உள்ளடக்கத்துக்குச் செல்

பருத்த அலகு கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருத்த அலகு கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அருந்தினாக்சு
இனம்:
அ. ஏடான்
இருசொற் பெயரீடு
அருந்தினாக்சு ஏடான்
(பலாசு, 1776)
வேறு பெயர்கள்
  • அருந்தினாக்சு ஏடான்
  • பிராக்மாடிகோலா ஏடான்
  • இடுனா ஏடான்

பருத்த அலகு கதிர்க்குருவி (Thick-Billed Warbler) உலகத்திலேயே மிகப் பழமையான பாடும் பறவையாகும். மிதவெப்ப மண்டலமான கிழக்காசிய நாடுகளில் இச்சிற்றினங்கள் காணப்படுகின்றன. இப்பறவைகள் வலசை போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. குளிர் காலத்தில், வெப்ப மண்டல நாடுகளான, தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இப்பறவைகள் வலசை போகின்றன. இப்பறவை, மிக அாிதாக மேற்கு ஐரோப்பாவிற்கு இடம் பெயர்கின்றன. மரக்கிளைகளில் வாழக் கூடிய இப்பறவை சிற்றினங்கள் அடர்ந்த தாவரங்களான, நாணல்கள், புதர்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் வளரக் கூடிய அடர்ந்த தாவரங்களிடையே காணப்படுகின்றன. குட்டையான மரங்களில் இப்பறவைகள் கூடு கட்டுகின்றன. இவற்றில் 5-6 முட்டைகளை இடுகின்றன. பாடும் பறவைகளில் இது பொிய பறவையாகும். இது 16-17.5 செ.மீ (6.3-6.9 அங்குலம்) நீளமுடையது, பொிய நாணல் பாடும் பறவையைப் போன்று பொியதாகும். முதிர்ந்த பறவைக்கு உடலின் மேல் புறத்தில் கோடுகள் காணப்படுவதில்லை கீழ்ப்புறம் சற்று புடைத்துக் காணப்படுகின்றது. இப்பறவையின் சிறகுத் தோற்றம் சற்று வேறுபட்டுள்ளது. தலையின் முன்பகுதி உருண்டையாகவும், அலகு குட்டையாகவும் கூர்மையாகவும் உள்ளது. அனேக பாடும் பறவைகளில், ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இளம் பறவைகளில் அடிப்பகுதி சற்று அதிகமாகவே புடைத்துக் காணப்படுகின்றது. பாடும் பறவைகள் பொதுவாக பூச்சி உண்ணிகளாகவே உள்ளன. ஆனால், இப்பறவை சிறிய விலங்குகளையும் உண்கிறது. இப்பறவை சதுப்பு நில பாடும் பறவையைப் போன்று வேகமாகவும் சத்தமாகவும் பாடக் கூடியது. இது குரல்போலி (mimicry) செய்வதுடன் அக்ரோசெபலன் மாதிாியே விசில் ஒலி எழுப்பும் தன்மையுடையது. இது சில நேரங்களில் ஒரே வகையான போினமான பிராக்மாடிகோலாவில் வைக்கப்பட்டிருந்தது மற்றும் நீண்ட காலமாக அக்ரோசெபலசிலும் பின்பு 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பறவை ஈதுனா கிலேட் போினத்தில் சேர்க்கப்பட்டது.[2] கீஸ்டெர்லிங் மற்றும் பிளேசியசு ஆகிய பறவைகளை இப்போினத்தில் வைத்துள்ளமைக்கான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஏடான் என்பது கிரேக்கத்தில் வானம்பாடி என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க நம்பிக்கையின் படி, ஏடான் வானம்பாடியாக மாறிவிட்டதாக நம்பப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. {{{assessors}}} (2004). Acrocephalus aedon. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 12 May 2006.
  2. Silke Fregin; Martin Haase; Urban Olsson; Per Alström (2009). "Multi-locus phylogeny of the family Acrocephalidae (Aves: Passeriformes) – The traditional taxonomy overthrown". Molecular Phylogenetics and Evolution 52 (3): 866–878. doi:10.1016/j.ympev.2009.04.006. பப்மெட்:19393746. 
  3. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 32, 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.