பர்வேஸ் ரசூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பர்வேஸ் ரசூல் சர்கர் ( Parvez Rasool Zargar பிறப்பு: பிப்ரவரி 13, 1989) [1] இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2008 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2009 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2014 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 76 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 4401 ஓட்டங்களையும் , 58 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1302 ஓட்டங்களையும் ,1 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாராவைச் சேர்ந்தவர் ரசூல். ஜம்மு-காஷ்மீர் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய அப்துல் கயூம் அவரது பயிற்சியாளராக இருந்தார். ஜம்மு-காஷ்மீருக்காக ஜூனியர் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு, ரசூல் கயூமிலிருந்து விளையாட்டைக் கற்றுக்கொண்டார். ரசூலின் தந்தை குலாம் ரசூல், மற்றும் சகோதரர் ஆசிப் ரசூல் இருவரும் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். [2] [3] [4]

2009 சாம்பியன்ஸ் லீக் இருபது -20 போட்டியின் போது, ரசூல் தனது பையில் வெடிபொருட்களின் தடயங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் பெங்களூரில் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார். தனது ஹோட்டலில் ஸ்னிஃபர் நாய்கள் தனது பையை சோதனை செய்வதை அவர் ஆட்சேபித்தார். விசாரித்தபின் தனது பையில் குர் ஆன் இருந்ததனால் அவ்வாற்று மற்றுத்தாகக் கூறினார். எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காததால் ரசூலை சில மணி நேரம் கழித்து போலீசார் விடுவித்தனர்.

துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

இவர் 2008 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.2008 ஆம் ஆண்டில் தர்மசாலாவில் நவமபர் 16 இல் இமாச்சலப் பிரதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஜம்மு காஸ்மீர் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் தனது முதல் போட்டியில் விளையாடினார்.

இருபது20[தொகு]

2011 ஆம் ஆண்டில் இவர் இருபது20 போட்டியில் அறிமுகமானார். அக்டோபர் 20 இல் ரோட்டாக்கில் சர்வீசஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் ஜம்மு காஸ்மீர் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

பட்டியல் அ[தொகு]

2009 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். பெப்ரவரி 15 இல் தில்லி துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் இவர் காஸ்மீர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

2013 ஆம் ஆண்டில் சிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் தேர்வானார். ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.[5][6] 2014 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். சூன் 15 இல் தாக்காவில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ப இ20 போட்டியில் அறிமுகமானார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆகஸ்ட் 2017 இல், ஷோபியன் மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஷோபியன் நெடுஞ்சாலையில் ஹெஃப்-ஷிர்மல் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பர்வேஸ் ரசூல் திருமணம் செய்து கொண்டார். [8] [9] [10] அவர் காஷ்மீர் பல்கலைக்கழக மாணவி ஆவார். அவர் அரபியில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். [11]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வேஸ்_ரசூல்&oldid=2870264" இருந்து மீள்விக்கப்பட்டது