பற்சொத்தை
பற்சொத்தை Classification and external resources | |
![]() | |
---|---|
Destruction of a tooth by cervical decay from dental caries. This type of decay is also known as root decay. | |
ஐ.சி.டி.-10 | K02. |
ஐ.சி.டி.-9 | 521.0 |
DiseasesDB | 29357 |
MedlinePlus | 001055 |
பல்லின் மீது பாதுகாப்பிற்கென உள்ள எனாமல், டென்டைன் எனும் பல்லெலும்பு (பற்தந்தம்) சிறிது சிறிதாகத் தேய்மானம் அடைவதால் பற்சொத்தை ஏற்படும். காரைப் படிந்துள்ள இடங்களில் எளிதில் தேய்மானம் நிகழும். பல்லின் மேற்பகுதி (அரைத்தல் இடம்) பக்கங்கள், அருகிலுள்ள பற்கள், ஈறுகளில் எஞ்சிய உணவுகள், உமிழ்நீரின் கோழைப் பொருள், பாக்டீரியங்கள் ஆகியவை உள்ளன. அவ்விடங்களில் உணவின் கார்போஹைடிரேட்டுகளில் கிரியை செய்யும் பாக்டீரியங்கள் அமிலத்தன்மையை ஏற்படுத்தி எனாமலைப் பாதிப்படையச் செய்கின்றன. இதனைத் தடுக்காவிடின் டென்டைன் எனும் பல்லெலும்பும் பாதிப்படையும். இதனால் தோன்றும் பற்குழி பெரிதாகி பாக்டீரியங்கள் தங்கும். பின் பல்லினுள் உள்ள பற்கூழ்குழி பாதிப்படைந்து நோய் தொற்று தோன்றும்.
நோய் அறிகுறிகள் :[தொகு]
பற்சொத்தையின் துவக்கத்தில் அறிகுறிகள் இல்லை. பற்சொத்தை நன்கு ஏற்பட்டுள்ளதற்கு முதல் அறிகுறி பல்வலியாகும். இனிப்பு மற்றும் சூடு அல்லது குளிர்ச்சி மிகுந்த உணவால் வலி அதிகமாகும். வாய் துர்நாற்றமும் ஏற்படலாம்.
சிகிச்சை :[தொகு]
பல் மருத்துவர்கள் பற்சொத்தை உள்ள இடத்தைச் சிறிய துளைப் பொறியால் சற்று பெரிதாக்குவர். பின் சுத்தம் செய்து தந்த ரசக்கலவை (டென்டல் அமால்கம் - ஓர் மெர்குரி உலோகக் கலப்பு) அல்லது சிமெண்ட் பொருளால் நிரப்பி விடுவர். பற்கூழ் குழியில் நோய் தொற்று அதிகமிருப்பின் அப்பகுதியினை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்து நிரப்பலாம் அல்லது பல்லைப் பிடுங்கி எடுத்துவிடலாம்.
பற்கால்வாய் சிகிச்சை (Root canal treatment)[தொகு]
பல் பிடுங்குதலைத் தவிர்த்து இயற்கைப் பல்லைத் தக்கவைத்துக் கொள்ள, இப்புதிய சிகிச்சை உதவும். பல்லின் மேலிருந்து சிறிய துளைப் பொறியால் ஓர் துளை இடப்படும். இத்துளை பற்கூழ் குழிவரை அமையும். பற்கூழ் பொருட்கள் அனைத்தும் நுண்ணிய கருவிகளைப் பயன்படுத்தி நீக்கப்படும். இச்சிகிச்சையின் முன்னேற்றம் X கதிர் நிழற்படத்தில் கண்காணிக்கப்படும். குழி நன்கு சுத்திகரிக்கப்படும். நுண்ணுயிஎதிரி (anti biotic) மருந்துள்ள பசையால் அக்குழிவு நிரப்பப்பட்டுத் தற்காலிகமாக மேலே மூடப்படும். ஒரு சில நாட்களுக்கு பின் நிரப்பிய பொருளை நீக்கிக் குழிக்கால்வாயில் கிருமிகளற்ற நிலையுள்ளதா எனச் சோதிக்கப்படும். நோய்த் தொற்று இல்லையெனில் அக்கால்வாய் மரப்பால் பிசினுடன்(Gutta- percha) துத்தநாக ஆக்ஸைடு, பிஸ்மத் ஆக்ஸைடு சேர்ந்த கலவைக் கொண்டு நிரப்பப்படும். குழிவின் மேல்வாய்ப் பகுதி ஓர் வகை சிமெண்ட்டினால் சீல் செய்யப்படும்.