பருன் மசூம்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருன் மசூம்தர்
Barun Mazumder
பிறப்பு(1942-09-09)9 செப்டம்பர் 1942
இறப்பு14 அக்டோபர் 2019(2019-10-14) (அகவை 77)
படித்த கல்வி நிறுவனங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிபத்திரிகையாளர், செய்தி வாசிப்பாளர்,எழுத்தாளர், ஆசிரியர்

பருன் மசூம்தர் (Barun Mazumder) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். செய்தி வாசிப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களுடன் இவர் செயல்பட்டார். இலக்கியம் மற்றும் கல்வியில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ விருது பெற்றார். [1] [2] [3]

சுயசரிதை[தொகு]

மசூம்தர் 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிறந்தார் [4] 1965 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் [5]

மசூம்தர் பத்து வருடங்கள் டைனிக் பாசுமதி என்ற வங்காள மொழி பத்திரிகையில் பணியாற்றினார். [4] வங்காளதேச விடுதலைப் போரின் போது இவர் வங்காள தேசத்தில் போர் நிருபராக இருந்தார். தவிர கொல்கத்தா அனைத்திந்திய வானொலியில் பத்திரிகையாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். [5]

மசூம்தர் கற்பித்தல் மற்றும் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். [4] அவர் பசே சிப்பூர் பி.கே.பால் நிறுவனத்தின் ஆசிரியராக இருந்தார். [4] தவிர, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் மிட்னாபூர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தார். [4] இலக்கியம் மற்றும் கல்வியில் இவரது பங்களிப்பிற்காக 2011 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

மசூம்தர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று இறந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
  2. "Padma Shri Award Winners". 25 January 2011. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
  3. "Padma Awards 2011: The winners". 26 January 2011. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "প্রয়াত 'পদ্মশ্রী' বরুণ মজুমদার" (in Bengali). 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
  5. 5.0 5.1 "প্রয়াত আকাশবাণীর প্রাক্তন সাংবাদিক 'পদ্মশ্রী' বরুণ মজুমদার" (in Bengali). 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருன்_மசூம்தர்&oldid=3800192" இலிருந்து மீள்விக்கப்பட்டது