பஹ் நதாவ்
பஹ் நாதவ் Bah Ndaw | |
---|---|
மாலியின் அதிபர் இடைக்காலம் | |
பதவியில் 25 செப்டம்பர் 2020 – 26 மே 2021 | |
பிரதமர் | மெளசா ஒயோன் |
துணை குடியரசுத் தலைவர் | ஆசுமி கோய்டா |
முன்னவர் | ஆசுமி கோய்டா (தலைவர், மாலி தேசிய மக்கள் சுவிசேச குழு) |
பின்வந்தவர் | ஆசுமி கோய்டா (இடைக்காலத் தலைவர்) |
பாதுகாப்புத் துறை அமைச்சர் | |
பதவியில் 28 மே 2014 – ஜனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | இப்ராகிம் பெளபாகார் கெய்ட்டா |
பிரதமர் | மெளசா மாரா |
முன்னவர் | செளமெயேலு போபெயே மாய்கா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 23 ஆகத்து 1950 சான், பிரஞ்ச் சூடான் (தற்பொழுது மாலி) |
பஹ் நதாவ் (Bah Ndaw)(N'Daw, N'Dah, மற்றும் N'Daou; பிறப்பு: ஆகஸ்ட் 23, 1950) ஒரு மாலியின் இராணுவ அதிகாரி மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் செப்டம்பர் 25, 2020 முதல் 26 மே 2021 வரை மாலியின் குடியரசுத்தலைவராகப் பணியாற்றினார். மே 2014 முதல் ஜனவரி 2015 வரை இவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் .
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
நதாவ் ஆகஸ்ட் 23, 1950 அன்று மாலியின் சான் நகரில் பிறந்தார்.[1] இவர் 1973 இல் மாலியன் ஆயுதப் படையில் தன்னார்வலராகச் சேர்ந்தார். அதே ஆண்டு கவுலிகோரோவில் உள்ள கூட்டு ராணுவ பள்ளியில் (ஈ.எம்.ஐ.ஏ) பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் உலங்கூர்தி பயிற்சி பெறச் சோவியத் ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டார்.
இராணுவ மற்றும் அரசியல் வாழ்க்கை[தொகு]
1977ஆம் ஆண்டில் நதாவ் மாலியன் வான்படையில் சேர்ந்தார்.[1] ஒரு கட்டத்தில் நதாவ் மாலி குடியரசுத்தலைவர் மெளசா டிராரோர் உதவியாளராக-டீ முகாமில் பணியாற்றினார்.[2] டிராரோவின் மனைவி அரசாங்க விவகாரங்களில் தலையிட்டதை எதிர்த்து 1990ல் பதவியிலிருந்து விலகினார். குடியரசுத் தலைவர் ஆல்பா ஓமர் கொனாரே என்டாவ் கீழ் 1992 மற்றும் 2002க்கு இடையில் மாலியன் வான்படையின் துணைத் தலைவராக பணியாற்றினார். 1994ஆம் ஆண்டில் இவர் பிரான்சின் பாரிஸில் உள்ள எக்கோல் டி குரேரில் பட்டம் பெற்றார். 2003ஆம் ஆண்டில் நதாவ் மாலியன் வான்படையின் தலைமை அதிகாரியாக ஆனார். இவர் மாலியன் தேசிய காவல் துறையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2008 முதல் 2012இல் ஓய்வு பெறும் வரை இவர் வீரர்கள் விவகாரங்கள் மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பணியகத்தின் தலைவராக இருந்தார்.[3] இவர் கர்னல்-மேஜர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[4]
28 மே 2014 அன்று, குடியரசுத்தலைவர் இப்ராகிம் பெளபாகார் கெய்டாவின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக செளமெயேலு போபெயே மாய்கா பிறகு பொறுப்பேற்றார்.[4][5][6] இவர் பதவியிலிருந்த காலத்தில் பிரான்சுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மாலியன் ஆயுதப் படைகளின் மறுசீரமைப்பிலும் இவர் பணியாற்றினார். பிரதமர் போது மோடிபோ கெய்டா, மூசா மாராவிடமிருந்து ஜனவரி 2015 பொறுப்பேற்ற போது நதாவ் பொறுப்பிலிருந்து விலகினார். இதற்கு அல்ஜியர்சு உடன்படிக்கை (2015) தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் காரணமாக அமைந்தது.
இடைக்கால தலைவர்[தொகு]
செப்டம்பர் 21, 2020 அன்று, சில வாரங்களுக்கு முன்னர் சதித்திட்டத்திற்குப் பிறகு, 17 பேர் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரால் நதாவ் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார். துணைத் தலைவராக ஆசுமி கோசுடா நியமிக்கப்பட்டார். இவர்களின் இடைக்கால அரசாங்கம் 18 மாத காலத்திற்கு 2020 மாலியன் ஆட்சி கவிழ்ப்பிற்குப் பின் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.[2] அரசியல்-மதத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் டிக்கோ குடியரசுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டதைப் பாராட்டினார். 2020 மாலியின் ஆர்ப்பாட்டங்களிலிருந்து செயலிலிருந்த M5-RFP இன் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.[5] நதாவ் செப்டம்பர் 25 அன்று பதவியேற்றார்.[7]
அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்ற பின்னர் ஊழல், தேர்தல் மோசடி எதிராக நடவடிக்கை எடுத்தல் மற்றும் முன்னர் செய்த சர்வதேச ஒப்பந்தங்களை மதிக்கப் போவதாக நதாவ் கூறினார்.[7] பயங்கரவாதப் படைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடருவதாகவும், மாலியின் ஆயுதப் படைகளால் பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.[8][9] நதாவ் பதவியேற்பைத் தொடர்ந்து , மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தின் (ECOWAS) ஆணையத்தின் தலைவர் ஜீன்-கிளாட் ப்ரூ, ஒரு குடிமகன் பிரதமராக நதாவால் நியமித்தால் மட்டுமே மாலிக்கு எதிரான தடையை நீங்கும் என்று கூறினார். செப்டம்பர் 27 அன்று என்டாவ் மொக்டர் ஓவானை பிரதமராக நியமிக்கப்பட்டார்.[10]
24 மே 2021 அன்று, நாதவ் மற்றும் ஓவானே இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு அருகிலுள்ள மாலியின் தலைநகர் பமாக்கோவிற்கு அருகிலுள்ள கேட்டி இராணுவ தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.[11] அடுத்த நாள், ஐ.நா தலைவர் அந்தோனியோ குத்தேரசு இவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுத்தார்.[12] மே 26 அன்று, நதாவ் தனது பதவி விலகலை அறிவித்தார்.[13]
ஆகஸ்ட் 27, 2021 அன்று, பா ந்தாவ் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[14]
விருதுகள் மற்றும் கெளரவங்கள்[தொகு]
நதாவ் மாலியின் தேசிய ஒழுங்கின் அதிகாரி.[3] நதாவ் இராணுவ தகுதி மற்றும் தேசிய தகுதி பதக்கம் பெற்றவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Mali : Bah N'DAOU (70 ans) est le nouveau chef de la transition, Assimi Goita, vice président" (பிரெஞ்சு). Mali.actu.net. 21 September 2020. 22 September 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ 2.0 2.1 "Bah Ndaw named Mali's interim president, colonel named VP". Al Jazeera. 21 September 2020. 22 September 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ 3.0 3.1 "Bah N'Daw alias "le grand": qui est le président de la transition du Mali" (பிரெஞ்சு). BBC News. 21 September 2020. 22 September 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ 4.0 4.1 "Mali : Qui est Bah Ndaw, le président de transition ?" (பிரெஞ்சு). La Tribune Afrique. 21 September 2020. 22 September 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ 5.0 5.1 Myers, Paul (21 September 2020). "Ex-Malian defence minister named interim president, junta leader as deputy". RFI. 22 September 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Pierre Buyoya pays a courtesy call to the newly appointed Malian Defence Minister, Mr Bah Ndao". African Union. 6 June 2014. 3 November 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ 7.0 7.1 Jones, Mayeni (25 September 2020). "Mali coup: Bah Ndaw sworn in as civilian leader". BBC News. 25 September 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Mali swears in interim president Bah Ndaw to lead transitional government". France 24. 25 September 2020. 25 September 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ Diallo, Tiemoko (25 September 2020). "Retired colonel sworn in as Mali interim president after coup". Reuters. 26 September 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Former Mali Foreign Minister Moctar Ouane named transitional PM". Al Jazeera. 27 September 2020. 28 September 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Mali: Prfawenflkuaewfesident, prime minister arrested in 'attempted coup'". Deutsche Welle. 25 May 2021. 25 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "UN calls for immediate release of Mali President Bah Ndaw". BBC. 25 May 2021. 25 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mali's president, prime minister resign after arrests by military". www.aljazeera.com. 2021-05-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mali : levée des restrictions pour Bah N'Daw et Moctar Ouane". www.jeuneafrique.com. 2021-08-28 அன்று பார்க்கப்பட்டது.