உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளிச் சீருடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிச் சீருடை

பள்ளிச் சீருடை (school uniform) என்பது மாணவர்கள் பெரும்பான்மையாக ஒரு பள்ளி அல்லது கல்வி நிறுவனத்திற்காக அணியும் சீருடை ஆகும் . அவை பல்வேறு நாடுகளில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பொதுவாக அணியபப்டுகிறது.

பெரும்பாலும் ஆடைக் குறியீடுகள் மற்றும் பள்ளி சீருடைகள் ஆகியன ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட்டாலும் இதற்கு இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. நாதன் ஜோசப் போன்ற அறிஞர்களின் கூற்றுப்படி, ஓர் ஆடையில் குழு அல்லது நிறுவனத்தின் அடையாளம், நிறுவனத்தில் தனிநபரின் நிலைகளை தெரியப்படுத்துதல், தனித்துவம் ஆகிய இருந்தால் தான் அது சீருடையாகக் கருதப்படும்.[1]

வரலாறு[தொகு]

பிரான்சில் பள்ளி மாணவர்கள் 1880

விரிவான அல்லது தெளிவான வரலாறு இல்லாததால், சீருடை தோன்றிய வரலாற்றை கண்டுபிடிப்பது கடினமாகும். பள்ளி சீருடைகள் ஐக்கிய இராச்சியத்தில் 16 ஆம் நூற்றாண்டில் ஒரு நடைமுறையாக இருந்ததாக நம்பப்படுகிறது. 1552 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள கிறைஸ்ட் ஹாஸ்பிடல் பள்ளிதான் பள்ளிச் சீருடையைப் பயன்படுத்திய முதல் பள்ளி என்று நம்பப்படுகிறது.[2] ஒரு நீண்ட நீல நிற மேல் அங்கி மற்றும் மஞ்சள் நிறத்தில், முழங்கால் வரையிலான காலுறைஆகியன மாணவர்களுக்கு சீருடையாக வழங்கப்பட்டது,[3] கிட்டத்தட்ட அதே மாதிரியான சீருடை இன்றும் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களால் அணியப்படுகிறது. பள்ளி சீருடைகள் பெரும்பாலும் பழமைவாத மற்றும் தற்காலத்திற்கு ஒவ்வாததாகக் கருதப்பட்டாலும், சமூக ஆடைக் குறியீடுகள் மாறியுள்ளதால் சமீபத்திய ஆண்டுகளில் சீருடைகளும் மாறிவிட்டன.

சான்றுகள்[தொகு]

  1. Joseph, Nathan (1986). Uniforms and nonuniforms : communication through clothing. New York: Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313251959.
  2. Scott, Jenny (5 September 2014). "School uniforms: A history of 'rebellion and conformity'." BBC News. Retrieved 13 January 2020.
  3. "History of the Uniform". www.christs-hospital.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-11-20.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிச்_சீருடை&oldid=3958752" இலிருந்து மீள்விக்கப்பட்டது