கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி
கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி | |
---|---|
ஐக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் 9வது முதலமைச்சர் | |
பதவியில் 9 அக்டோபர் 1992 – 12 டிசம்பர் 1994 | |
ஆளுநர் | கிருஷண் காந்த் |
முன்னையவர் | நெ. ஜனார்த்தன ரெட்டி |
பின்னவர் | என். டி. ராமராவ் |
பதவியில் 20 செப்டம்பர் 1982 – 9 ஜனவரி 1983 | |
ஆளுநர் | கே. சி. ஆபிரகாம் |
முன்னையவர் | பவனம் வெங்கடராமி ரெட்டி |
பின்னவர் | என். டி. ராமராவ் |
நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) | |
பதவியில் 1977–1979, 1984–1989, 1989–1991, 1991–1992, 1996–1998 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] அமகதாடு, லத்தகிரி கிராமம், கர்நூல் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 16 ஆகத்து 1920
இறப்பு | 27 செப்டம்பர் 2001 | (அகவை 81)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கே. சியாமளா |
பிள்ளைகள் | இரு மகன்கள், மூன்று மகள்கள் |
முன்னாள் கல்லூரி | பெசன்ட் பிரம்மஞான சபைக் கல்லூரி, மதனப்பள்ளி மற்றும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை (தமிழ்நாடு) |
தொழில் | விவசாயி, வழக்கறிஞர், விளையாட்டு வீரர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர் |
மந்திரி சபை | மத்திய அமைச்சர், இந்திய அரசு (1983–1984 and 1991–1992) |
செயற்குழு | தலைவர், பொதுக் கணக்குக் குழு (1961-1962), உறுப்பினர், மதிப்பீடுகளுக்கான குழு (1977-1982), உறுப்பினர், துணைச் சட்டத்திற்கான குழு (1990-1991), உறுப்பினர், ஆலோசனைக் குழு, நீர்வள அமைச்சகம் (1990-1991) |
உடைமைத்திரட்டு | துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்தியா , சாலைப் போக்குவரத்து , தொழில் துறை, நிறுவன விவகாரங்கள் (1983–1984), சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் (1991–1992) |
கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி (Kotla Vijaya Bhaskara Reddy) (16 ஆகஸ்ட் 1920 – 27 செப்டம்பர் 2001) 1983 பின்னர் 1992 முதல் 1994 வரையிலும் ஐக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். ரெட்டி இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். மக்களவைக்கு ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சரவையில் அமைச்சராகவும் பல நாடாளுமன்றக் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். 1999 தேர்தலில் தோல்வியடைந்த இவர், பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[2] ஐதராபாத்தில் உள்ள ஐதராபாத்து தாவரவியல் பூங்கா இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ரெட்டி, கர்நூல் மாவட்டத்திலுள்ள லத்தகிரி என்ற தொலைதூர கிராமத்தில் [3] ஒரு நில உரிமையாளரின் குடும்பத்தில் பிறந்தார். நந்தியால் கிராம ஊராட்சியில் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய இவர், இறுதியில் தேசிய அரசியலில் ஈடுபட்டார். மதனப்பள்ளி, பெசன்ட் பிரம்மஞான சபைக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் 1947 இல் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டமும் படித்தார்.[4] ரெட்டி, சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்றபோது, அரசியல் பணிச்சுமை காரணமாக அரிதாகவே வழக்கறிஞர் பயிற்சி செய்தார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]ரெட்டி 1950 ஜூன் 7 அன்று கே. சியாமளா என்பவரை மணந்தார்.[5] தம்பதியருக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர். இவரது மகன் கோட்லா ஜெயசூர்ய பிரகாச ரெட்டி கர்நூல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். கல்லூரியில் படிக்கும் போது வளைதடிப் பந்தாட்டம், கால்பந்து அணித்தலைவராகவும், 1967 முதல் 1969 வரை ஆந்திரப் பிரதேச விளையாட்டு கழகத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் கர்னூல் மாவட்டத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தினார்.[6]
அரசியல் வாழ்க்கை
[தொகு]ரெட்டி, மாவட்டத்தில் உள்ள பல சட்டமன்ற தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் இவர் மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இவரது முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளிலும் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்பதாவது முதல்வராக இருந்தார்.[7] என்.டி.ராமராவிடம் தனது முதல்வர் பதவியை இழந்த பிறகும் இவர் மரியாதைக்குரியவராக இருந்தார்.[8] இவர் இறந்த பிறகு, மாநில அரசால் இவரது நினைவாக "கிசான் காட்" கட்டப்பட்டது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biographical Sketch of Member of XII Lok Sabha". Parliamentofindia.nic.in. Archived from the original on 29 July 2011. பார்க்கப்பட்ட நாள் 15 October 2011.
- ↑ "Vijaya Bhaskar Statistics: Indian Elections 2009".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "We can take NTR in our stride: Vijayabhaskara Reddy". India Today. https://www.indiatoday.in/magazine/cover-story/story/19821015-we-can-take-ntr-in-our-stride-vijayabhaskara-reddy-772268-2013-08-02. பார்த்த நாள்: 13 February 2021.
- ↑ "We can take NTR in our stride: Vijayabhaskara Reddy". India Today. https://www.indiatoday.in/magazine/cover-story/story/19821015-we-can-take-ntr-in-our-stride-vijayabhaskara-reddy-772268-2013-08-02. பார்த்த நாள்: 14 February 2021.
- ↑ "Biographical Sketch of Member of 12th Lok Sabha". http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2550.htm. பார்த்த நாள்: 14 February 2021.
- ↑ "Former CM of Andhra Pradesh Kotla Vijayabhaskara Reddy passes away". India Today. https://www.indiatoday.in/magazine/obituary/story/20011015-former-cm-of-andhra-pradesh-kotla-vijayabhaskara-reddy-dies-774434-2001-10-15. பார்த்த நாள்: 13 February 2021.
- ↑ August 2, India today digital (15 October 1982). "We can take NTR in our stride: Vijayabhaskara Reddy". India Today.August 2, India today digital (15 October 1982).
- ↑ October 15, Amarnath K. Menon (15 October 2001). "Former CM of Andhra Pradesh Kotla Vijayabhaskara Reddy passes away". India Today.October 15, Amarnath K. Menon (15 October 2001).
- ↑ Peddayana, an article in Eenadu daily on 28 September 2009