்டது. இது கலிபோர்னியா மற்றும் ஆத்திரேலியாவில் உலர்ந்த ஏரி படுகைகளில் காணப்படுகிறது. குகைகளில் கிப்சத்துடன் உள்ளடுக்கில் ஒன்றிணைக்கப்பட்டும் கிடைக்கிறது[2].