பவனம் வெங்கடராமி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவனம் வெங்கடராமி ரெட்டி
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச அரசின் 8வது முதலமைச்சர்
பதவியில்
24 பிப்ரவரி 1982 – 20 செப்டம்பர் 1982
ஆளுநர்கே. சி. ஆபிரகாம்
முன்னையவர்தங்குதுரி அஞ்சய்யா
பின்னவர்கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 ஜூலை 1931
முப்பாலா, குண்டூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு7 ஏப்ரல் 2002(2002-04-07) (அகவை 70)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பவனம் ஜெயப்பிரதா
பிள்ளைகள்4

பவனம் வெங்கட்ராமி ரெட்டி (Bhavanam Venkatarami Reddy) (18 ஜூலை 1931 - 7 ஏப்ரல் 2002) 1982 இல் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை எட்டு மாதங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். பல்வேறு ஆந்திர அரசாங்கங்களில் மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ரெட்டி, பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் குண்டூர் மாவட்டத்தில் முப்பல்லா என்ற கிராமத்தில் பிறந்தார். பவனம் ஜெயபிரதா என்பவரை மணந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். [1] இவரது மகள்களில் ஒருவரான ராஜ்யஸ்ரீ, இதய அறுவை சிகிச்சை நிபுணரும், கிம்ஸ் மருத்துவமனையின் நிறுவனருமான பாஸ்கர் ராவ் பொல்லினேனியை மணந்தார். [2]

தொழில்[தொகு]

இவரது அரசியல் வாழ்க்கை 1970 களில் இளைஞர் காங்கிரசு செயல்பாட்டாளராக தொடங்கியது. அதிலிருந்து இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை அடைந்தார். பின்னர் 1978 இல் சென்னா ரெட்டியின் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார். 24 பிப்ரவரி 1982 இல் முதலமைச்சராவதற்கு முன்பு தங்குதூரி அஞ்சய்யாவின் அமைச்சரவையில் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 19 செப்டம்பர் 1982 வரை முதலமைச்சராக பணியாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அவர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது பவனம் ஜெயபிரதாவும் மாநில அரசில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former CM Bhavanam Venkatram dies | Hyderabad News - Times of India".
  2. "Dil Se : Dr Bhaskar Rao - Lifeline to the heart".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவனம்_வெங்கடராமி_ரெட்டி&oldid=3823106" இலிருந்து மீள்விக்கப்பட்டது