உள்ளடக்கத்துக்குச் செல்

பரமக்குடி முத்தால பரமேசுவரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
கோயில் தகவல்கள்
மூலவர்:முத்தாலம்மன்
சிறப்பு திருவிழாக்கள்:பிரம்மோற்சவம், மாசி பூச்சொறிதல் விழா, ஆடியில் முளைக்கொட்டு, நவராத்திரி

முத்தால பரமேசுவரியம்மன் கோயில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ளது.

திருவிழாக்கள்

[தொகு]
  • ஆடி மாதம் - முளைக்கொட்டு திருவிழா
  • மாசி மாதம் - பூச்சொரிதல் விழா
  • பங்குனி மாதம் - பங்குனித் திருவிழா
  • நவராத்திரி

பூச்சொரிதல் விழா

[தொகு]

நகரின் அனைத்துத் தெருக்களிலும் திருக்கண்கள் அமைக்கப்படும். பூக்களை தட்டுகளில் பரப்பி வைத்து பூஜைகள் நடத்தப்படும். திருக்கண்கள் அமைக்கப்படும் இடங்களில் பட்டிமன்றம், கரகாட்டம், கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயிலிலிருந்து பூச்சொரிதல் ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கியச் சாலைகளின் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடையும். அப்போது வாணவேடிக்கைகள் நடைபெறும். அதிகாலையில் அம்மனுக்கு பூ அலங்காரமும், மகா தீபாராதனைகளும், சிறப்பு அபிசேகமும் நடைபெறும். காலையில் பூப் பிரித்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அம்மனுக்கு சார்த்தப்பட்ட பூ, பிரசாதமாக பொது மக்களுக்கு வழங்கப்படும்.

பங்குனித் திருவிழா

[தொகு]
  • 10 நாள்கள் நடைபெறும்.
  • ஒவ்வொரு நாள் இரவிலும் அன்ன வாகனம், ரிசப வாகனம், யானை வாகனம், வெள்ளி சிங்க வாகனம், குதிரை வாகனம் என அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
  • பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.
  • கோயில் மேடையில் ஒவ்வொரு நாளின் இரவு முழுவதும் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மாடு-மயில் ஆட்டம், இலக்கிய இன்னிசை பட்டிமன்றம், ஆடலும் - பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஆலயச் சிறப்பு

[தொகு]

நாகதோசம் உள்ளவர்களுக்கு பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.

நேர்த்திக்கடன்

[தொகு]

பங்குனித் திருவிழாவின்போது, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இங்கிருக்கிறது.

உசாத்துணை

[தொகு]