உள்ளடக்கத்துக்குச் செல்

பவளமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவளமலை தென்வடலாக (தெற்கு வடக்கு நீளவாக்கில்) அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். பச்சைமலைத் தொடரின் கிழக்குமுனையுடன் இது இணைந்து தொடர்கிறது. இணையும் பகுதியில் மூலைக்காடு என்னும் பெயர் பெற்றுள்ளது. இதனை உள்ள ஊர்களில் குறிப்பிடத்தக்கவை செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், துறையூர் போன்றவை. பவளமலையின் தெற்கு-முனையில் குறிச்சிமலை உள்ளது. பவளமலையின் ஒரு சிறு பகுதி கிழக்கிலும் நீள்கிறது. இப் பகுதிமலையின் பெயர் கணவாய்-மலை. கணவாய்மலையின் வடபால் கணவாய், அம்மாப்பாளையம், லாடாபுரம் முதலான ஊர்கள் உள்ளன.

பச்சைமலை, பவளமலைப் பகுதிகள் கிழக்குத் தொடர்ச்சி மலையின் பகுதியாகும். பச்சைமலை திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லைக்கோடு. அதுபோல, பவளமலை இன்றைய பாகுபாட்டில் உள்ள திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லைக்கோடாகும்.

பச்சைமலையின் முகட்டு நிலப்பரப்பில் சின்ன-பழமலை, பெரிய-பழமலை என்னும் ஊர்கள் உள்ளன. இவ்வூர்களில் மலையாளிகள் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

பெரிய-பழமலையில் 'பழமலையான் கோயில்'எனப்படும் காட்டுத்தெய்வக் கோயில் ஒன்று உள்ளது. இதில் 8 அடி உயரம், 12 அடி நீளம் கொண்டதாய் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வேங்கை உருவமும் நடப்பட்ட வேல்களும் உள்ளன. 12 அடி நீளம் கொண்ட அளவு காலடிக்கு 16 அடியாகும். அதனால் இதனை அங்குள்ள மக்கள் 'பதினாறடி வேங்கை' என வழங்குகின்றனர்.

இந்தச் செய்திகள் பவளமலையின் பழமையான பெயர் > பவழமலை > பழமலை என்பதை உணர்த்துகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளமலை&oldid=2896945" இலிருந்து மீள்விக்கப்பட்டது