பயனர் பேச்சு:ஜ.சிவகுரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், ஜ.சிவகுரு, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மதனாகரன் 02:12, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், ஜ.சிவகுரு!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:24, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நூல்களின் குறிப்பிடத்தக்கமை[தொகு]

நீங்கள் நூல்கள் பற்றி எழுதிவரும் கட்டுரைகள் இந்த இந்த வழிகாட்டலுக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளனவா என்பதைக் கவனியுங்கள். குறிப்பான, புத்தகம் தன்னகத்தே அல்லாமல், சுயாதீனமான பிரசுரிக்கப்பட்டதும் சாதாரணமற்றதுமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலகங்களில் கூறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். என்பதன்படி நீங்கள் எழுதிய நூல்கள் அமையவில்லை. யாழ் நங்கை (புதினம்) பற்றிய கட்டுரைக்கு "யாழ் நங்கை", நூல், (முதல் பதிப்பு 2013; யாழினி பதிப்பகம், புதிய எண் 18, அம்பர்சன் தெரு, பிராட்வே, சென்னை என்று தன்னகத்தே உசாத்துணை கொடுக்க முடியாது. https://www.goodreads.com/book/show/26096860 என்ற வியாபரச் சுட்டிகளும் உசாத்துணையாகாது. தயவுசெய்து விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி கட்டுரைகளை உருவாக்கவும். அத்தோடு ஏற்கெனவே எழுதப்பட்டவற்றிற்கு முறையான உசாத்துணை வழங்கவும். தவறும்பட்சத்தில் கட்டுரைகள் நீக்கப்படலாம். நன்றி. --AntanO 04:22, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

வணக்கம், AntanO. தங்கள் மூலமாக நூல் பற்றிய பதிவுகளை பதியவேண்டிய முறையினை அறிந்தேன். தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத, நான் படித்த, நூல்களை பிறர் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறாக நான் பதிய ஆரம்பித்துள்ளேன். தங்களின் கருத்து எனக்கு மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது. தாங்கள் சுட்டிய நூலை பொருத்தவரை என்னால் முடிந்த அளவு மேற்கோள்களை தேடிப்பார்த்தும் உரிய சான்று அரிதாக இருந்த நிலையில் இந்த அளவிலேயே என்னால் பதிய முடிந்தது. மேற்கொண்டு இந்நூல் தொடர்பாக உரிய சான்றை தேடி வருகிறேன். அவை கிடைத்த பின்பு இணைப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறான ஒரு முயற்சியை நான் மேற்கொள்ள தங்களுடைய அறிவுரை பெரும் பயனாக இருந்தது என்பதை தெரிவிப்பதில் மகிழ்கிறேன். தங்களை போன்றோரின் அறிவுரைகளுடன் விக்கிபீடியாவில் தொடர்ந்து பங்களிக்க முயற்சிசெய்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --ஜ.சிவகுரு (பேச்சு) 06:17, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

படிம அளவு[தொகு]

வணக்கம், நீங்கள் பதிவேற்றும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் (எ.கா: நூல் அட்டை) குறைந்த அளவினைக் கொண்டிருக்க வேண்டும். நூல் அட்டைகள் 250 × 400 அளவு உள்ளதாக இருக்க வேண்டுமென்ற பரிந்துரை உள்ளது (பார்க்க: en:Wikipedia:Non-free content). ஆனால், நீங்கள் பதிவேற்றும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் அதிக அளவுள்ளதாகக் காணப்படுகிறது. எ.கா: இது 1,440 × 2,104 அளவினைக் (Seppupattayam.jpg) கொண்டுள்ளது. இது நியாயப் பயன்பாடாகாது. எனவே இவ்வாறான படிமங்களின் அளவைக் குறைத்து மீள் பதிவேற்றுங்கள். முன்னைய படிமங்கள் நீக்கப்படலாம். நன்றி. --AntanO 17:09, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

வணக்கம். தங்களது அறிவுரைப்படியே நான் பதிந்த அனைத்து புகைப்படங்களையும் 250 × 400 அளவில் மாற்றிவிடுகிறேன் என்று உறுதி கூறுகிறேன். பதியவேண்டும் என்ற ஆவல் காரணமாக இந்த அளவு நிலையினை கவனிக்கத் தவறிவிட்டேன். தங்களது கருத்துக்கு நன்றி. --ஜ.சிவகுரு (பேச்சு) 16:49, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஜ.சிவகுரு&oldid=3909010" இலிருந்து மீள்விக்கப்பட்டது