பாக்கித்தானில் வறட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமேவாலி, பஞ்சாப், பாக்கித்தானில் உலர்ந்து கிடக்கும் மண்.
உலகிலேயே தண்ணீர் அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் பாக்கித்தான் பதினைந்தாவது இடத்தில் உள்ளது.

பாக்கித்தானில் வறட்சி (Drought in Pakistan) என்பது அந்நாட்டில் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. 1998-2002 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி 50 ஆண்டுகளில் சந்தித்த மிக மோசமான வறட்சியாகக் கருதப்படுகிறது. பாக்கித்தானின் பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி, மோசமான வளர்ச்சி செயல்பாட்டிற்கு காரணமான முக்கிய காரணிகளில் வறட்சியும் ஒன்றாகும். குறிப்பாக பலுசிசுத்தான் மாகாணத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகள் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் வறட்சியின் பிடியில் இருக்கின்றன. அங்குள்ள மக்கள் பேரழிவுகளுடன் சேர்ந்து வாழ்கின்றனர் என செய்தி இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.Living with disasters இந்நாட்டில் வறட்சி பொதுவானதாக உள்ளது; ஒருவேளை பருவமழை பெய்யத் தவறினால் இங்கு கடும் வறட்சி ஏற்படும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [h/ History of drought in Pakistan – In detail | Pakistan Weather Portal (PWP)]. Pakistan Weather Portal (2011-05-09). Retrieved on 2013-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தானில்_வறட்சி&oldid=3903828" இலிருந்து மீள்விக்கப்பட்டது