உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்க வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்ம வாகனம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் சிம்ம வாகனம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் சிம்ம வாகனம்
உரிய கடவுள்: அம்மன்

சிங்க வாகனம் அல்லது சிம்ம வாகனம் என்பது இறைவன் சிலை திருவுலா வரும்போது சிங்க உருவம் கொண்ட சிலையில் உலா வரும் வழக்கம் உண்டு. அந்த சிங்க உருவச் சிலையைச் சிங்க வாகனம் என்ப்படுகிறது. இதன் வரலாற்றை மு. அருணாசலம் விளக்கியுள்ளார். [1] மரக்கட்டையில் சிங்கத்தின் பாகங்களைச் செதுக்கி இணைத்தும், வெள்ளியை வார்த்தெடுத்தும் செய்யப்பட்ட சிங்க வாகனங்கள் இன்று கோயில்களில் உள்ளன. இந்து சமயப் புராணங்களின்படி சிங்கம் துர்க்கையின் வாகனமாகும். இந்துக்கோயில்களில் திருவிழாக்களின் பொழுது அந்தந்த கோயில் உற்சவமூர்த்திகள் ஊர்வலத்தில் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாக மயில்வாகனமும் உள்ளது. தமிழ்நாட்டின். கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் மாசி மாதம் நடக்கும் தேர் திருவாழாவின்போது தேர்த் திருவிழாவுக்கு முந்தைய நாட்களில் நடக்கும் உற்சவங்களில் சிங்கவாகன உற்சவமும் ஒன்று.

கதை

[தொகு]

காசிக்குச் சென்ற குமரகுருபரர் அங்கும் தங்கத் தனக்கு இடம் தரும்படி வேண்ட அப்போதைய முகமதிய அரசனை வேண்டச் சென்றார். மன்னன் மதிப்பதற்காகக் காளிதேவியை வேண்டிப் பெற்ற சிங்க வாகனத்தில் சென்றார். சிங்கத்தில் வந்த அதிசயத்தைக் கண்ட அரசன் குமரகுருபரரை மதித்து இடம் வழங்கினான் என்பது ஒரு கதை.

கற்பனை

[தொகு]

ஒருவன் சிங்கத்தின் மீதும் ஏறலாம்; ஆனால் சிந்தையை அடக்கிச் செம்மா இருக்க முடியாது என்று தாயுமானவர் பாடுகிறார். [2] இதில் சிங்கத்தின் மேல் ஏறலாம் என்பது ஒரு கற்பனை.

அஞ்சாமை

[தொகு]

வங்கத்தில் தோன்றி கண்ணனிடம் அன்பு பூண்ட பரம்பாகவதராக வாழ்ந்தவர் கிருஷ்ண சைதன்யர். [3] திருவாசகத்துக்கு உரை எழுதும் சுவாமி சிற்பவானந்தர் முகவுரையில் கிருஷ்ண சைதன்யரிடைய வரலாற்றைக் குறிப்பிடுகிறார். [4] அஞ்சாமை என்னும் தைரியம் குறிக்கிடும் காட்டுப் புலியையும் கண்டு அஞ்சாது. அவற்றை நண்பராக்கிக்கொண்டு வாழலாம் என்கிறார். இப்படி அஞ்சாமையைக் காட்டுவது சிங்க வாகனம்.

எகிப்து மாணவன்

[தொகு]

ஞான நாட்டம் கொண்டவர் எகிப்து நாட்டிலிருந்து வந்த பால்ப்ரண்டன். பல நாடுகளுக்குச் சென்று ஞானம் பெற்றவர். இறுதியாக இந்தியா வந்து திருவண்ணாமலை இரமணர் மடத்தில் ஒரு குடிசை கடிக்கொண்டு வாழ்ந்தார். அவரது குடிசைக்கு மூன்று பக்கம் சுவர். ஒரு பக்கம் திறந்தவெளி. ஒருநாள் கருநாகம் ஒன்று குடிசைக்குள் நுழைந்து படமெடுத்துக்கொண்டு நின்றது. பிரண்டன் நடுங்கினார். அந்த வழியே வந்த இரமண மட யோகி ராமையா படமெடுத்த பாம்பின் தலையைத் தடவிக்கொடுத்தார். பாம்பு படத்தைச் சுருக்கிக்கொண்டு சென்றுவிட்டது. இந்தச் செய்தியைச் சொல்பவர் நம்மவர் போல் மூட நம்பிக்கையாளர் அன்று.

இரமணர்

[தொகு]

திருப்பனந்தாள் காசி மடத்தில் மேலாளராக இருந்த நாகரத்தினம் பிள்ளை இரமணரைக் காணச் சென்றாராம். இரமணர் திருவண்ணாமலை உச்சியில் இருந்தாராம். உச்சிக்குச் சென்று காணலாம் என்று மலையில் ஏறும்போது புலி ஒன்று வந்ததாம். அஞ்சிய நாகரத்தினம் பாறையிலிருந்து குதித்தாராம். கால் முரிந்துவிட்டதாம். தட்டுத் தடுமாறி எழுந்தபோது இரமணர் அந்தச் சிறுத்தைப் புலியின் முதுகைத் தடவிக் கொடுத்துக்கொண்டு இருந்தாராம்.

முடிபு

[தொகு]

இப்படி அஞ்சத்தக்க விலங்குகள் மாமனிதர் வாழ்க்கையில் அடங்கிப் பழகும் விலங்குகளாக மாறியிருந்தமை புலனாகும். இந்த வகையில் பழகும், பழக்கும் விலங்காகச் சிங்கமும் விளங்கியது. இதனை உணர்த்தும் சின்னமே தெய்வப் படிமத்தைச் சுமக்கும் சிங்க வாகனம்.

இவற்றையும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17 ஆம் நூற்றாண்டு – பாகம் 1, 2005, பக்கம் 159 முதல் 168 அனுபந்தம் 7
  2. கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும்
    கட்டலாம் ஒருசிங்க முதுகின் மேற் கொள்ளலாம் கட்செவி எடுத்தாட்டலாம்
    வெந்தழலில் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்
    வேறொருவர் காணாமல் உலகத்து உலவலாம் விண்ணவரை ஏவல் கொளலாம்
    சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்
    சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகரில் சித்தி பெறலாம்
    சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திற் அரிது தாயுமானவர் பாடல், தேசோமயானந்தம், பாடல் 5
  3. 1486-1534
  4. சுவாமி சித்பவானந்தர், திருவாசக உரை, 1968, முகவுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்க_வாகனம்&oldid=3707338" இலிருந்து மீள்விக்கப்பட்டது