பாக்டீரியாஸ்ட்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்டீரியாஸ்ட்ரம்
Bacteriastrum delicatulum 06-2(200X).jpg
Bacteriastrum delicatulum
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
தரப்படுத்தப்படாத: SAR
பெருந்தொகுதி: Heterokonta
வகுப்பு: இருகலப்பாசி
வரிசை: Centrales
துணைவரிசை: Biddulphiineae
குடும்பம்: Chaetocerotaceae
பேரினம்: Bacteriastrum
Shadbolt, 1854
Species
 • See text

பாக்டீரியாஸ்ட்ரம் (Bacteriastrum) என்பது கீட்டோசெரோடேசியா குடும்பத்தை சார்ந்த இருகலப்பாசி பேரினமாகும்.[1] பக்ரீரியாஸ்ட்ரமினில் 30 க்கும் மேற்பட்ட விதை வகைகள் உள்ளன, பாக்டீரியாஸ்ட்ரம் பேரினத்தில் 30 க்கும் மேற்பட்ட வரையறுக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலானவை தற்போது இந்த பேரினத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சில புதிய சிற்றினங்கள் இந்தப் பேரினத்தில் சேர்க்கப்பட்டுகின்றன.[2]

விளக்கம்[தொகு]

பாக்டீரியாஸ்ட்ரம் பரந்து காணப்படக்கூடிய கடலில் மிதந்து வாழும் பாசி வகை உயிரினமாகும். இதன் மரபணு பெரும்பாலும் கீட்டோசெரஸ் உடன் தொடர்புடையது. ஆனால் இந்த உயிரினம் ஆரச்சமச்சீர் உடலமைப்பு மற்றும் ஊடுருவக்கூடிய நுண்முட்களை கொண்டுள்ளது. இதன் கூட்டுயிரிகள் வளையம் போன்ற அமைப்பிலும்மற்றும் செல்கள் , வளையம் போன்ற உயிரின் அடிப்பகுதியில் உள்ள நுண்முட்களால் பிரிக்கப்பட்டுள்ளது. செல்களுக்கிடையே சிறிய இடைவெளியையும் கொண்டுள்ளது. இந்த செல்கள் உருளை வடிவம் கொண்டது. இவை ஒன்றினைந்து இழைகள் போனற அமைப்பை உருவாக்குகிறது. ஒவ்வொரு செல்களும் பல நீண்ட உமிழ்கின்ற நுண்முட்களை கொண்டுள்ளது. இவை ஒன்றாகவோ அல்லது இரண்டு பிரிவாகவோ (கிளைகளாகவோ), செல்களுக்கு இடையேயுள்ள நுண்முட்கள் இணைந்தும் காணப்படுகிறது. இதில் உள்ள பிளாஸ்டிடுகள் வட்டு வடிவத்தை கொண்டுள்ளது. பாக்டீரியாஸ்ட்ரம் சோலிடேரியம் என்ற ஒரு உயிரியில் ஒரே ஒரு செல் மட்டும் உள்ளது.[3]

இனங்கள்[தொகு]

 • பாக்டீரியாஸ்ட்ரம் பைக்கோனியம் [4]
 • பாக்டீரியாஸ்ட்ரம் காஸ்மோஸ்ம் Pavilliard
 • பாக்டீரியாஸ்ட்ரம் டெலிகாட்டுலம் Cleve
 • பாக்டீரியாஸ்ட்ரம் எலிகன்ஸ்
 • பாக்டீரியாஸ்ட்ரம் எலாக்கேட்டம் Cleve
 • பாக்டீரியாஸ்ட்ரம் பர்கேட்டம்Shadbolt
 • பாக்டீரியாஸ்ட்ரம் ஹயாலினம் Lauder
 • பாக்டீரியாஸ்ட்ரம் மெடிடெரானியம்
 • பாக்டீரியாஸ்ட்ரம் பெராலிலம்D. Sarno, A. Zingone & D. Marino
 • பாக்டீரியாஸ்ட்ரம் சோலிடெரியம் Mangin
 • பாக்டீரியாஸ்ட்ரம் வேரியன்ஸ்

மேற்கோள்கள்[தொகு]

 1. Tomas, C. R., Hasle G. R., Syvertsen, E. E., Steidinger, K. A., Tangen, K., Throndsen, J., Heimdal, B. R., (1997). Identifying Marine Phytoplankton, Academic Press.
 2. Sarno, D., Zingone, A. & Marino, D. (1997). Bacteriastrum parallelum sp. nov., a new diatom from the Gulf of Naples, and new observations on B. furcatum (Chaetocerotaceae, Bacillariophyta). Phycologia 36: 257-266
 3. Round, F. E. and Crawford, R. M. (1990). The Diatoms. Biology and Morphology of the Genera, Cambridge University Press, UK.
 4. [1] Encyclopedia of Life
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்டீரியாஸ்ட்ரம்&oldid=2330775" இருந்து மீள்விக்கப்பட்டது