பள்ளி சுகாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசியாவின் மேடானில் உள்ள மாணவர்கள் வகுப்பில் கை கழுவுவதைப் பயிற்சி செய்கிறார்கள்

பள்ளி சுகாதாரம் (School hygiene) அல்லது பள்ளி சுகாதாரக் கல்வி (school hygiene education) என்பது ஒரு சுகாதார அறிவியல் ஆகும், இது பரந்த சுக நலக் கல்வியின் ஒரு வடிவமாகும். தண்ணீர், உணவு, வீடு மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பயனுள்ள நடைமுறைகள் மூலம் நடத்தையை மேம்படுத்துவதே பள்ளி சுகாதாரக் கல்வியின் முதன்மை நோக்கமாகும். [1] மேலும், நீர் மற்றும் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை பாதுகாப்பாக நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பள்ளி சுகாதாரத்தின் வரலாறு[தொகு]

பள்ளி சுகாதார நிபுணர் பிளெட்சர் பி. டிரெஸ்லர் தனது 1915 ஆம் ஆண்டு பள்ளி சுகாதாரம் என்ற படைப்பில் பின்வருமாறு விளக்கினார், "பள்ளி சுகாதாரம் என்பது சுகாதார அறிவியலின் கிளையாகும், இது பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதுடன் தொடர்புடையது." [2] பள்ளியானது தங்களிடம் பயிலும் மாணவர்களுக்காக மட்டுமல்லாது மாநில மற்றும் தேசிய நலனுக்காகவும் இதனை போதிப்பது மிக்கியமானதாகும். [3] டிரெஸ்லர் பள்ளிச் சுகாதாரத்தை இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரித்தார்: "குழந்தையின் பள்ளி வாழ்க்கையின் போதான உடல் சூழல்" மற்றும் மனநல சுகாதார விதிகள்" ஆகும். [4] [5]

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பள்ளி சுகாதாரம் தொடர்பான கருத்துக்களின் அவசியம் பரவலாக அறியப்பட்டிருந்தது, இந்த பாடத்தின் முக்கிய படைப்புகள் பல்வேறு எழுத்தாளர்களால் வழங்கப்பட்டன, அவர்களில் சர் ஆர்தர் நியூசோல்ம், [6] எட்வர்ட் ஆர். ஷா, [7] ராபர்ட் ஏ. லிஸ்டர், [8] மற்றும் ஜிஜி க்ரோஃப் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். [9] இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, பள்ளி சுகாதாரமானது பள்ளி சுகாதாரக் கல்வியின் ஒரு பகுதியாக மாறியது; அமெரிக்கன் பள்ளி சுகாதார சங்கம் செயலிழந்து, அமெரிக்கன் பள்ளி நலவியல் சங்கம் நிறுவப்பட்டது. [10]

பள்ளி சுகாதாரம் பரவலாக செயலில் உள்ளது.[11][12]ஆனால், தனிஒழுக்கமானது கிழக்கு ஐரோப்பா போன்ற வளரும் நாடுகளில் பள்ளி சுகாதார விதிகள் சரிவர நிறுவப்படவில்லை.[13]

பள்ளிச் சூழல்[தொகு]

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் அபிங்டனில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் பிரதான கட்டிடம்.

பள்ளிகளானது ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற பள்ளி சூழலை வெளிப்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைத் தீர்மானிக்கிறது. [14] பள்ளியின் சுகாதாரத் தேவைகளில் பள்ளியின் கட்டிடத் திட்டம், பாதுகாப்பான நீர் வழங்கல், கழிவுகளை அகற்றுதல், அவசர விளக்குகள்,போதுமான வெப்பம் மற்றும் காற்றோட்டம், அத்துடன் போதுமான பள்ளி வசதிகள் (மண்டபங்கள், வகுப்பறைகள், மற்றும் பொதுவான பகுதிகள்) மற்றும் தளபாடங்கள் ஆகிய அழகியல் அம்சங்கள் நிறைய உள்ளன.

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "A Manual on School Sanitation and Hygiene" (PDF). unicef.org. UNICEF/Programme Division. September 1998. pp. 3–4. Archived from the original (PDF) on 5 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Dresslar, Fletcher B. (1913). School hygiene. New York: The MacMillan Company. p. 1. school hygiene.
  3. Dresslar, Fletcher B. (1913). School hygiene. New York: The MacMillan Company. p. 2. school hygiene.
  4. Dresslar, Fletcher B. (1913). School hygiene. New York: The MacMillan Company. p. 3. school hygiene.
  5. Meckel, Richard (2013). Classrooms and Clinics: Urban Schools and the Protection and Promotion of Child Health, 1870-1930. New Brunswick, NJ: Rutgers University Press.
  6. Newsholme, Arthur (1898). School hygiene: the laws of health in relation to school life. London: Swan Sonnenschein and Co. school hygiene.
  7. Shaw, Edward R. (1902). School hygiene. New York: The MacMillan Company. school hygiene.
  8. Lyster, Robert A. (1907). School hygiene. Baltimore, MD: Warwick and York.
  9. Groff, G.G. (1889). School hygiene. New York: E.L. Kellogg and Co. school hygiene.
  10. Engs, Ruth C. (2003). The progressive era's health reform movement: a historical dictionary. Westport, CT: Praeger Publishers.
  11. Nikolić, Mihajlo; Radojka Kocijančić; Marija Pecelj-Gec; Vida Parezanović (1994). "7". In Jovanović Mirjana (ed.). Higijena sa zdravstvenim vaspitanjem. Vol. 1 (fourth ed.). Zavod za udžbenike i nastavna sredstva. pp. 69–72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 86-17-02931-5.
  12. Zaba, R.; Bukartyk-Rusek, B. (2002). "School hygiene in the past, present and future--in the opinion of the Inspector of Pediatrics and School Medicine and member of the European Society for Social Pediatrics (ESSOP)". Wiad Lek (NIH) 55: 615–619. பப்மெட்:15002312. 
  13. "A Manual on School Sanitation and Hygiene" (PDF). unicef.org. UNICEF/Programme Division. September 1998. pp. 3–4. Archived from the original (PDF) on 5 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Water, Sanitation and Hygiene". unicef.org. UNICEF Unite for children. 19 July 2010. Archived from the original on 24 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_சுகாதாரம்&oldid=3794297" இலிருந்து மீள்விக்கப்பட்டது