கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுரையாசிரியன் செங்கைப்பொதுவன் இந்தப் பவளமலையின் உச்சியிலிருந்து தன் உழவு மாடுகளுக்குப் புல்லும், நன்செய் வயலில் நெற்பயிர்களுக்கு இடையே பயிர் உரமாகப் போட்டு மிதிக்கத் தழை-உரமும் பலநாள் தலையில் சுமத்துவந்து உழவுத்தொழில் செய்தவன்.
பச்சைமலை, பவளமலை மலையாளிகளோடு பழகியவன்.
தன் அம்மாவும் பாட்டியும், தம் இல்லத்தில் மலையாளுகளுக்குப் பல நாள் உணவு படைத்ததைக் கண்டு மகிழ்ந்தவன்.
மலையில் அவர்கள் வாழும் ஊர்களுக்கெல்லாம் சென்றபோது அவர்கள் வெட்டித் தந்த இளநீரைப் பருகியும், அறுத்துத் தந்த பலாச்சுளைகளை உண்டும் மகிழ்ந்தவன்.
அவர்களின் ஊரிலுள்ள புளியமரங்களின் பழங்களை விலை பேசி, புளி அடித்துச் சுமந்துகொண்டு மலையிலிருந்து இறங்கி வந்து தம் குடும்பத் தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டவன்.
அந்த மலையாளிகள் அறுத்துக் கட்டி வைத்திருக்கும் காவட்டாம் புல்லை விலைக்கு வாங்கி, கட்டுக்கட்டாகச் சுமந்து இறக்கிக்கொண்டு வந்து தான் வாழ்ந்த வீட்டுக் கூரையை வேய்ந்துகொண்டவன்.