பயனர் பேச்சு:Manavai

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Manavai!

வாருங்கள் Manavai, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--குறும்பன் 19:04, 14 மே 2010 (UTC)[பதிலளி]

இரத்தசோகை

பொருளடக்கம்

                இரத்தசோகை    (Anemia)  என்ற சொல், உடலில் உள்ள இரத்தத்தில்  ஏற்படும் ஒரு குறைபாடை குறிக்கிறது. உடலில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையில் ஏற்டுகின்ற குறைபடையும்  அது குறிக்கும்  , அல்லது குருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு சிவப்பூட்டும் பொருளான  செங்குருதியணுவின்  (Hemoglobin) ( குருதிச் சிவப்பணு நிருமி ), (செந்நிறக் குருதியணு உடலியின் வண்ணப்பொருள்) அளவில் ஏற்படும் குறைவையும் இந்த சொல் குறிப்பதாக உள்ளது.    இது இரும்புச்சத்தினால் ஆனது , மேலும் இவை இரண்டும் இல்லாமல்,பலவேறு காரணங்களால் ஹீமோக்ளோபின் செயல்பாடுகளில் ஏற்படுகின்ற குறைகளையும் இரத்தசோகை  என்னும் இச்சொல் குறிக்கும்.

சிவப்பு அணுக்களின் உள்பகுதியில் ஹீமோக்ளோபின் உள்ளது. இதன் மூலமாகத்தான் சிவப்பு அணுக்கள் தங்களுடைய பிரதான செயல்பாடான பிராணவாயுவை நுரைஈரலில் இருந்து திசுக்களுக்கு ( இழைமம்) (Tissues) எடுத்துச்செல்கின்றன. இழைமம் என்ற சொல் உடலின் ஒரு பகுதியாக அல்லது படலமாக அமைந்துள்ள உயிரணுக்களின் திரட்சியை குறிக்கும். இரத்தசோகை உடலில் ஏற்படும் பொழுது, அத்தியாவசிய பொருளான பிராணவாயுவின் பரிமாற்றத்தில் குறைவு ஏற்படுவதால் , உடலின் அணைத்து பகுதிகளும் பாதிக்கபடுகின்றன.

             இரத்தத்தில் காணப்படுகின்ற அனைத்து ஒழுங்கின்மையிலும்,  இரத்தசோகை மிகவும் வழக்கமானதாகும்.  இரத்தசோகையில் பல வகைகள் உண்டு. பலவேறு காரணங்களால் அவை ஏற்படுகின்றன.  இரத்தசோகையை பலவகையிலும் வகைப்படுத்தலாம். சிவப்பு அணுக்களின் உருவத்தில் காணப்படுகின்ற மாற்றத்தின் அடிப்படையிலும்,  இரத்தசோகை ஏற்படுகின்ற காரணத்தின்  அடிப்படையிலும் மேலும் பல வகைகளிலும்   இரத்தசோகையை  வகைப்படுத்தலாம். அடிப்படையில் இரத்தசோகை  ஏற்படுவதற்கான காரணங்களை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்க முடியும், (௧) அதிக்கப்படியான இரத்த இழப்பு (குருதிப்போக்கின் காரணமாக) , (2) அதிக்கப்படியான சிவப்பு அணுக்களின் அழிவு ( Hemolysis)  ,(3) குறைவான சிவப்பு அணுக்களின் உற்பத்தி , என்பனவாகும் அவை. 
           இரத்தசோகை உள்ளவர்களிடம் , இரத்தசோகையினாலோ  அல்லது இரத்தசோகை  ஏற்பட காரணமான நோயினாலோ பல  நோய்க்குறி (signs)  (ஒரு நோய் பீடித்திருப்பதை குறிக்கும் வெளிப்படையான அறிகுறி ) மற்றும்  பல   உணர்குறி (Symptoms)  (நோயினை உணர்த்தும் அறிகுறிகள்)   இருக்கலாம் , சில சமயங்களில் எந்தவித நோய்க்குறியும் இல்லாமலும் இருக்கலாம் . 
                  மனித உடலில்  5 முதல்  6 லிட்டர் வரையிலான இரத்தம் உள்ளது. இதில் 100 மில்லி லிட்டர் இரத்தம் சுமார் 20  மில்லி லிட்டர் பிராணவாயுவை நுரையீரலில்  இருந்து உடலின் அணைத்து பகுதிகளுக்கும் எடுத்துச்செல்கிறது. உடல்  உறுப்புகளின் தேவைகளை பூர்த்திசெய்து மீண்டும் இதயத்தை வந்தடையும் பொழுது ௦100 மில்லி லிட்டர் இரத்தம் சுமார் 15  மில்லி லிட்டர் பிராணவாயுவை  கொண்டதாக இருக்கும் , அதாவது 100   மில்லி லிட்டர் இரத்தம்   5    மில்லி லிட்டர்     பிராணவாயுவை   உடல் உறுப்புகளுக்கு அளிக்கிறது. இந்த வகையில் கணக்கிடும் பொழுது  முழு உடலும்  ஒரு நிமிடத்திற்கு 250 மில்லி லிட்டர் பிராணவாயுவை  பயன்படுத்துகின்றன. இரத்தசோகை உள்ள நபர்களுக்கு பிராணவாயு பரிமாற்ற தன்மையில் குறைபாடு ஏற்படுவதால் ,அவர்களின் உடலில் பலவேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, இதயம் ஒரு  முறை துடிக்கும் பொழுது சுமாராக 70 மில்லி லிட்டர்  இரத்தத்தை  தனது வலது உட் குழிந்த பகுதியில் (Left Ventricle) இருந்து வெளியேற்றுகிறது. ஒரு நிமிடத்தில் சுமார் 70 முறை இதயம் துடிப்பதால் 70 x 70 = 4900 , சுமாராக 5000மில்லி லிட்டர் இரத்தம் இதயத்தை விட்டு பிராணவாயு கலக்கப்பட்ட சுத்தமான இரத்தமாக வெளியேற்றப்படுகிறது.  100     மில்லி லிட்டர் இரத்தம் ,  அது எடுத்துச்செல்லவேண்டிய   20 மில்லி லிட்டர் பிராணவாயுவை இரத்தசோகை காரணமாக எடுத்துச்செல்லவில்லை என்றால்,  இதயத்தின் அருகில் உள்ள சில சிறப்பு அம்சங்களை தனது சுவற்றினுள் கொண்ட இரத்தநாளங்கள்   அதனை உணர்ந்து உடனடியாக மூளைக்கு தெரிவிக்கிறது ,அதன் விளைவாக இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் இதயத்துடிப்பின்  அழுத்தமும்   அதிகரிக்கும். இதன் விளைவாக  மார்புப் படபடப்பு (PALPITATION) இதயத்தில் ஏற்படவும் வாய்ப்புண்டு. மருத்துவர் இரத்தசோகை உள்ள நோயாளியை காணுகையில் பல  அறிகுறிகளை  உடலில் காண்பார். 
                வெளிறிய தோற்றம், விரல் நகத்தில் மாறுதல்கள், மற்றும் அதிக அளவில் சிவப்பு அணுக்கள் உடைவதால் மஞ்சட் காமாலை நோய் ,சரியான அளவில் பிராணவாயு கிடைக்காததால் கால்களில் அழற்சிப்புண் (ULCER) போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.இதயத்தின் சுற்றோட்டத்தில்  வேகம்  ஏற்படுவதால் இதயத்தின்  அளவு பெரிதாக்கம் அடைகிறது.  இதுவே இதயத்திற்கு மிகப்பெரிய சவாலாகவும் ஆபத்தாகவும் முடிய வாய்ப்பு உண்டு.மூளையின் செயல்பாடுகள் பிராணவாயுவை மிகவும் சார்ந்துள்ள காரணத்தால்,  இரத்தசோகை உள்ளவர்களின்  மூளையின் செயல்பாடுகளில் நிறைய குறைகள் ஏற்படுகின்றன. 

வியாதி நிர்ணயம் செய்வது எவ்வாறு ?

          பொதுவாக மருத்துவர்கள் இரத்ததின் முழு அமைப்புதிரன்  பற்றிய ஆய்வினை செய்வார்கள், இதன் விளைவாக சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, ஹீமோக்ளோபின் அளவு , சிவப்பு அணுக்களின் அளவு,ஆகிய விபரங்களை கண்டறிவார்கள்.  
உலக சுகாதார மையும் கணித்துள்ள  இரத்தசோகையை  உறுதி செய்யும் அளவுகோல் (1 g/dL = 0.6206 mmol/L)   
வயது அல்லது பாலியல்  

தொகுதி

 Hb threshold (g/dl) Hb threshold (mmol/l)
குழந்தைகள்  (0.5–5.0 yrs)
11.0 6.8
குழந்தைகள்  (5–12 yrs)
 11.5 7.1
குழந்தைகள்  (12–15 yrs) 12.0 7.4

கர்ப்பவதியாக இல்லாத பெண்கள் (>15yrs)

 12.0 7.4
கர்ப்பவதியான பெண்கள் 
 11.0 6.8
ஆண்கள்  (>15yrs 13.0 8.1


இரத்தசோகையை வகைப்படுத்தும் முறை

                  உற்பத்திஅளவு  / அழிகின்ற அளவு / இழக்கின்ற வேகம் , அதன் அடிப்படையில் இரத்தசோகையை மூன்று வகையில் பிரிக்கலாம்."இயக்கம் சார்ந்த" வகையில் இரத்தசோகையின் வகையை நெருங்குவதே சரியான முறை என்று அறிஞர்கள் பலர் நம்புகிறார்கள். இம்முறை சார்ந்து இரத்தசோகையின் வகையை பிரிப்பதற்கு பலவேறு  விபரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமானது ,இரத்ததில் உள்ள ஒரு வகையான சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை.    சிவப்பணுக்களின் பரிணாமத்தில் சிவப்பு அணுக்கள் முழு முதிர்ச்சியை  அடைவதற்கு சற்று முன்னர் உள்ள  முந்திய  நிலையைத்தான் Reticulocyte என்று   அழைக்கபடுகிறது. இந்த வகையான  அணுக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இரத்தசோகையின் தன்மையை உணர முடியும்.
ஒரு வகையான திட்டம் சார்ந்த அணுகுமுறையை இனி காண்போம்.              
       இரத்தசோகை      


    Reticulocyte Production Index 

உற்பத்தியாகும் சூசகம் - சிவப்பணுக்களின் குறைவான உற்பத்தி Reticulocyte Production Index இரத்தசோகைக்கு தக்க சிவப்பணுக்களின் response = அதிகமான சிவப்பணுக்களின் அழிவு அல்லது இரத்த இழப்பு அனால் சிவப்பணுக்களின் உற்பத்தியில் எந்த வித மாற்றமுமில்லை


சிவப்பு அணுக்களின் உற்பத்தியில் குறைபாடு  மாறுபாடான  MCV: சிவப்பு அணுக்களின் அதிகப்படியான அழிவு , மற்றும் உற்பத்தியில் நாள்பட்ட குறைபாடு  சரியான அளவு MCV= திடீரென்ற acute  அதிகப்படியான சிவப்பு அணுக்களின் அழிவு அல்லது இழப்பு , அதனால்  

எலும்புமச்சையால் ( Bone Marow) உடனடியாக தனது செயல் பட்டினி பாட்டினை அதிகரிக்க முடியாத நிலை


Macrocytic anemia (MCV>100) Normocytic anemia (80<MCV<100)  Microcytic anemia (MCV<80)   


                  சிவப்பணுக்களின் அளவை  வைத்து இரத்தசோகையை வகைப்படுத்தும் முறை (Morphological approach) ; சிவப்பணுக்களின் அளவு அளவை  MCV (Mean Corpuscular Volume) என்று பிரிக்க முடியும். சிவப்பணுக்கள் இயல்பான அளவை விட சிறியதாக இருக்குமாயின்  (80 femtolitre விட குறைவாக ), இந்த வகை இரத்தசோகையை   microcytic என அழைக்கமுடியும், சரியான   கனஅளவில் இருந்தால் (80–100 fl) அதனை normocytic  இரத்தசோகை என அழைக்கமுடியும் மற்றும் மிக அதிகமான கனஅளவில் இருந்தால் (over 100 fl), அதனை macrocytic இரத்தசோகை என அழைக்கமுடியும். இவ்வாறு அலசுவதன் மூலம் இரத்தசோகை ஏற்பட்ட காரணத்தை எளிதில் உணரமுடியும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Manavai&oldid=524453" இலிருந்து மீள்விக்கப்பட்டது