பள்ளி மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளி மணியாக பயன்படுத்த தொங்கவிடபட்ட தண்டவாளத் துண்டு

பள்ளி மணி (School bell) பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பள்ளி நாளின், பாடவேளை மற்றும் இடைவேளையின் ஆரம்பம் மற்றும் முடிவுகளைக் குறிப்பது போன்ற முக்கியமான நேரங்களை அறிவிக்கப் பயன்படுகிறது.

சில பள்ளிகளில் மனிதர்கள் தங்களது கைகளால் அடிக்கும் வகையில் மணிகள் இருந்தன. தமிழ்நாட்டில் தண்டவாளத் துண்டை கட்டிவைத்து அதைத் தட்டி ஒலி எழுப்பும் வழக்கம் உள்ளது. தற்காலத்தில் பொதுவாக மின்சாரம் மூலம் இயக்கப்படும் மணிகள் உள்ளன. [1] சீனா, வட கொரியா மற்றும் தென் கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில், வெஸ்ட்மின்ஸ்டர் சைம்ஸ் முறை பொதுவாக மணியாக ஒலிக்கப்படுகிறது. [2]

செவித்திறன் குறைபாடுள்ள பள்ளிகள் மாற்று சமிக்ஞை முறைகளைப் பயன்படுத்துகின்றன, உதாரணமாக ஆசிரியரின் சைகை மொழி மற்றும் மணி ஒலிக்கும்போது ஒளிரும் விளக்குகள் ஆகிய வழிகளைப் பின்பற்றுகின்றனர்.. [3]

தர்வா தொடக்கப் பள்ளியில் ஒரு பள்ளிச் சிறுவன் பாரம்பரிய பள்ளி மணியை அடிக்கிறான்.
நவீன அமெரிக்க உயர்நிலைப் பள்ளியில் மணிக்காகப் பயன்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பி.ஏ ஒலிபெருக்கி/கடிகாரம்

சோமாலியாவில் பள்ளி மணி ஒலிக்க தடை[தொகு]

ஏப்ரல் 2010 இல், பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் ஓர் இஸ்லாமியப் போராளிக் குழுவான அல்-சபாப் - சோமாலியாவின் - பள்ளி மணிகள் தேவாலய மணிகளைப் போலவே ஒலிப்பதால் அவை தடை செய்ய உத்தரவிட்டது. ஒரு வகுப்பு ஆரம்பமாகிறது அல்லது முடிவடைகிறது என்பதை சமிக்ஞை செய்வதற்கான மாற்று வழியாக கைதட்டல்கள் பயன்படுத்தப்பட்டன. [4]



மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Clock Chime Tunes, Antique Clocks Guy Reference Library. Antique Clocks Guy - Brokers of Antique Clocks. Always the highest quality antique clocks available". www.clockguy.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
  2. "School Bells". moe.gov.sg. Ministry of Education, Singapore. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
  3. "Modern Teaching Techniques for Deaf and Hard of Hearing Students". online.sju (in ஆங்கிலம்). 2017-02-16. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
  4. "Somalia bans school bells". BBC. http://news.bbc.co.uk/1/hi/8623240.stm. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_மணி&oldid=3460918" இலிருந்து மீள்விக்கப்பட்டது