பயனர் பேச்சு:Deadrat/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல தொடக்கம்[தொகு]

தமிழ் விக்கிக்கு நல்வரவு ஜெயபாரத். 1929 வால் வீதி வீழ்ச்சி கட்டுரை நல்ல தொடக்கம். உங்களின் மொழி நடை நன்றாகவே உள்ளது. மேற்கோள்கள் சேர்க்கப்பட்டால் தரமான கட்டுரையாக வளர்ச்சி பெறும். தயங்காமல் எழுதுங்கள். விக்கியில் உதவிகள் தேவைப்படின் கேக்கவும், இயன்றவரை உதவுவோம். --Natkeeran (பேச்சு) 18:04, 27 மே 2012 (UTC)[பதிலளி]

ஒரு வேண்டுகோள்[தொகு]

வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள 1929 வால் வீதி வீழ்ச்சி கட்டுரை, உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றது. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:56, 29 மே 2012 (UTC)[பதிலளி]

காரணம்[தொகு]

வனக்கம் ஜெயபாரத். புதுப்பயனர் வார்ப்புருவை நீக்கியதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:38, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

தங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ளவற்றை நீக்குவதற்கான எல்லா உரிமைகளும் பயனர்களுக்கு உண்டாகையால் ஜெயபாரத் அதை நீக்கி விட்டு தனக்குப் பிடித்த வரவேற்புச் செய்தியை இட்டிருக்கிறார் என எண்ணுகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:43, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]
தவறிருந்தால் மன்னிக்கவும். புதுப்பயனர் வார்ப்புருவை நீக்கியதற்காக காரணம் எதுவும் இல்லை. :P -- Jayabharat (பேச்சு) 14:24, 4 சூன் 2012 (UTC)[பதிலளி]

நன்றி ஜெயபாரத். மன்னிப்பு கேட்கத் தேவை எதுவும் இல்லை. :) இப்பக்கத்தில் பேச்சு பக்கம் வெற்று என்ற தலைப்பின் கீழுள்ள உரையாடலைக் காணவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:38, 4 சூன் 2012 (UTC)[பதிலளி]

நன்றி பார்வதிஸ்ரீ . இனி எனது பயனர் பக்கத்தில் உள்ள தகவல்களை நீக்காமல் பரணில் ஏற்றுகிறேன்.

புதுக் கட்டுரைகள் குறித்து[தொகு]

வணக்கம். நீங்கள் நிறைய புதிய கட்டுரைகளை (அலறல் (ஓவியம்)‎‎, கூட்டு நிறுவனம் உள்ளிட்டவை) தொடங்கி ஒரு வரியில் நிறுத்தி விடுகிறீர்கள், நீங்கள் பயிற்சி செய்ய விரும்பினால் மணற்தொட்டியை பயன்படுத்தலாம். கட்டுரை ஓரளவு விரிவடைந்த பின் முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்தலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:35, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]

சரி. நீங்கள் கூறிய படியே செய்கிறேன், திரு தினேஷ்குமார் பொன்னுசாமி --Jayabharat (பேச்சு) 11:40, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]
ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி, Jayabharat! மேலும் ஒரு தகவல், திரு-வெல்லாம் தேவையில்லை. விக்கித்திட்டங்களில் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைப்பதே வழக்கம், அதையே பின்பற்றுங்கள் :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:24, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]


பதக்கம்[தொகு]

சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம்

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


வணக்கம் ஜெயபாரத், விக்கியில் பதக்கங்களை தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வதில்லை. பிறர் தான் வழங்குவர். :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:20, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]

பிறந்த நாட்குழுமம்[தொகு]

வணக்கம்! Deadrat/தொகுப்பு 1 அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 10:38, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]