பர்மிய தூபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபாஞி அடுக்குத் தூபி, பர்மிய அடுக்குத் தூபிக்களில் எஞ்சியுள்ள மிகப் பழைமையான ஒன்று

பர்மிய அடுக்குத் தூபி என்பது ஒரு புத்த அல்லது பெளத்த சமயக் கோவிலாகும். இந்த கோவிலின் முக்கிய அம்சம் அதன் உயரிய தூண் அல்லது கோபுரம் போன்ற அமைப்பாகும். பர்மிய அடுக்குத் தூபிக்கள் பொதுவாக புத்தமதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புராதன நினைவுச்சின்னங்கள் ஆகும்.[1] மியான்மரின் நிலப்பரப்பில் அடுக்குத் தூபிக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை, இதனால் இந்த நாட்டிற்கு "அடுக்குத் தூபிக்களின் நாடு" என்றப் பெயர் கிடைக்கப் பெற்றிருக்கிறது.[2] மியான்மர் நாட்டின் பல நகரங்களில், குறிப்பாக மண்டலே மற்றும் பாகன் நகரங்களில், ஏராளமான அடுக்குத் தூபிக்கள் இருப்பதாக அறியப்படுகின்றன. இங்கு பருவகால அடுக்குத் தூபி திருவிழாக்கள் அங்கு புகழ்பெற்ற விழாவாகும்.[3]

பர்மிய தூபிகளை சுற்றிலும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுற்றுச் சுவருக்கு அரன் (பாலியில் அரமா) என்றழைக்கபடும் மற்றும் கோவிலின் நான்கு திசைகளிலும் திசைக்கொன்றாக நான்கு வாயில்கள் இருக்கும். இந்த வாயில்களை மோக் (பாலியில் முக்கா) என்றழைக்கபடும்.

சொற்கூறு[தொகு]

மியான்மரில் யாகனில் உள்ள சிவேஜிகன் தூபி சிதி.
பாகனில் உள்ள ஆனந்தா கோவில் பாதோ சிறந்த உதாரணம்.

பர்மிய மொழியில், தூபிகள் (பகோடாக்கள்) பலவிதமான சொற்கள் மூலம் அறியப்படுகின்றன. குடை போன்ற வடிவத்தை குறிக்கும் பாயா என்ற சொல் சமஸ்கிருததில் வரா என்ற சொல்லில் இருந்து வருகிறது மேலும் இந்தச் சொல் பகோடா - தூபியை குறிக்கிறது, பாயா என்பது புத்தகம் அல்லது புத்தரின் உருவங்கள், புத்தர், அரசர்கள், மற்றும் துறவிகள் ஆகியோரைக் குறிக்கும் குடை அல்லது பாயா, சிதி என்றழைக்கப்படுகிறது. சிதி (Zedi) என்ற சொல் இது பாலி மொழியில் சீதியாவில் இருந்து பெறப்பட்டது, குறிப்பாக மணி வடிவ தூபிகளைக் குறிக்கிறது, படோ என்பது குகைகளை ஒத்ததாக கட்டப்பட்ட வெற்று சதுர வடிவ வீடு அல்லது செவ்வக கட்டடங்களைக் குறிக்கிறது. இந்த இல்லம் புத்தரின் சித்திரங்களைக் கொண்டுள்ளது. பர்மிய தூபிகள் (பகோடாக்கள்) கியாங்கிலிருந்து வேறுபடுகின்றன, இது புத்தமத துறவிகள் தங்கும் மடாலயமாக பயன்பட்டது.

வகைகள்[தொகு]

பர்மிய சிதிகள் பின்வரும் நான்கு வகைகள் உள்ளது.

  1. டத்தா சிதி (பாலி தாதுசீதியா) அல்லது தாத்தாவ் சிதி என்பது புனிதப்படுத்திய புத்தரின் விக்கிரக பீடத்தை குறிக்கும். [4]
  2. பரிபாவக சிதி (பாலி பரிபோகசீதியா) என்பது புனிதப்படுத்திய புத்தர் அல்லது புனிதமான நபர்களின் ஆடைகள் மற்றும் பல பொருட்களைக் (கிண்ணங்கள், கயிறுகள் இன்னும் பிற.,) குறிக்கும். [4]
  3. தாம்மா சிதி (பாலி தாம்மாசீதியா) என்பது புனிதமான கிரந்தங்கள், கையெழுத்து பிரதிகள் மற்றும் நகைகள், விலைமதிப்புள்ள உலேகங்கள் ஆகியவற்றை குறிக்கும். [4]
  4. ஓதிக்தா சிதி (பாலி உத்திசாசீதியா) என்பது பக்தி நோக்கத்திற்காக கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட புத்தரின் சிலைகள், புனிதமான படங்கள், சித்திரங்களை குறிக்கும்.

நான்கு வகைகளில், தாம்மா சிதி மற்றும் ஒதிக்தா சிதி ஆகியவை பர்மாவில் மிகவும் பிரபலமாக உள்ளன, ஏனென்றால் அவை வழக்கமான முறைகளில் தகுதிகளின் அடிப்படையில் நன்கொடையாளர்களால் பராமரிக்கப்படுகிறது. [4] பர்மிய சிதிக்கள் பொதுவாக செங்கலால் கட்டப்பட்டு, சுண்ணாம்புப் பூச்சால் மூடப்பட்டிருக்கும். [4] முக்கிய சிதிக்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும். [4] பர்மிய சிதிக்கள் இறுதியாக வளையமான ஆபரணமான ஹதி சூடப்பட்டிருக்கும். இந்த ஹதி ஒரு பாரம்பரிய விழாவில் சூட்டப்படும். [5][6]

ஹதி[தொகு]

பர்மிய தூபிகளில் மிக முக்கியமான தனித்துவ அம்சமாக இருப்பது ஹதி (Hti) என்று சொல்ல முடியும், ஏனெனில் இலங்கையில் இருக்கும் புத்த கோவில்களில் இதுபோன்ற ஒரு அமைப்பு இல்லை அதனால் இந்த ஹதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும், மேலும் லாவோடின் மற்றும் தாய் தூபிகளிலும் ஹதி என்ற ஒன்று இல்லை. இந்த ஹதி விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த ஹதியின் முனை சின்புதாவ் மதிப்பிற்குரிய வைர மொட்டு என்று அழைக்கப்படுகிறது. மியான்மரில் உள்ள நான்கு பகோடா கட்டடக்கலை குழுக்கள்: மோன், பாமர் (பர்மான்ஸ்), ரகின் (அராகனீஸ்) மற்றும் ஷான் ஆகியோரால் கட்டப்பட்ட பகோடாக்களில் ஹதி காணப்படுகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மிய_தூபி&oldid=2452448" இருந்து மீள்விக்கப்பட்டது