கூட்டு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டு நிறுவனம் என்பது அந்தந்த நாட்டின் சட்டங்களின் படி சில சிறப்புச் சலுகைகள் மற்றும் பொறுப்புகள் கொண்ட ஒர் அமைப்பு ஆகும். இவற்றில் பல வகை உண்டு. பெரும்பாலும் வணிகப் பயன்பாட்டிற்கு தொடங்கினாலும் சில அரசு அமைப்புகளும் இதன் கீழ் அடங்கும். வரையறுக்கபட்ட பொறுப்பு கொண்ட அமைப்பான இதில் கூட்டு நிறுவனம் தோல்வியுற்றால் அதன் தொழிலாளிகளும் முதலீட்டாளர்களும் அதற்குப் பொறுப்பாக மாட்டார்கள்.

இயல்பான மனிதர்கள் அல்ல என்றாலும் கூட்டு நிறுவனங்கள் இயல்பான மனிதர்கள் போன்ற உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சட்டம் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_நிறுவனம்&oldid=3607671" இலிருந்து மீள்விக்கப்பட்டது