பயனர் பேச்சு:TNSE MOHANASUNDARAM C KPM
வாருங்கள்!
வாருங்கள், TNSE MOHANASUNDARAM C KPM, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- ஜெயரத்தின மாதரசன் (பேச்சு) 04:06, 4 சூலை 2017 (UTC)
வழிகாட்டி வேண்டுகோள்
[தொகு]வணக்கம் , தாங்கள் சிறப்பாக பங்களித்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி, புதுப்பயனரான தங்களுக்கு ஒருசில ஆலோசனை வழங்குவதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.
- தாங்கள் ஒரு கட்டற்ற களஞ்சியத்தில் சேவை அளிக்கிறீர்கள் என்பதில் பெருமைகொள்ளுங்கள்.
- விக்கிபீடியா அதிகளவில் மாணவர்கள் எடுத்தாலும் தளம் என்பதை மறவாதிர்கள்.
- நம்பத்தகுந்த ஊடகங்களிலிருந்து தகவல்களை திரட்டி எழுதுங்கள்.
- தாங்கள் தொகுக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் சான்றுகள் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
- தாங்களாகவே ஒரு தலைப்பை தேர்வுசெய்து எழுதுவது விக்கிக்கு உகந்தல்ல, மேலும் கற்பனையாகவோ, வர்ணனையாகவோ மிகைப்படுத்தப்பட்ட சொற்களாகவோ எழுதுவது நன்றல்ல என்பதை உணருங்கள்.
- தயவுகூர்ந்து மற்ற வலைப்பதிவுகளிலிருந்து படியெடுத்து (copy) சேர்க்காமல், தட்டச்சு செய்யுங்கள் அது உங்களின் எழுதும் திறனை மேம்படுத்துவதோடு பதிப்புரிமை மீறலையும் தடுக்கும்.
- ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதுவது சாலச்சிறந்தது.
- அருள்கூர்ந்து தாங்களின் மணல்தொட்டி பக்கத்தைப் பயன்படுத்தி எழுதி, பின்னர் முதன்மை பக்கத்தில் சேருங்கள்.
- தயக்கமின்றி முதல் மூன்று வரிகளை தொகுத்து பதிவிட்டு உங்கள் கணக்கில் சேர்த்திடுங்கள் பின்னர் வளர்த்தெடுத்துக்கொள்ளலாம்.
- தாங்கள் எழுதும் கட்டுரைகளில் எண்ணிக்கை முக்கியமன்று, தரமே முக்கியமென்பதில் உறுதியுடன் செயல்படுங்கள்.
- விக்கிபீடியா நடையை அறிந்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளை வாசியுங்கள்.
- புதுப்பயனரான தாங்கள் வார்ப்புருக்களை கையாள்வதில் அதிக கவனம் தேவை ஏனெனில் அது மென்பொருள் சம்பந்தப்பட்டதாகும்.
- நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் வேறொரு அல்லது, வேறுபெயரில் அதே கட்டுரை விக்கிபீடியாவில் இருக்கலாம் மேலேயுள்ள தேடல் பெட்டகத்தில் உங்கள் கட்டுரையின் தலைப்பினையிட்டு உறுதிசெய்ய மறவாதீர்கள்.
- உங்கள் கட்டுரையை நீக்காமல் இருக்க முக்கிய மூன்று முறைகளை கடைபிடிப்பது அவசியம், 1 → தக்க மேற்கோள்களை சேர்ப்பது, 2 → விக்கி நடையில் தொகுப்பது, மற்றும் 3 → தகுந்த பகுப்புகளை இணைப்பது.
- தங்கள் எழுதும் தங்கிலிஷ் சொற்களை தவிர்த்திடுங்கள் எ. கா: பஸ், கார், பைக் போன்றவைகள்.
- நீங்கள் தொடங்கிய கட்டுரையில் பகுப்புகளோ, தரவுகளோ மற்றும் வார்ப்புருக்களில் பிழை ஏற்ப்பட்டாலோ அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்திலோ, அல்லது ஒத்தாசை பக்கத்திலோ தெரிவியுங்கள் மூத்த விக்கிபீடியர்கள் உதவிக்கு வருவார்கள்.
- இயன்றவரை தொடர்ந்து பங்குபற்றுங்கள் பிழைகள் நேர்ந்திடுமோ என அஞ்சவேண்டாம்.
- தமிழ் ஆசிரியரான தாங்கள், தமிழ் விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை பிழைத்திருத்தம் செய்து தொண்டாற்ற அன்போடு அழைக்கிறோம். மறுமொழி இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ
உறவாடுகᗖᗗஉரையாடுக! : 09:40, 11 சூலை 2017 (UTC)
Invitation to Rejoin the Healthcare Translation Task Force
[தொகு]You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 2 August 2023 (UTC)