உள்ளடக்கத்துக்குச் செல்

பரம்பன்தளி மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரம்பன்தளி மகாதேவர் கோயில்

பரம்பன்தளி மகாதேவர் கோயில், இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் முல்லச்சேரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 17 இலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், திருச்சூர் நகரத்திலிருந்து கஞ்சனி வழியாக குருவாயூர் செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரால் அமைக்கப்பட்ட 108 சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று என்று நம்பப்படுகிறது.[1][2]

இக்கோயிலில் மகாசிவராத்திரி, மற்றும் பரம்பன் தாலி சஷ்டி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பல்வேறு தேவஸ்தானக் குழுக்கள் நாதஸ்வர மேளம் இசைக்க, காவடி ஊர்வலத்தை நடத்துகின்றன. அலங்கரிக்கப்பட்ட யானைகள் இவ்விழாவின் முக்கியமான நிகழ்வாகும். முல்லைச்சேரி சென்டர் சஷ்டி அகோஷ குழு, கண்ணன் காடு, எலஞ்சிக்காவு, அச்சந்தே அம்பலம், ஐயப்பகுடம், ஷாலின் கிராமம், சுவாமிதே அம்பலம் போன்ற முக்கியக் குழுவினர் விழாவிற்கான ஏற்பாட்டை மேற்கொள்கின்றனர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]