பயனர் பேச்சு:Surya Prakash.S.A./தொகுப்பு07

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கி ஊடகப் போட்டி[தொகு]

ஆலமரத்தடியில் தங்கள் கருத்தினைத் தெரிவித்தற்கு நன்றி. அனைவரது கருத்துகளையும் உள்வாங்கி போட்டிக்கான திட்ட முன்மொழிவைத் தயாரித்துள்ளேன். அது குறித்த உங்கள் கருத்துகளை - இப்பக்கத்தில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:22, 4 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]


ஊடகப் போட்டி சோதனை[தொகு]

சூர்யா,

ஊடகப் போட்டி ஏற்பாடுகள் முடிந்து விட்டன. வலைவாசலையும், பதிவேற்றத்தையும் சோதித்துப் பார்க்க வெளிச் சோதனையாளர்கள் தேவைப்படுகின்றனர் :-). எனவே வலைவாசல்:ஊடகப் போட்டி வழியாக காமன்சு போய் பதிவேற்றி ஏதேனும் முறிந்துள்ளதா, சிக்கல் உள்ளதா என்று சொதித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:23, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்[தொகு]

சூர்யா, உங்களைப் பற்றிய செய்தி டிஎன்ஏ நாளிதழில் வந்துள்ளதை ஆலமரத்தடியில் கண்டேன். உங்களைப் போன்ற மாணவர்கள் தங்கள் படிப்பு பளுவினிடையேயும் தமிழ் விக்கிக்காக ஆற்றிடும் சேவை உண்மையான தமிழ் சேவையாகும். உங்கள் பணி சிறக்கவும் மென்மேலும் பெருமைகள் சேரவும் எனது வாழ்த்துகள் !!--மணியன் 16:13, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நானும் வாழ்த்தும் நெஞ்சங்களுடன் இணைகிறேன் சூர்யா.--சஞ்சீவி சிவகுமார் 16:15, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் நன்றிகள் பல. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:19, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தயவுசெய்து கவனிக்கவும்[தொகு]

சூரியா, ஈழநிலா, பொத்துவில் அஸ்மின் எனும் இருவேறு பெயர்களை உடையவர் ஒருவரே. இரண்டும் ஏலவே ஒன்றிணைக்கப்பட்டுவிட்டது. ஆயினும் மீண்டும் கவிஞர் ஈழநிலா என்ற தலைப்பில் பக்கம் உருவாக்கப்பட்டு, அதில் கவிஞர் ஈழநிலா கவிதைகள் ஒன்றிரண்டு இணைக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான தலைப்புக்களின் உள்ளீடு தொடர்ந்து கவிஞர்கள் தத்தமது கவிதைகளுக்கென விக்கிப்பீடியாப் பக்கங்களைப் பயன்படுத்தக் காலாக அமையுமன்றோ. தயவுசெய்து இவ்விடயத்தில் கவனம் செலுத்தவும். பொத்துவில் அஸ்மின் என்ற கட்டுரை மட்டுமே போதுமென்று நினைக்கின்றேன். --கலைமகன் பைரூஸ் 02:46, 13 நவம்பர் 2011 (UTC)

I added a note in ticket, please check it. --கிரண் கோபி 05:28, 6 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

சூர்யா , தான் தொட்டிய நாயக்கர் என்ற பக்கத்தில் தகுந்த சான்றுகளுடன் சில வரலாறுகளை எழுதிவருகிறேன் , தாங்கள் பல செய்திகளை நீக்கி உள்ளீர்கள் . காரணம் சொல்ல முடியுமா ??-- raja naicker

உங்களது ஃபேஸ்புக் பக்கங்களில் இணையும்படி கோரிக்கை விடுப்பது தக்க சான்றாகக் கருதப்படமாட்டாது. அந்த தொகுப்பு சமுதாயப் பணிகள் என்ற பகுதியில் நீங்கள் அவ்வாறு எழுதியிருந்தீர்கள். மேலும், ஏற்கனவே இருந்த கூகுள் நூல்கள் மேற்கோளையும் நீக்கியிருந்தீர்கள். இது போன்ற செயல்கள் சரியானவையல்ல. எனவேதான் முன்னடுநிலையாக்கினேன். மேலதிக விளக்கம் ஏதும் தேவையிருப்பின் கேளுங்கள், சொல்கிறேன். --சூர்யபிரகாசு உரையாடுக... 15:36, 9 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
facebook இணைப்பில் சில கட்டுரைகளை கண்டேன் அதனால் தான் தானும் அவ்வாறு செய்தேன் , அதனை போடகூடாது என்று தெரியவில்லை . இனி அந்த தவறு நடக்காது . கம்பிளி நாடு போன்ற பகுதிகளையும் விளக்கி உள்ளீர்கள் , மேலும் பல பகுதிகள் நீக்கி உள்ளதே ? .. --rajanaicker
கூகுள்நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களை நீக்கியதற்கான காரணத்தை நீங்கள் தரவில்லை. எனவேதான் உங்கள் தொகுப்பு முழுவதையும் முன்னடுநிலையாக்கினேன். (Revert) கீழே இருக்கும் சுருக்கம் என்ற பெட்டியில் நீங்கள் செய்யும் தொகுப்புச் சுருக்கத்தை அளிக்கவும். இல்லையெனில், நீங்கள் எந்த நோக்கத்தோடு அதைச் செய்தீர்கள் என்பதை என்னால் அறியமுடியாது. தொகுப்புச் சுருக்கத்தை எளிமையாகப் பயன்படுத்த தொகுத்தல் சுருக்கம் உதவியான் போன்றவற்றைப் பயன்படுத்தவும். --சூர்யபிரகாசு உரையாடுக... 05:16, 10 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

இதற்காக காலத்தை விரயமாக்க வேண்டாம்[தொகு]

வணக்கம் சூரி தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமத்தின் நோக்கமாகக் குறிக்கப்பட்டுள்ள விடயமாவது ......

குழுமத்தில் சேர்ந்துள்ள பயனர்களை அவர்களுடைய பிறந்தநாள் அன்று வாழ்த்துவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும். எனவே பிறந்தநாள் கொண்டாடும் பயனர்களை அவரின் பிறந்த நாளன்று அவருக்கான பயனர் பேச்சு பக்கத்தில் சென்று வாழ்த்துவோம். விக்கிப்பீடியர் சமுதாயத்தை வலுப்படுத்துவோம்.'

நல்ல நோக்கம்

ஆனால் இது நடைபெறுகின்றதா?

எனென்றால்............

பிறந்தநாள் குழுமத்தில் ஓர் அங்கத்தவனான எனது பிறந்த நாள் நவம்பர் 11

யார் வாழ்த்தினார்கள் ....?

நிறைவேற்ற முடியாததை தவிர்ப்போம்.
இதற்காக காலத்தை விரயமாக்க வேண்டாம்--P.M.Puniyameen 16:42, 15 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
ம்ம். கேட்கிறேன். இதுவும் பிற இடங்களைப் போலவே ஒரு தன்னார்வலப் பங்களிப்புதான். அனைவரும் இதில் வாழ்த்துபெறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனக்குத் தெரிந்து நான், ஒரு குறிப்பிட்ட மாதத்தை அவ்வப்போது பார்த்து வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இத்திட்டம் மிக நீண்டகாலமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து வந்திருக்கிறது. யாரும் பராமரிக்க ஆளில்லாததால், தொடர்பாக ஏற்படும் ஐயங்களைக் களையவே என் பெயரை அங்கு கொடுத்துள்ளேன். மற்றபடி, திட்டத்தை நான் எடுத்து நடத்தவோ நான் மட்டும்தான் அனைவருக்கும் வாழ்த்து சொல்வதோ இல்லை. தொடர்ந்து 24×7 எனப் பங்களிப்பவர் மட்டுமே இதனைத் தொடர்ந்து கவனிக்க முடியும். எனவே, திட்டம் இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்த்து பெறவில்லை என்பதற்காகத் திட்டத்தை நிறுத்த வேண்டாம். (ஆங்கில விக்கிப்பீடியாவிலும் நான் இத்திட்டத்தில் பதிந்துள்ளேன்; அங்கும் நிலை இதேதான். இது இறுக்கத்தைக் களைய உதவும் அவ்வளவுதான்.) திட்டம் இருக்கட்டும். --சூர்யபிரகாசு உரையாடுக... 17:01, 15 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
ம்ம்...நல்லது சூரி, பெயருக்காக ஒரு திட்டம் தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழு என வைத்துக்கொள்வோமே. ஏனெனில் நாம் அதிகதிகமாக திட்டமிடுபவர்கள் அல்லவா?--P.M.Puniyameen 17:14, 15 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
பெயருக்காகவெல்லாம் இல்லை. முன்னர் இத்திட்டம் நன்றாக செயல்பட்டு வந்ததே. ஆள்தட்டுப்பாடால் யாருமின்றி இருக்கிறது. :) ஒரு குறிப்பிட்ட காரணம்பற்றியே நீங்கள் கூட தற்போது இதனை நினைவில் கொண்டு கூறியுள்ளீர்கள். :) எனவே, இது பெயருக்காக அன்று. மிகவும் குறைவான ஆள்பலம் உள்ள திட்டம். மேலும், மிகவும் உறக்கநிலையிலுள்ள (inactive) திட்டமும் கூட. ஆனால், இதில் எந்த விதிகளும் கிடையா. யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வாழ்த்து கூறலாம். :) --சூர்யபிரகாசு உரையாடுக... 17:35, 15 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

காப்பதற்கான காரணம் என்ன[தொகு]

நீங்கள் படத் தெரிவுகளின் தொகுப்புக்களை காப்புப் போட்டு வருகிறீர்கள். அதற்கான காரணம் என்ன? --Natkeeran 20:37, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

அவை, குறுந்தட்டுத் திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுத் தேவையான உரைத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வழக்கமான முறைப்படி புகுபதியாதவர்கள் தொகுக்கமுடியாதபடி பூட்டப்படுகின்றன. திட்டப்பக்கம் பார்க்கவும் :) --சூர்யபிரகாசு உரையாடுக... 20:42, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பங்களிப்பு தேவை[தொகு]

அன்புள்ள சூர்யா! நீங்கள் தமிழ் வழிப் பொறியியல் பயிலும் மாணவர் என்ற முறையில் தங்களது பங்களிப்பை இக்கட்டுரையில் எதிர்ப்பார்க்கிறேன். கட்டுரை துவங்கிவேட்டேன். தங்களால் இயன்ற மேலதிக விவரங்களைச் சேர்க்கவும்.--ஏர்னஸ்டோ பாலாஜி 15:05, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒத்தாசைப்பக்கத்தில் இருந்து[தொகு]

நண்பர் சூர்யபிரகாசு அவர்களுக்கு,

 	+ 	

அன்பனின் வணக்கம். தாங்கள் வெளியிட்டிருந்த புகைப்படங்களை பார்த்தேன், மகிழ்ச்சி, நீண்ட நாட்களாக தங்களைத் தொடர்புகொள்ள இயலவில்லை, கட்சி, தொழிற்சங்க வேலைகள் காரணமாக காலம் ஒதுக்க இயலவில்லை, மன்னிக்கவும்,28 டிசம்பர் இரவு தங்களை மொபைலில் தொடர்பு கொண்டேன், தாங்கள் பதிலளிக்கவில்லை, நன்றி, நேரமிருப்பின் தொடர்பு கொள்ளவும்,(பயனரர் அன்பன்.(சேலம் நாராயணன்)