பயனர் பேச்சு:Kurumban/தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: வளர்ச்சியும் வாய்ப்புக்களும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறும்பன், நான் தமிழ் விக்கிப்பீடியாவில் செயற்படத் தொடங்கியது 20 நவம்பர் 2003ல் அல்ல, அது 6 நவம்பர் 2003. முதற் பக்கத்தின் வரலாற்றுப் பக்கத்தில் 30 செப்டெம்பர் 2003ல் இருக்கும் பதிவு தவிர, 6 நவம்பரில் தொடங்கும் 213.42.2 xxx, 195.229.xxx, acX.emirates.ae போன்ற IDகளும், Architecture என்னும் பயனர் பெயரும் என்னுடையவை தான். கட்டுரையில் இருப்பது போல் 20 நவம்பர் 2003க்கு முன்னர் வேறு எவரும் இடைமுக வேலைகள் எதையும் செய்யவில்லை. ---மயூரநாதன் (பேச்சு) 20:04, 13 செப்டம்பர் 2013 (UTC)

சில பரிந்துரைகள்[தொகு]

பயனர்:Kalaiarasy/தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது என்ற கலையரசி அவர்களின் கட்டுரையிலிருந்து துவங்கம் மற்றும் வளர்ச்சி பற்றிய செய்திகளை எடுத்தாளலாம். தற்போது விக்கிப்பீடியாவில் பங்களித்தவர்கள் பற்றி மட்டுமே வளர்ச்சி பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையின் எண்ணிக்கை, தரம், விக்கித்திட்டங்கள், செயல்படுத்தப்பட்டுள்ள விக்கிச் செய்திகள், முக்கிய கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா பற்றிய குறிப்புகள் போன்றவை இடம் பெறுதல் வேண்டும். அப்போதுதான் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி சமநிலையை எட்டும்.

திருத்தம் - முதல் பத்தியில்

\\தமிழ் விக்கிப்பீடியாக்கு செப்டம்பர் 2013 வந்தால் பத்து வயது ஆகிறது.\\ \\ தமிழ் விக்கிப்பீடியா செப்டம்பர் 2003ல் தொடங்கப்பட்டது.\\ முதல் பத்தியில் இந்த இரு வரிகளையும் ஒன்றாக இணைத்து செப்டம்பர் 2003ல் துவங்கப்பட்ட தமிழ் விக்கப்பீடியா தனது பத்தாண்டுகளை இம்மாதம் கொண்டாடுகிறது என்பதைப் போன்று மாற்ற வேண்டுகிறேன்.

பங்களிப்பு இல்லாத நாடுகள், பரப்புரை, தடை ஆகிய பகுதிகள் இங்கு அவசியமா என்று அலோசிக்க வேண்டுகிறேன்.
வாய்ப்பு பகுதியில் பல்துறை அறிஞர்களுக்கு எவ்வாறு விக்கிப்பீடியா வாய்ப்பினைத் தருகிறது என்பதையும், கலைக்களஞ்சிய சொற்களுக்கு எவ்வாறு இங்கு உதவி தரப்படுகிறது என்பதையும், விக்கித்திட்டங்களின் மூலம் துறைசார் வல்லுனர்கள் எவ்வாறு ஒன்றினைந்து செயல்படுகின்றார்கள் என்பதையும் கூற வேண்டுகிறேன்.

நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:34, 19 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரை[தொகு]

கட்டுரைக்கு நன்றி குறும்பன். உங்கள் கட்டுரையின் பல தகவல்கள் சுந்தரின் கட்டுரையோடு இணைக்கப்படும். தனியாக வெளியிட விரிவாக அமையவில்லை என்று என்று நினைக்கிறென். தயந்து குறையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். --Natkeeran (பேச்சு) 15:58, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆம் நட்கீரன் என் கட்டுரை விரிவாக இல்லை. என் கட்டுரையில் இருந்து சில தகவல்களை அடுத்த கட்டுரையில் இணைப்பது பொருத்தமே. இதில் குறைபட ஒன்றும் இல்லை. --குறும்பன் (பேச்சு) 19:12, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]