பரிவட்டம் (சைவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிவட்டம் என்பது காவி ஆடை. இப்பெயரில் திரைப்படம் ஒன்றும் உள்ளது. [1] மீனாட்சி சுந்தரம் பிள்ளை குமரகுருபரர்மீது குமரகுருபரர் சரித்திரம் ஒன்று பாடியுள்ளார். அதில் செந்தூர் முருகன் குமரகுருபரர்க்கு அருள் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். சீவைகுண்டத்தில் வாழ்ந்த பாண்டி வேளாளர் மரபில் வந்தவர் குமரகுருபரர். ஊமையாய் இருந்த இவரை இந்த முருகன் பேசவைத்தார் என்றும், "சடைவேடம் தாங்கிப் பக்குவர்க்கு உபதேசம் செய்" என்று கூறினார் என்றும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் குமரகுருபரர் சடை தாங்கி ஆறு கட்டி சுந்தர வேடம் பூண்டு விளங்கினார். இதற்கு விளக்கம் தரும் வகையில் தரப்பட்டுள்ள அடிக்குறிப்பாகச் சில செய்திகள் உள்ளன.

சடை யாரும் வளர்க்கலாம். ஆறு கட்டி சுந்தர வேடம் ஆசிரியர்-முருகன் அளிக்கவில்லை. இவர் தானாக எடுத்து அணிந்துகொள்ளவும் இல்லை. ஆறு கட்டி சுந்தர வேடம் என்பது பரிவட்டம். இது காவி ஆடை. இது தாமே அணிந்துகொள்வது அன்று. தக்க துறவி ஒருவர் தர அணிந்துகொள்வது. [2]

மேற்கோள்[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு பாகம் 1, தி பார்க்கர் அச்சகம், முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு மார்கழி 2005 - பக்கம் 132 அடிக்குறிப்பு
  2. இதனைக் குறிப்பிடும் செங்கைப் பொதுவன் காசி இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், வெளியில் உலவும் காலத்தில் அணிந்துகொள்ள, நான் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் வாழ்ந்த வங்காளத் துறவி ஒருவர், மலையாளப் பெண்மணி ஒருவரின் பரிந்துரையின் பேரில், எனக்குக் காவி ஆடை வழங்கியதை நினைவுபடுத்திக்கொள்கிறேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவட்டம்_(சைவம்)&oldid=3453828" இலிருந்து மீள்விக்கப்பட்டது