பரணி கலையகம்
Appearance
பரணி பிக்சர்ஸ் அல்லது பரணி கலையகம் (Bharani Pictures) என்பது சென்னையில் அமைந்திருந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதனை 1947 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண ராவும், பானுமதி ராமகிருஷ்ணாவும் இணைந்து நிறுவினர். [1] அதன் பின் 1950 இல் இருவரும் பரணி ஸ்ரூடியோ வை உருவாக்கினர். இவர்கள் இருவரதும் மகனான டாக்டர். பரணி குமார் என்பரின் பெயரையே இக்கலையகத்திற்கு வைத்தனர். தற்போது இந்த ஸ்டுடியோவை பரணி குமாரே பராமரித்து வருகின்றார். இது அமைந்துள்ள சுற்றுப்புறத்திலேயே இவர் 'பரணி வைத்தியசாலை'யை நிறுவியுள்ளார். பரணி ஸ்டுடியோவினுடைய முதல் திரைப்படமான சண்டிராணி 1953 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதுமாக தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.
வருடம் | திரைப்படம் | மொழி | இசையமைப்பு |
---|---|---|---|
1947 | ரத்னமலா | தெலுங்கு | சி. ஆர். சுப்புராமன் |
1949 | லைலா மஞ்சு | தமிழ் | சி. ஆர். சுப்புராமன் |
1949 | லைலா மஞ்சு | தெலுங்கு | சி. ஆர். சுப்புராமன் |
1952 | பிரேமா | தெலுங்கு | சி. ஆர். சுப்புராமன் |
1952 | காதல் | தமிழ் | சி. ஆர். சுப்புராமன் |
1953 | சண்டிரானி | தெலுங்கு | சி. ஆர். சுப்புராமன் |
1953 | சண்டிரானி | தமிழ் | சி. ஆர். சுப்புராமன் |
1953 | சண்டிரானி | ஹிந்தி | சி. ஆர். சுப்புராமன் |
1954 | சக்ரபாணி | தெலுங்கு | பி. பானுமதி |
1954 | விப்ர நாராயணா | தமிழ் | எஸ். ராஜேஸ்வர ராவ் |
1954 | விப்ர நாராயணா | தெலுங்கு | எஸ். ராஜேஸ்வர ராவ் |
1956 | சிந்தாமணி | தெலுங்கு | |
1957 | மணமகன் தேவை | தமிழ் | ஜி. ராமநாதன் |
1957 | வரடு கவலி | தெலுங்கு | ஜி. ராமநாதன் |
1961 | பதசரி | தெலுங்கு | மாஸ்டர் வேணு |
1961 | கானல் நீர் | தமிழ் | மாஸ்டர் வேணு |
1964 | விவாக பந்தம் | தெலுங்கு | |
1967 | கிரிக லக்சுமி | தெலுங்கு | |
1972 | அந்த மன மஞ்சிகே | தெலுங்கு | |
1974 | அம்மாயி பெல்லி | தெலுங்கு | |
1977 | மனவடி கோசம் | தெலுங்கு | |
1984 | ராசயித்திரி | தெலுங்கு | |
1987 | அட்டகரு சின்டபாட் | தெலுங்கு |