பள்ளி ஆலோசகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பள்ளி ஆலோசகர் (School counselor) என்பவர் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி, தொழில், கல்லூரிக்கு தார் செய்தல் மற்றும் சமூக-உணர்ச்சி ஆதரவை வழங்கும் சான்றிதழ்/உரிமம் பெற்ற தொழில்முறை ஆலோசகராவார். பள்ளிக் கல்வியின் ஒவ்வொரு நிலையிலும் (தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் கல்லூரி) பள்ளி ஆலோசகர் பதவிகள் உள்ளன. பள்ளி ஆலோசனைத் திட்டத்தை உருவாக்கி பின்பற்றுவதன் மூலம், பள்ளி ஆலோசகர்கள் அனைத்து வயது மாணவர்களுக்கும் ஒட்டுமொத்த வெற்றிக்குத் தேவையான பொருத்தமான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்க முடியும்.[1]

நோக்கம்[தொகு]

தொழில்முறைப் பள்ளி ஆலோசகர்கள் மாணவர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் பள்ளி ஆலோசனை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகின்றனர் (Hatch & Bowers, 2003, 2005; ASCA, 2012). [2] ASCA தேசிய மாதிரியில் (Hatch & Bowers, 2003, 2005; ASCA, 2012) பள்ளி ஆலோசகர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. [2]

பள்ளி ஆலோசகர்கள் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், மாவட்ட மேற்பார்வை அமைப்புகளில், ஆலோசகர் ,கல்வி ஆசிரிய பதவிகளில் (வழக்கமாக அமெரிக்காவில் ஆலோசகர் கல்வியில் முனைவர் பட்டம். அல்லது வெளிநாட்டில் தொடர்புடைய பட்டதாரி முனைவர் பட்டம் பெற்றவர்கள்) பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களின் பணி மாணவர் வளர்ச்சி, அந்த நிலைகளுடன் தொடர்புடைய தேவைகள், பணிகள் மற்றும் மாணவர் நலன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. [3]

தொழில்முறை பள்ளி ஆலோசகர்கள் நான்கு அடிப்படைக் களங்களில் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்: கல்வி மேம்பாடு, தொழில் மேம்பாடு மற்றும் கல்லூரி அணுகல்/சேர்க்கை, மற்றும் சமூக-உணர்ச்சி மேம்பாடு. [4] இந்த களங்களில் அறிவு, புரிதல் மற்றும் திறன் ஆகியவை வகுப்பறை கற்பித்தல், மதிப்பீடு, ஆலோசனை, ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுழைப்பு மூலம் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மதிப்பீட்டில், பள்ளி ஆலோசகர்கள் பல்வேறு ஆளுமை மற்றும் தொழில் மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தலாம்.[5]

பள்ளி ஆலோசகர்களின் உலகளாவிய நிலை[தொகு]

பள்ளி ஆலோசனை வழங்கும் நாடுகள் [6]
ஆர்மீனியா ஆஸ்திரேலியா ஆஸ்திரியா பஹாமாஸ் பெல்ஜியம்
பூட்டான் போட்ஸ்வானா பிரேசில் கனடா சீனா
கோஸ்ட்டா ரிக்கா குரோஷியா சைப்ரஸ் செ குடியரசு டென்மார்க்
எகிப்து எஸ்டோனியா பின்லாந்து பிரான்ஸ் காம்பியா
ஜார்ஜியா ஜெர்மனி கானா கிரீஸ் நெதர்லாந்து
ஆங்காங் ஐஸ்லாந்து இந்தியா இந்தோனேசியா ஈரான்
அயர்லாந்து இஸ்ரேல் இத்தாலி ஜப்பான் ஜோர்டான்
லாட்வியா லெபனான் லிதுவேனியா மக்காவ் மலேசியா
மால்டா நேபாளம் நியூசிலாந்து நைஜீரியா நார்வே
ஓமன் பிலிப்பைன்ஸ் போலந்து போர்ச்சுகல் ருமேனியா
ருவாண்டா சவூதி அரேபியா செர்பியா சிங்கப்பூர் ஸ்லோவாக்கியா
தென் கொரியா ஸ்பெயின் செயின்ட் கிட்ஸ் ஸ்வீடன் சுவிட்சர்லாந்து
சிரியா தைவான் தான்சானியா தாய்லாந்து டிரினிடாட் & டொபாகோ
துருக்கி உகாண்டா ஐக்கிய அரபு நாடுகள் ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா
வெனிசுலா வியட்நாம்

சான்றுகள்[தொகு]

  1. "Home - American School Counselor Association (ASCA)". schoolcounselor.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-23.
  2. 2.0 2.1 Hatch, T., & Bowers, J. (2003, 2005, 2012). The ASCA National Model: A framework for school counseling programs. Alexandria, VA: American School Counselor Association.
  3. Schmidt, J.J. (2003) Counseling in Schools: Essential Services and Comprehensive Programs. 4th ed. Boston: Allyn & Bacon.
  4. Carey, John; Dimmitt, Carey; Hatch, Trish; Lapan, Richard; Whiston, Susan (February 2008). "Report of the National Panel for Evidence-Based School Counseling: Outcome Research Coding Protocol and Evaluation of Student Success Skills and Second Step". Professional School Counseling 11 (3): 197–206. doi:10.5330/psc.n.2010-11.197. பன்னாட்டுத் தர தொடர் எண்:1096-2409. http://dx.doi.org/10.5330/psc.n.2010-11.197. 
  5. "About Us". Career Advice | Career Key (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
  6. "About Us". Career Advice | Career Key (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_ஆலோசகர்&oldid=3824970" இலிருந்து மீள்விக்கப்பட்டது